மோதி அரசால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் - ஆனால் குறைக்காது! 

/files/detail1.png

மோதி அரசால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் - ஆனால் குறைக்காது! 

  • 0
  • 0

- சண்முக வசந்தன் 

இந்தியாவில் ஏழை எளிய மத்திய தர வர்க மக்களின் தலையாய பிரச்சனையாக வாட்டிவதைப்பது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. எரிபொருள் விலையை கட்டுப்படுத்த சில தினங்களுக்கு முன் நாடு தழுவிய வலுவான போராட்டமும் நடந்து முடிந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற மாறுதல்கள் பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்கான சாத்தியங்களை ஏற்படுத்தியிருக்கிறது, இந்தியாவை ஒப்பிடுகையில் அதற்கு இணையான பொருளாதார சூழலை கொண்டிருக்கும் ஏனைய நாடுகளில் பெட்ரோல் விலை சரிபாதிக்கும் குறைவான விலையில் வழங்கப்படுகிறது போன்ற தகவல்கள் கூறப்படுகின்றன.

இதனை மையப்படுத்தி 'தி வயர்' இணைய ஊடகத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு கட்டுரை, மேற்கூறிய வழிமுறைகளையும் விட எளிதான ஒன்றை பெட்ரோல் - டீசல் விலை குறைப்புக்காக   முன்வைத்திருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் வாட் வரி உள்ளிட்ட அதிக வரி விதிப்பு முறை, பெட்ரோல் டீசலை சில்லறையாக நுகரும் தனி மனிதரின் ஒவ்வொரு லிட்டரிலும் விதிக்கப்படுகிறது. இத்தகைய வரிவிதிப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி குறைக்கும்பொழுது, பெட்ரோல் விலையை கணிசமாக குறைத்து பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்பது கட்டுரையின் சாராம்சமாக உள்ளது.

வரி குறைப்பில் ஏற்படும் நிதி தட்டுப்பாட்டை சமன்படுத்தும் வகையில் பொருளாதார கொள்கையை மாற்றி வகுத்தால் இதனை நிச்சயம் சாத்தியப்படுத்தலாம் என அக்கட்டுரை புள்ளி விவரங்களோடு நிறுவுகிறது. வரிவிதிப்பு முறையில் இருக்கும் கார்ப்பரேட் சார்பு நிலைப்பாட்டை முதலில் கைவிட வேண்டும். தற்போதைய பாஜக ஆட்சியில் பெரும்நிறுவனங்களின் நிதி பங்கு குறைந்தும், எளிய மக்களுக்கான வரிகள் உயர்ந்தும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். இதனை மாற்றி அமைக்கும்பொழுது பெட்ரோல் டீசலுக்கான வரிக்குறைப்பினால் ஏற்படும் நிதி இழப்பை தவிர்க்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பெட்ரோல் - டீசலையும் உள்ளடக்கினாலே இந்தியாவில் அதன் விலையை ரூபாய் 55-ல் நிர்ணயம் செய்யலாம் என்கிறது அந்த கட்டுரை. பல்வேறு தளத்தில் ஜிஎஸ்டி பாதிப்பை ஏற்படுத்தினாலும் பெட்ரோல் - டீசல் விலை விவகாரத்தில் ஜிஎஸ்டியின் மூலம் பொதுமக்களுக்கு விலை குறைப்பை சாத்தியப்படுத்தலாம். மற்றவைக்கு ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்திய அதே அரசுதான்,   ஆனாலும், பெட்ரோல் - டீசல் விவகாரத்தில் மோதியின் பாஜக அரசு அதனை செய்யாது எனும் உறுதியை அந்த கட்டுரை முன்வைக்கிறது.

நன்றி: Thewire

Leave Comments

Comments (0)