அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,10:39:08 PM
-தமிழில் V.கோபி
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக RSS தொண்டர்கள் மீது இதுவரை 13 வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களோடு பஜ்ரங் தள் இயக்கத்தையும் நாம் கணக்கில் எடுத்து கொண்டால் வழக்கு எண்ணிக்கை 17 ஆகிவிடும். ஆகவே இந்தியாவின் முதன்மையான தீவிரவாத அமைப்பு RSS இயக்கமே என மகாராஷ்டிரா மாநில முன்னாள் காவல்துறை தலைவர் முஷிரீப் கூறியுள்ளார்.
ஹேமந்த் கர்காரே தியாகத்தை நினைவுகூறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முஷிரீப், “இந்தியாவின் நம்பர் ஒன் தீவிரவாத அமைப்பு RSS இயக்கம் என்பதில் சந்தேகமே இல்லை. 2007ல் ஹைதரபாத் நகரின் மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2006 & 2008 மேலிகான் குண்டுவெடிப்பு, 2007 சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு என பல தீவிரவாத செயல்கள் RSS அமைப்பின் மேல் உள்ளது. அதே சமயம் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் “காவி பயங்கரவாதம்” செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது”.
மேலும் அவர் பேசுகையில், யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு முக்கியமில்லை. அந்த அமைப்பே ‘பிராமணிய’ சிந்தனையில் வேரூன்றியுள்ளது. ‘பிராமணிய’ என்று நான் கூறுவதால் பிராமணர்களை குறை கூறுவதாக அர்த்தம் கிடையாது. அடுத்தவர்களை அடிபணிய வைத்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணப்போக்கு இது”.
சகிப்புதன்மை சமீப காலங்களில் குறைந்து வருவதாக கூறும் கூற்றை மறுக்கும் முஷிரீப், “இந்த நாட்டில் சகிப்புதன்மை இல்லாமல் போய் நீண்ட காலம் ஆகிறது. இதற்முன்னும் மிகப்பெரிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. ஏன் இப்போது அதிகப்படியான முக்கியத்துவம் இதன் மீது கொடுக்கப்படுகிறது என தனக்கு புரியவில்லை” என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்து இயக்கங்களின் தீவிரவாத செயல்களை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்காரே இறப்பில் நிச்சியம் உளவுத்துறையின் தொடர்பு உள்ளது. அதனை வெளிப்படுத்த சுதந்திரமான விசாரணை வேண்டும் என்ற எங்களது கோரிக்கை மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுகிறது. பொது மக்கள் பெரும் திரளாக இணைந்து போராடினால் மட்டுமே இதில் மறைந்துள்ள உண்மை வெளிவரும்” என்கிறார்.
2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் இறந்த கர்காரே பற்றி “Who Killed Karkare” என்ற புத்தகத்தை முஷிரீப் எழுதியுள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.
நன்றி : INDIATIMES
January 9, 2021 - selvamani T
December 28, 2020 - selvamani T
December 26, 2020 - selvamani T
December 22, 2020 - selvamani T
December 20, 2020 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreJanuary 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments