கொழுப்பெனும் நண்பன்-17

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன்-17

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

சோரியாசிஸ் எனும் தோல் நோய் தற்போது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. 

இந்த நோய் வந்தால் பாதிக்கப்பட்டவரின் தோல் வறட்சி கண்டு செதில் செதிலாக உறிந்து கொண்டு வரும். 

வரலாற்று காலத்தில் இருந்தே இந்த நோய் இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன.

எகிப்தின் மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த காலக்கட்ட மக்களுக்கும் இந்த சோரியாசிஸ் இருந்ததை அறிய முடிகிறது. 

"மருத்துவத்தின் தந்தை" எனப்படும் ஹிப்போகிரேட்டஸ் சோரியாசிஸ்க்கு பெட்ரோலியத்தின் உப பொருளான தாரை பூச வேண்டும் என்று கண்டறிந்தார். 

கிபி 2 ஆம் நூற்றாண்டில் கேலன் எனும் மருத்துவர் சோரியாசிஸிற்கு மருந்தாக  வைபர் எனும் பாம்பின் சூப்பை தடவ வேண்டும் என்று கூறியுள்ளார்

பின்பு இந்த இருபது நாற்றாண்டுகளில் , இந்த சோரியாசிஸ்க்கு பல மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன 

நாய் மற்றும் பூனையின் சானம்
வாத்து எண்ணெய் 
விந்தணுவை பூசுவது
சிறுநீருடன் வெங்காயம் மற்றும் உப்பை கலந்து பூசுவது
போன்ற பல மருத்துவ நம்பிக்கைகள் உலவி வந்தன

இந்த நோய்க்கான காரணம் தெள்ளத்தெளிவாக இன்னும் அறியப்படவில்லை.

ஜீன்களில் ஏற்பட்ட கோளாறுகள்
அந்த கோளாறுகளை உருவாக்கும் சூழலியல் மாறுபாடுகள்

கிருமித்தொற்றுகள்(infection) 

மனஅழுத்தம் (psychological stress) 

இவை தான் இப்போதைக்கு அறியப்பட்ட காரணங்கள். 

சோரியாசிஸில் பல வகைகள் உண்டு அவற்றுள் முக்கியமானவை
1. செதில் வகை (plague எனப்படும் psoriasis vulgaris ) இந்த வகை தான் 90% 
2. Guttate psoriasis 
3. Inverse psoriasis ( செந்நிற திட்டுகள் தோன்றும்) 
4. Pustular - கொப்புளம் கொப்புளமாக வரும் 
5. Erythrodermic psoriasis ( உடல் முழுவதும் சிவப்பு நிற படை வருவது) 

இந்த செதில்கள் பொதுவாக தலைப்பகுதியிலும் , முன்னங்கையின் பின்பகுதி, காலின் முன்பகுதி போன்றவற்றில் இருக்கும். 

ஏன் செதில்கள் தோன்றுகின்றன??

தோலின் மேல்பகுதியான எபிடர்மிஸ்(epidermis)  எனும் பகுதி அதிகமான அளவில் வளர்ச்சி அடைவதால் உருவாகிறது.

நன்றாக இருக்கும் தோலின் எபிடர்மிஸில் உள்ள செல்கள் புதிதாக மாற்றப்பட 28 முதல் 30 நாட்கள் ஆகும் 

ஆனால் சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட தோலின் செல்கள் புதிதாக மாற்றப்பட 3 முதல் 5 நாட்களே எடுத்துக்கொள்கின்றன.
அதனால் தான் இத்தனை வளர்ச்சி அடைந்து செதில்கள் தோன்றுகின்றன. 

சோரியாசிஸிர்க்கு இருக்கும் மருத்துவ முறைகள் என்ன ?

பாதிக்கப்பட்ட தோலின் மீது வறட்சியை போக்கும் க்ரீம்கள்(emollients )

ஸ்டீராய்டு கிரீம்கள்

விட்டமின் டி(vitamin-D) நிரம்பிய கிரீம்கள்

நோய் முற்றிய நிலையில் இருந்தால் 

அல்ட்ரா வயலெட் லைட் தெரபி
(UV-B therapy ) 
PUVA therapy 

அதனினும் முற்றிய நிலை இருப்பின் 
தோலின் வளர்ச்சியை கட்டுப்படுத்த
 
சைக்லோஸ்போரின்
மெத்தோட்ரெக்சேட்
போன்ற மருந்துகளை எடுக்கலாம். 

சோரியாசிஸை முழுவதுமாக குணப்படுத்த இயலுமா??

ஆட்டோ இம்யூன் வியாதிகள் அனைத்துக்கும் மூலம் நமது ஜீன்கள் செய்யும் தகராறு ஆதலால் நம்மால் அந்த நோய்களை கட்டுப்படுத்த தான் முடியும். முழுவதும் குணப்படுத்த முடியாது

சரி.. ஜீன்கள் தான் காரணம் என்றால் அவற்றிற்கு உகந்தவாறு நமது வாழ்வியலை அமைத்துக்கொண்டால் இந்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கலாம் தானே??

நிச்சயம் முடியும்.

சோரியாசிஸை நமது வாழ்வியல் மாற்றங்களை கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

எப்படி??

1. தானியங்கள் நமது ஜீன்களின் எதிரிகள். அதிலும் க்ளூடன் அடங்கிய  கோதுமை நமது ஜீன்களுக்கும் , குடலுக்கும் ஒவ்வாத உணவு. ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

2. குடலின் ஆரோக்கியம் சரியாக இருந்தால் சோரியாசிஸ் நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது ஆய்வுகள்.
Gut health என்பது குடலில் உள்ள நல்ல பேக்டிரியாக்களின் ஆராக்கியத்தை பொறுத்து இருக்கிறது.

