திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
February 27, 2021,2:58:39 AM
-அ.ப.ஃபரூக் அப்துல்லா
வயது மூப்பால் பெரியவர்களுக்கு மூட்டு தேய்மானம் ஏற்படுவது உண்டு.
இதனால் எடை தாங்கும் மூட்டுகளான முழங்கால் மூட்டு, இடுப்பு எலும்பு மூட்டு போன்றவை தேய்மானம் ஏற்பட்டு அதனால் வலி ஏற்படுவதாக கூறுவர்.
60 வயது தாண்டிய பல பெரியவர்களும் கூறும் மூட்டு வலி , வயதானால் ஏற்படும் இத்தகைய மூட்டு தேய்மானத்தால் வருவதாகும். இதை Age related degenerative osteo arthritis என்போம்.
பொதுவாக பெண்களுக்கு தங்களது மாதவிடாய் நின்றவுடன் மெனோபாஸ் காலத்தில் இந்த தேய்மானம் ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இளம் வயதுக்காரர்களுக்கும் உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் வலி ஏற்பட்டு மருத்துவரை சந்திக்கின்றனர்.
இவர்களுக்கு மூட்டு வலி வர காரணம் மூட்டு தேய்மானம் அல்ல. இதற்கு காரணம் மூட்டு வாதம் எனப்படும் ரியுமடாய்டு ஆர்த்தரைடிஸ் நோயாகும்.
இந்தியாவில் சுமார் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வாத நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே வருகிறது.
இந்த மூட்டு வாத நோய் ஆட்டோ இம்யூன் வியாதிகளுள் மிக முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணம்,
இந்த நோய் தரும் வலியும் அதனால் ஏற்படும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் தான் .
இத்தகைய கொடிய ஒரு நோய் நம்மிடையே முன்னிலும் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.
காரணம் ???
1.சூழலியல் மாற்றம்(environmental changes)
2.மரபு வழியாக வருகிறது ( hereditary )ஆகிய இரு காரணங்கள் கூறப்படுகிறது.
மனித இனம் தோன்றிய 26 லட்சம் வருடங்களில் இல்லாத ஜீன் எனும் மரபணு மாற்றங்கள் கடந்த 10,000 வருடங்களாக ஏற்பட்டு, அதுவும் கடந்த 100 ஆண்டுகளாக மிக வேகமாக ஏற்படுவதற்கு காரணம் என்ன???
சூழலியல் மாற்றம் என்றால் என்ன??
சூழலியலில் நாம் செய்த மிகப்பெரிய மாற்றங்களில்
நாம் தினமும் மூன்று வேலை உண்ணும் உணவு தான் முக்கிய இடம் வகிக்கிறது.
ஆக, தேவையற்ற முறையில் உணவு முறைகளை மாற்றி நாம் தான் உறங்கிக்கொண்டிருந்த கெட்ட ஜீன்களை எழுப்பிவிட்டோம். இதை ம்யூடேசன் என்கிறோம். அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறோம்.
மூட்டு வாத நோய் என்பது நமது மூட்டுகள் அனைத்தையும் ஒன்றாக தாக்கி இன்ப்லமேசன் எனும் உள்காயங்களை ஏற்படுத்தி முடக்கிவிடும் நோயாகும்.
Arthritis என்றால் மூட்டுகளில் ஏற்படும் இன்ப்லமேசன் ஆகும்.
இந்த இன்ப்லமேசன் ஏன் ஏற்படுகிறது??
வரலாற்றில் எங்கேனும் ஒரு சூழலிலாவது "ட்ரேன்ஸ் ஃபேட்" (transfat) எனும் கொடிய நஞ்சை நமது முன்னோர்கள் உண்டார்கள் என்ற சான்று உள்ளதா??
ட்ரேன்ஸ் ஃபேட் என்றால் என்ன??
நாம் உண்ணும் ஒவ்வொரு பொறித்த உணவிலும் இருப்பது இந்த ட்ரேன்ஸ் ஃபேட் தான் . இவை நமக்கு செய்யும் ஊறுகள் ஒன்றல்ல இரண்டல்ல.
எண்ணெயின் கொதிக்கும் திறனை அதிகரிக்க , அவைகளின் மீது "ஹைட்ரஜனேற்றம்"(hydrogenation) எனும் வேதியியல் மாற்றம் செய்து நல்ல கொழுப்பை "ட்ரான்ஸ் ஃபேட்" ஆக மாற்றிவிட்டோம்.
இந்த ட்ரேன்ஸ் ஃபேட் நமது குடலில் பங்கத்தை ஏற்படுத்துகிறது.
இது "leaky gut syndrome" எனும் பிரச்சனையை வரவழைக்கிறது.
பாதிப்புக்குள்ளான குடலில் நாம் உண்ணும் உணவில் இருந்து உட்கொள்ளப்படும் அனைத்து சத்துகளும் ரத்தத்தில் கலக்கும்.
பொதுவாக , நல்ல நிலையில் இருக்கும் குடலுக்கு , தேவையான சத்துகளை மட்டும் உறிஞ்சி தேவையற்ற சத்துகளை வெளியேற்றும் சக்தி உண்டு.
ஆனால் லீக்கி கட் பிரச்சனை இருக்கும் குடலுக்கு , எதை உட்கொண்டு எதை விட வேண்டும் என்று தெரியாது. ஆக, அனைத்து சத்துகளையும் ரத்தத்தில் கலக்க விடும்.
