அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,10:37:06 PM
-தமிழில் V.கோபி
சமீப காலங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவது அதிகரித்து வருகின்றன. சென்ற வருடம் மட்டும் வாட்ஸப் செயலி மூலம் பரவும் போலி செய்தியால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் போலி செய்திகளின் தாக்கம் அதிகமாக உள்ளன. பெரும்பாலான போலி செய்திகள் தவறான தகவல் தான் என்றாலும் சில போலி செய்திகள் வேண்டுமென்றே பிரச்சார நோக்கில் பரப்பப்படுகின்றன.
சமீபத்தில் இப்படி அதிகமாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இரண்டு செய்திகளை நாம் எடுத்து கொள்வோம். முதலாவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் RSS அமைப்பினர் நிவாரண பணிகளில் ஈடுபடுவது போல் உள்ள புகைப்படம். இரண்டாவது, மேற்கு வங்காள மாநிலத்தில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுவது போல் உள்ள புகைப்படம். இரண்டு செய்திகளுமே போலியானவை என்பது இங்கு முக்கியம்.
“கேரளாவில் அரசியல் வன்முறையால் RSS தொண்டர்கள் கொல்லப்பட்டாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக RSS அமைப்பினர் நிவாரண பணிகளில் கடுமையாக உழைத்து கொண்டிருக்கின்றனர்” என்ற வாக்கியத்தோடு கேரள கம்யுனிஸ்ட் அரசை தாக்கி இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் உலா வருகின்றன.
“கேரள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களை வெறுப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் வெள்ளம் பாதிக்கப்பட்ட இந்த சமயத்தில் மற்றும் சங்கிகளிடமிருந்து உதவியை மட்டும் பெற்றுகொள்கிறார்கள்” என ராகேஷ் கிருஷ்னசிம்கா என்பவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டிவீட்டை 1500க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்துள்ளனர்.
ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் கேரளாவில் எடுத்தது அல்ல. 2017ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் RSS அமைப்பினர் உதவி செய்தபோது எடுத்த புகைப்படத்தை இப்போது எடுத்தது போல் பகிர்ந்து வருகின்றனர்.
இதேப்போல் மேற்கு வங்காள மாநிலத்தில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுவது போல் உள்ள புகைப்படத்தை போஸ்ட்கார்ட் நியுஸின் நிறுவனர் மகேஷ் விக்ரம் ஹெட்கே, “திரிணமுல் காங்கிரஸ் கட்சி செய்யும் கேவலமான காரியத்தை கொஞ்சம் பாருங்கள். ஜெய்ஷ் – இன்- ஆசாதி என்ற பெயரில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். இவர்கள் என்ன பாகிஸ்தானியர்களா? உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுங்கள்” என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
உண்மையில் ஜெய்ஷ் – இன்- ஆசாதி என்ற பெயரில் நடத்தப்பட்ட கவி சம்மேளனம் மேற்கு வங்காளத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி நடத்தப்பட்டது.
வருடந்தோறும் இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 14ம் தேதியே நடத்தப்படும். கடந்த வருடம் நடந்த நிகழ்ச்சியை தற்போது தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
போஸ்ட்கார்ட் நிறுவனர் ஹெட்கே தொடர்ந்து போலி செய்திகளை பரப்பி வருவதாக இவர் மீது குற்றச்சாடு உள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி ஏதாவது நிகழ்ச்சியை கொண்டாடினால் அது பாகிஸ்தான் சுதந்திர தினமாகத்தான் இருக்குமா என்பதை இந்த புகைப்படத்தை பகிர்ந்தவர்கள் யாரும் உணரவில்லை. நமது ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கூட சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதியே நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
போலி செய்தியை தயாரித்து பரப்புவதை நியாயப்படுத்தவே முடியாது. இணையதளத்தில் பகிறும் முன் எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. தேசிய அளவில் விவாதங்கள் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டுமென்றால், நாம் வாசிக்கும் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
அனைத்து கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நாம் சொல்லிகொள்வது என்னவென்றால், பிரச்சனைக்கு காரணமாக இருக்காமல் தீர்வுக்கு துணையாக இருங்கள்.
நன்றி THE LOGICAL INDIAN
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments