கொழுப்பெனும் நண்பன் நிறைவு

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் நிறைவு

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

பேலியோ உணவு முறை குறித்து எழுதிய "கொழுப்பெனும் நண்பன்"  தொடரை  இன்றுடன் நிறைவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் இந்த தொடரை எழுத தொடங்கியதன் நோக்கம், நான் கற்றறிந்த ஒரு உணவு முறை மாற்றத்தை என்னைப் போன்ற பலருக்கும் சொல்லி அவர்களும் தங்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய வாய்ப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினேன். இந்த கட்டுரை தொடரை வெளியிட்ட "கருப்பு" மின்னிதழை நிர்வகிக்கும் சகோதரர்  அருண் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்

இந்த கட்டுரையில் நான் கடைபிடிக்கும் உணவு முறையான பேலியோ எனும் குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு தங்களை அழைக்கிறேன் . 

பேலியோ குறித்த மிக அடிப்படையான விசயங்களை இக் கட்டுரையில் பகிர்கிறேன்

பேலியோ என்றால் என்ன??

மனித சமுதாயம் படைக்கப்பட்டு சுமார் 26 லட்சம் வருடங்கள் ஆகின்றன என்று அறிவியில் கூறுகிறது  அதே அறிவியல் தான், தானியங்கள் , பயறு வகைகள் போன்றவை விளைவிக்க தேவைப்படும் விவசாயம் தோன்றி 10,000 வருடங்கள் தான் ஆகின்றன என்று கூறுகிறது 

இந்த 10,000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் அல்லது கற்காலம் என்று கூறுகிறோம் . 

இதைத்தான் ஆங்கிலத்தில் "பேலியோலித்திக் எரா" என்று கூறுகிறோம். 

பேலியோ என்றால் பழைய 
லித்திக் எரா என்றால் கற்காலம்
என்று பொருள்

ஆகவே, 10,000 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த நம் முப்பாட்டன்களுக்கு நாம் உண்ணும் அரிசி, கோதுமை , சாமை, கேள்வரகு, கம்பு, சோளம்
எதுவும் உண்ணக்கிடைக்க வில்லை

அவர்கள் உண்டு உயிர் வாழ்ந்தது வேட்டையாடி கிடைத்த மாமிசம், பருவநிலைக்கு ஏற்றவாறு பழுக்கும் பழங்கள் , மரக் கொட்டைகள் , காய்கறிகள் இவை தான். 

இவற்றை உண்டு அக்கால மனிதன் பெரிய யானைகளான மேமோத் வகை மிருகங்களையும் சிங்கம் புலி போன்றவற்றுடன் போராடி வாழ்ந்துள்ளான். 

ஆனால் இன்று நாம் தினமும் வாழ இத்தனை போராட்டங்களை நிகழ்த்த தேவையில்லை 
ஆனால் பல நோய்களும் நம்மை தேடி வருகின்றன. 

ஏன்???

நமது ஜீன்களுக்கும் நம் உடல் இயங்குவியலுக்கும் ஒத்துவராத உணவு முறையை நாம் அதிகமதிகமாக பின்பற்றுவதால் தான் இந்த பிரச்சனை 

மனித இனம் படைக்கப்பட்ட நொடியில் இருந்து இன்று பிறக்கும் குழந்தை வரை நமக்கான டி.என்.ஏ எனும் கூறு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வருகிறது.

இந்த டி.என்.ஏ வை ஆராய்ச்சி செய்ததில் அது 99.7 சதவிகிதம் நமது கற்கால முப்பாட்டன்களை ஒத்து உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

நமது அடிப்படை ஜீன்களை இப்படி வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம்??

அவர்கள் உண்ட உணவு முறைக்கு நேர்மாறான உணவு முறையை கடைபிடிக்கிறோம். 

இது தவறு. 

மேலும், கடந்த அரை நூற்றாண்டாய் கொழுப்பின் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட பல பொய்பிரச்சாரங்களை நம்பி நாம் கொழுப்பு உண்பதை சிறிது காலம். நிறுத்தி வைத்தோம். 

ஆனால் இந்த 50 ஆண்டுகளில். தான். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவும், உடல் பருமனும், இதய நோயும், சிறுநீரக பாதிப்பும் அதிகரித்துள்ளது. 

இதிலிருந்து நாம் உணர்வது என்ன??

நாம் இயற்கையாக அதிகமாக உண்ண படைக்கப்பட்டது கொழுப்புணவைத்தான் அதை விடுத்த மாவுச்சத்தை அதிகம் எடுத்ததால் வந்த தீய விளைவுகளைத் தான் நாம் சந்திக்கிறோம். 

இதை மாற்ற நமக்கு கிடைத்த வழி தான் பேலியோ 

ஆகவே, இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு நண்பரும் சிந்தியுங்கள் . 

பேலியோ ஒரு சர்வ ரோக நிவாரணி என்று நான் கூறவில்லை ஆனால் நம்மை தாக்கும் நாமே வரவழைத்துக் கொள்ளும் பல தொற்றா நோய்களில் இருந்து நம்மை காக்க வல்ல அரண் இந்த உணவு முறையில் இருக்கிறது என்று கூறுகிறேன்

இந்த முறையை பரிந்துரைப்பதற்கெனவே முகநூலில் பிரத்தியேகமான குழுமம்
ஒன்று செவ்வனே இயங்கிவருகிறது 

இன்று இந்த குழமத்தின் உறுப்பினர்களாக மூன்று லட்சம் பேர் உள்ளோம். 

நமது பேலியோ குழுமங்களின் facebook முகவரிகள்

இவற்றில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இந்த குழுக்கள் அனைத்தும் சேவை மனப்பான்மையுடன் கூடிய தன்னார்வலர்களால் லாப நோக்கமன்றி இலவசமாக இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது 

main group 

https://www.facebook.com/groups/tamilhealth/

diabetic group

https://www.facebook.com/groups/ancestralfoods/

food group

https://www.facebook.com/groups/tamilfoods/

english group

https://www.facebook.com/groups/Paleo.LCHF.Diet.India/

paleo sandhai group

https://www.facebook.com/groups/paleoshop/

vegan group

https://www.facebook.com/groups/919246308138414/

தாங்கள் பேலியோ பற்றி அறிந்து கொள்ள மேற்சொன்ன முகநூல் லிங்க்குகளில் சென்று பார்க்கலாம். 

நன்றி

Leave Comments

Comments (0)