இதனால், நமது எதிர்ப்பு சக்தியானது தடம்புரண்டு, நமது மூட்டுகளை அழிக்கும்.
இப்போது யோசித்து பாருங்கள், நம்மிடையே எத்தனை பரோட்டா கடைகள் , எத்தனை வடை பஜ்ஜி கடைகள் , எத்தனை பேக்கரிகள் வளர்ந்துள்ளன... அனைத்திலும் பொறித்த உணவுகள் எளிதாக கிடைக்கின்றன. நாமும் நம் பிள்ளைகளுக்கு அதை தான் வாங்கி கொடுக்க தூண்டபடுகிறோம்.
மேலும் , தானியங்களை பிரதானமாக உண்ணும் ஒருவருக்கு
உடலில் பல இடங்களில் இன்ஃப்லமேசன் தோன்ற வாய்ப்புண்டு.
காரணம்.
மாவுச்சத்தை பிரதான எரிபொருளாக நமது செல்கள் உட்கொள்ளும்போது , நமது செல்களில் "free radicals" எனும் கழிவுகள் தோன்றும்.
இந்த free radicals நமது உடலுக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவை.
எனவே, காலை மதியம் இரவு மூன்று வேலையும் இட்லி தோசை சாதம் என்று உண்டால் அது மேலும் மூட்டு வாதத்தை அதிகப்படுத்தும்.
மேலும், தமிழர்களாகிய நாம் அரிசியை தான் அண்மை காலம் வரை உண்டு வந்தோம். தற்போது வடநாட்டவர்களின் முக்கிய உணவான கோதுமை மற்றும் மைதா பக்கம் நமது கவனம் திரும்பியுள்ளது.
இது மிகப்பெரும் தவறு.
கோதுமை நமது உணவல்ல.மேலும் கோதுமையில் க்ளூடன் எனும் உடலுக்கும் குடலுக்கும் ஊறுசெய்யும் பொருள் உள்ளது. அதை அதிகம் உண்ணும் வடமாநிலத்தவர்களிடையே ஆட்டோஇம்யூன் வியாதிகள் அதிகம் காணப்படுகின்றன. தற்போது தமிழகத்திலும் இந்த நோய்கள் பெருகி வருகின்றன.
பொதுவாக , ஒருவருக்கு மூட்டு வாதம் இருப்பது ,
அவர்கள் கூறும் நோய் அறிகுறிகளை வைத்தே மூட்டு வாதம் வந்ததை அறியலாம்
கை விரல்கள்,முழங்கை, முழங்கால் என்று அனைத்து மூட்டுகளிலும் புண் ஏற்பட்டது போல் வலி தரும். இந்த வலியால் அவர்களால் அன்றாட வாழ்க்கையை சரியாக வாழ முடியாது.
ரத்த பரிசோதனை செய்தால்,
ரியுமடாய்ட் ஃபேக்டர் எனும் காரணி இருக்கலாம்.
நோயின் ஆரம்பத்தில், ரத்தத்தில் தென்படாமல் போகப்போக தென்படலாம்.
Erythrocyte sedementation rate எனும் ரத்த சிவப்பணுக்கள் படியும் தன்மை மிக அதிகமாகும்.
C-reactive proteins எனும் இன்ப்லமேசனை குறிக்கும் காரணி மிக மிக அதிகமாக இருக்கும்
ஆண்ட்டி நியூக்ளியர் ஆண்டிபாடிகளும் ரத்தத்தில் அதிகம் இருக்கலாம்.
இத்தகைய மூட்டு வாதத்திற்கு , தற்போது இருக்கும் சிகிச்சைகள்
மூட்டு வலியை குணப்படுத்தும் வலி நிவாரணிகள் மற்றும் நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள் என்று அழைக்கப்படும் disease modifying anti rheumatoid drugs (DMARDs) கொடுக்கப்படும்.
இவை மூட்டு வாதத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
ஒருவர் மூட்டுவாதத்திற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு கூட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மூட்டு வாதம் தரும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.
மூட்டு வாதம் இருப்பவர்கள் பின்வரும் விசயங்களை கடைபிடிக்கலாம்
1. தானியங்கள், சிறு தானியங்களை தவிர்க்க வேண்டும்
2. க்ளூடன் கொண்ட கோதுமை/ மைதாவை அறவே ஒதுக்க வேண்டும்.
3. முடிந்தவரை இயற்கை வழியில் விளைந்த காய்கறிகளை உண்ணலாம் .
4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டு கறி , ஈரல் , ஆட்டுகால் சூப் போன்றவற்றை உண்ண வேண்டும்
5. பசு மஞ்சள், மிளகு, துளசி , பூண்டு, சிறு வெங்காயம் போன்றவற்றை சேர்த்தால் இன்ப்லமேசன் குறையும்
6. பாமாயில், சஃபோலா , சன் பிளவர் ஆயில், வனஸ்பதி போன்ற செயற்கை எண்ணெய்களை நிறுத்த வேண்டும் .
7. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
8. எண்ணெயில் தீக்குளித்த உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.
9. எந்த ரூபத்திலும் நாவுக்கு இனிப்பு சுவை தரும் சீனி/ சர்க்கரை / தேன் / வெல்லம் போன்றவற்றை சேர்க்காமல் இருப்பது நல்லது
இத்தகைய மாற்றங்களை உணவில் செய்வதன் மூலம் மூட்டு வாதத்தின் தீவிரத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆட்டோஇம்யூன் வியாதிகளில் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படும் சோரியாசிஸ் நோய் குறித்து அடுத்த வாரம் காண்போம்.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments