பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் அதிகரிக்க முடியாது, ஏன் தெரியுமா?

/files/detail1.png

பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் அதிகரிக்க முடியாது, ஏன் தெரியுமா?

  • 0
  • 0

-V.கோபி

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக வின்னை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றத்தால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். 

செப்டம்பர் 15-ம் தேதி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81.63 ரூபாயாக அதிகரித்தது. அதே நாளில் மும்பையின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 89.01 ரூபாயாக இருந்தது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே இந்த உடனடி விலையேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த முறை முதலில் செஞ்சுரி அடிப்பது பெட்ரோலா அல்லது டீசலா என மக்கள் நகைச்சுவையாக பேசிக்கொள்கிறார்கள். வழக்கமான பெட்ரோல் உபயோகிப்பவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்பது நல்ல விஷயமே. ஆனால் உயர் ரக பெட்ரோல் (பிரீமியம்) உபயோகிப்பவர்கள் அதிக விலையை கொடுக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் 8-ம் தேதி ஆக்டேன் வகை பெட்ரோலின் விலை 100.33 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பெட்ரோல் பங்க்கில் விலையை காண்பிக்கும் இயந்திரத்தில் 0.33 ரூபாய் என்றே வந்தது. இதுகுறித்து பெட்ரோல் பங்க உரிமையாளர் கூறுகையில், “தினமும் பெட்ரோல் விலையினை இயந்திரத்தில் நாங்களே புதுப்பிக்க வேண்டியுள்ளது. தற்போதுள்ள நிலைமையில் இந்த இயந்திரத்தில் 100 ரூபாய்க்கு மேலான தொகையை காண்பிக்க இயலாது” என்றார்.

99 ஆக்டேன் பெட்ரோலை “பவர் 99” என்ற பெயரில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் விற்று வருகிறது. இந்த வகை உயர் ரக பெட்ரோல் விலை வழக்கமான பெட்ரோலை விட 20 ரூபாய் அதிகமாகும். பெட்ரோல் வழங்கும் இயந்திரத்தில் 99.99 ரூபாய்க்கு மேல் காண்பிக்க முடியாது என்பதால், பல பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் சேவையை நிறுத்திவிட்டு இயந்திரத்தை மறு அளவீடு செய்வதற்கு பொறியியலாளரை வரவழைத்துள்ளனர். பெட்ரோல் பம்ப்புகள் தானியங்கியாக செயல்படுவதால், சென்ட்ரல் செர்வரின் மூலமாக மட்டுமே விலை அளவை மாற்ற முடியும். 

புதிய தலைமுறை எரிபொருளாக கருதப்படும் “பவர் 99” பெட்ரோல், வாகனங்களின் - குறிப்பாக சொகுசு கார்களின் -  இஞ்சின்களை நீண்டகாலத்திற்கு வலுப்படுத்தக்கூடியது. அதிக செயல்திறன் மிக்க இந்த பெட்ரோல் புனே, மும்பை, டெல்லி, நொய்டா, ஜலந்தர் மற்றும் பெங்களூரூவில் விற்கப்படுகின்றன.
 

நன்றி: indiatimes

Leave Comments

Comments (0)