அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,10:44:48 PM
-தமிழில் V.கோபி
இந்த ஆண்டு கேரளாவில் பெய்துவரும் கடுமையான பருவமழையின் தீவிரத்தை பெரும்பாலான இந்தியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘சாதாரன’ வருடங்களிலேயே மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிகளவு மழை பொழியும். சராசரியாக ஒரு வருடத்திற்கு 3000மிமீ மழை கேரளாவில் பெய்யும் (மிகச்சரியாக சொன்னால் 2924.3மிமீ) இதன் காரணமாகவே செயற்கைகோள் புகைப்படத்தில் கேரள மாநிலம் பச்சை பசேலென தெரிகிறது.
இதற்கு நேர்மாறாக, அருகிலுள்ள தமிழ்நாட்டில் 912.4மிமீ, கர்நாடகாவில் 1147.1மிமீ, ஆந்திராவில் 890மிமீ, தெலுங்கானாவில் 942.6மிமீ மழை மட்டுமே வருடத்திற்கு பொழிகிறது. வட இந்தியாவை கணக்கில் எடுத்து கொண்டால், ஹர்யானாவில் 554.7மிமீ, டெல்லியில் 747.1மிமீ, உத்தரபிரதேசத்தில் 965.3 மிமீ, மேற்கு வங்காளத்தில் 1795.8மிமீ, அஸ்ஸாமில் 2296.8மிமீ, மகராஷ்டிராவில் 1151.1மிமீ மற்றும் மத்திய பிரதேசத்தில் 1048.4மிமீ மழை பெய்கிறது.
இதுவே ‘இயல்பான’ மழை அளவு (கடந்த 50 வருட சராசரி)
ஆனால் இந்த வருடம், சென்ற ஜூன் 1ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி வரை மட்டும், வழக்கத்தை விட 30% அதிக மழையை கேரளா பெற்றுள்ளது. இந்த காலத்தில் இயல்பான மழை அளவு 1606.5மிமீ மட்டுமே. ஆனால் தற்போது 2086.8மிமீ மழை பெய்துள்ளது. 1924ம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவிற்கு கடுமையான மழையையும் வெள்ளத்தையும் கேரளா சந்தித்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் 21%, திருவணந்தபுரம் மாவட்டத்தில் 37%, கோட்டயம் மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 41% என வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்துள்ளது.
முக்கிய அணைகளான – இடுக்கி – செறுதோனி – குளமாவு மற்றும் முல்லை பெரியார் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் மட்டுமே வழக்கத்தை விட 70% அதிகளவில் மழை பெய்துள்ளது. இதனால் எதிர்பார்த்தது போலவே நிலச்சரிவும் பல இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. தற்போதைய நிலமையில் கேரள மாநிலம் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 39 அணைகளில் 35 அணைகளில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அபாயகட்டமான ‘சிகப்பு’ நிற எச்சரிக்கை 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நூற்றுகும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பல ஆயிர மக்கள் நிவாரன முகாம்களில் வசித்து வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வெள்ள நீர் இன்னும் வடியாததாலும், மக்கள் தங்கள் வசிப்பிடத்தை காலி செய்து வருகிறார்கள்.
ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பினால் கேரள முதல்வரின் இடர்பாடு நிவாரன நிதிக்கு உதவி தொகையை அனுப்பி வைக்கலாம்.
A/C NO: 67319948232
BANK: STATE BANK OF INDIA
BRANCH: CITY BRANCH, THIRUVANANTHAPURAM
IFS CODE: SBIN0070028
உதவி தொகையை இணையதளத்தின் மூலமாகவும் அனுப்பலாம். இணையதள முகவரி,
https://donation.cmdrf.kerala.gov.in
நன்றி DOOL NEWS
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments