99-வது பட்டத்தைக் கைப்பற்றினர் ரோஜர் பெடரர்

/files/detail1.png

99-வது பட்டத்தைக் கைப்பற்றினர் ரோஜர் பெடரர்

  • 0
  • 0

 -ஆனந்தி 

பாசெல் நகரில் நடந்த, சுவிஸ் உள்விளையாட்டு அரங்கச் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 99வது ஏடிபி  பட்டத்தை வென்றார்.

சுவிஸ் உள்விளையாட்டு அரங்க சர்வ தேச டென்னிஸ் போட்டியில், நேற்று(அக்டோபர் 28) நடந்த இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்(37), ருமேனியாவை சேர்ந்த மரியாஸ் கோபிலை 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில், தோற்கடித்து தனது 99வது  ஏடிபி  பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டு வீரரான ஜிம்மி கானர்ஸ் 109 பட்டங்களை வென்று  மிகப் பெரிய சாதனைகளை படைத்திருக்கிற நிலையில், அந்த  சதனைக்கு அருகில் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ரோஜர் பெடரர். மேலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து  ரசிகர்கள் பெடரரின் 100வது வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Leave Comments

Comments (0)