இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு பட்டியலில் பீஃப் உணவை நீக்கி விடுங்கள் - பிசிசிஐ

/files/detail1.png

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு பட்டியலில் பீஃப் உணவை நீக்கி விடுங்கள் - பிசிசிஐ

  • 0
  • 0

- விஜய் தாகூர் (தமிழில்: V. கோபி)

வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்கச் சென்ற இந்தியக் குழு, இந்திய கிரிக்கெட் அணியின் உணவுப் பட்டியலில் இருந்து பீஃப் (மாட்டு இறைச்சி) உணவை எடுத்துவிடுமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இந்த விதிகளை சேர்த்துக்கொள்ளுமாறு இந்திய குழு கூறியுள்ளது.

இந்த வேண்டுகோள் நமக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. ஏனென்றால், சமீபத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றது இந்திய அணி. லார்ட்ஸ் டெஸ்டின் போது, இந்திய அணி வீரர்கள் சாப்பிட்ட மதிய உணவு பட்டியலை, பிசிசிஐ தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது. அதில், பீஃப் உணவும் பரிமாறப்பட்டது தெரியவந்தது.

ஆனால் இந்த ட்வீட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல ரசிகர்களுக்கு தங்கள் அணி தோல்வியடைந்ததை விட உணவு பட்டியலில் பீஃப் இருந்தது வருத்தமளித்தது. இதை உணர்ந்துகொண்ட பிசிசிஐ, இந்த முறை பாதுகாப்பாக முன்னேற்பாடுகளை செய்துள்ளது. 
நவம்பர் 18-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி, அங்கு மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளை விளையாட உள்ளது. தற்போதெல்லாம் மைதானத்தை மட்டுமல்லாமல் வீர்ர்களின் உணவு மேஜை வரை ஒளிபரப்பு செய்துவரும் தொலைகாட்சிகள், மைதானத்திற்குள் வீரர்களுக்கு அளிக்கபடும் உணவு பட்டியலை கூட பெறும் நிலை உள்ளது. இந்திய அணி எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்ற விவாதம் மட்டும் தான் இன்னும் தொலைக்காட்சியில் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் பயணம், பயிற்சி மற்றும் உணவுகள் சரியாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள பிசிசிஐ ஆய்வு குழு, வீரர்களுகான உணவு பட்டியலில் அதிகளவிலான சைவ உணவுகள், பழங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திடம் கூறியுள்ளது.

“ஆஸ்திரேலியாவில் அளிக்கப்படும் உணவுகள் சுவையற்றதாக உள்ளது என அடிக்கடி வீர்ர்கள் புகார் கூறுகிறார்கள். அணியில் சைவ உணவை உண்ணும் சில வீர்ர்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு தனியாக சமைத்து கொடுப்பதற்காக அங்குள்ள் இந்திய உணவகத்தை ஒப்பந்தம் செய்துள்ளோம்” என ஆய்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கூறினார்.

பெயர் கூற விரும்பாத வீரர் ஒருவர் கூறுகையில், “வீரர்கள் தற்போது தங்கள் உணவுகளுக்கு அதிக முக்கியத்துவும் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் சீஸ் பர்கர்கள் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. முக்கியமாக வெளிநாட்டு தொடரின் போது, சிவப்பு இறைச்சி உண்பதை குறைத்து ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள்” என்றார்.

நன்றி: mumbaimirror 

Leave Comments

Comments (0)