ஆகவே, நல்ல பேக்டிரியாக்களை சரியாக பராமரிப்பதும், leaky gut இல்லாமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.

ரீபைன்டு எண்ணெய்கள்
எண்ணெயில் பொறித்த பண்டங்கள்
குளிர்பானங்கள்
ஃபாஸ்ட் புட் ஐட்டங்கள்
மைதா/ ஆட்டா/ சிறுதானியம்
போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும் 

3. பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்

4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டு கறி, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை எடுப்பது நல்லது

5. இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் எடுப்பது நல்லது. 
தக்காளி, பெப்பர், மிளகாய் உருளை போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். 

6. தினமும் நண்பகல் சூரிய வெயிலில் 20 நிமிடம் நிற்பது நல்லது. நமது உடலின் விட்டமின் டி அளவுகள் உயர் வழி வகுக்கும்.
விட்டமின் டி நிரம்பிய மாத்திரைகளை மருத்துவர் அறிவுரைப்படி எடுக்கலாம். 

7. ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் நிரம்பிய மீன்களை ( மத்தி போன்ற சிறிய வகை மீன்கள் ) அதிக அளவில் உண்ணலாம். முடியாதவர்கள் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுக்கலாம். 

8. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துதல் நல்லது.
தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட தோலில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

9. மது புகை போன்ற பழக்கங்களை அறவே விட்டு விட வேண்டும்.
காபி டீ போன்றவற்றை நிறுத்துவது நல்லது. தேவைப்படின் கிரீன் டீ பருகுவது நல்லது. 

10. இவையனைத்துடன் தங்களின் தோல் நோய் சிறப்பு மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து வர வேண்டும். 

சோரியாசிஸ் தொற்று வியாதி அல்ல. அதனால் சோரியாசிஸ் வந்தவரை மனதளவில் ஊனப்படுத்தாமல் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் 

சோரியாசிஸை நம்மால் கட்டுப்படுத்த முடியும். 


அடுத்த ஆட்டோ இம்யூன் வியாதி 
டைப் ஒன்று டயாபடிஸ் நோயாகும்...

நீரிழிவு என்பது நமக்கு அன்றாடம் கேள்விப்படும் ஒரு சர்வ சாதாரண குறைபாடாகிவிட்டது.

இதில் இருவகை உண்டு

முதல் மற்றும் இரண்டாம் வகை

30- 40 வயதுகளில் பெரும்பான்மையோருக்கு வரும் நீரிழிவு டைப் இரண்டு ஆகும்.
இது இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போகும் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் நிலையால் வருவதாகும்.

அதுவே , குழந்தைகளுக்கும் வளர்இளம் பருவத்தினருக்கும் வருகிறது எனில் அது டைப் ஒன்று டயாபடிஸ் என்று அழைக்கப்படும் குறைபாடாகும்.

டைப் ஒன்று குறைபாட்டில் கணையத்தின் பீட்டா செல்கள் போதுமான அளவு இன்சுலினை சுரக்காது.

பீட்டா செல்களுக்கு எதிராக நமது எதிர்ப்பு சக்தி செயல்பட்டு மீண்டு வரமுடியாத அளவுக்கு பீட்டா செல்களை அழித்து விடுவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

எனவே, டைப் ஒன்று நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் சுரப்பதில்லை

ஆகவே, எப்போதும் இவர்களது ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் மிக அதிகமான அளவு இருக்கும்(HYPERGLYCEMIA)

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
அடிக்கடி பசி எடுத்து உணவு உண்ணுதல்
உடல் சோர்வு 
போன்ற அறிகுறிகள் தென்படும். 

நோய் முற்றினால் 
கிட்னிகள் செயலிழப்பு,
நரம்பு மண்டல பாதிப்பு 
டாயடபடிக் கோமாவிற்கு கூட அழைத்துச் செல்லும்.

இத்தகைய டைப் ஒன்று நீரிழிவு இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் குழந்தைகளை தாக்குகின்றது.

சி- பெப்டைடு எனும் அளவுகளை ரத்தத்தில் ஆய்வு செய்தால் ஒருவருக்கு வந்திருப்பது டைப் ஒன்றா இல்லை இரண்டா என்பது தெரியும்.

சி- பெப்டைடு அளவுகள் டைப் ஒன்று நீரிழிவு திறன் கொண்டோருக்கு மிக மிக குறைவாக இருக்கும்.

இத்தகைய அபாயகரமான டைப் ஒன்று வியாதிக்கு நாம் இன்சுலினை வெளியில் இருந்து போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

இன்சுலின் இல்லாமல் வாழ இயலாது. 

ஆனால், இத்தகைய கொடிய குறைபாட்டை உணவு முறையின் மூலம் கட்டுப்படுத்த முடியுமா??? 

முடியும்.
 
நமது பேலியோ எனும் குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறையை சரியாக பின்பற்றினால் டைப் ஒன்று நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நீண்ட நாள் பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

இன்சுலின் சுரப்பு நமக்கு எப்போதெல்லாம் தேவை??

நமது ரத்தத்தில் சர்க்கரை அளவுகள். அதிகமானால் அதை குறைக்க தான் இன்சுலின் தேவை.

ரத்தத்தில் சர்க்கரை எப்போது ஏறும்?

அதிக மாவுச்சத்துள்ள உணவுகளான அரிசி/ கோதுமை/ பழங்கள் போன்ற உணவுகளை உண்பதால் ஏறுகிறது

இத்தகைய ரத்த சர்க்கரையை ஏற்றும் உணவுகளை தவிர்த்தால் ஒருவருக்கு தேவைப்படும் இன்சுலினின் அளவுகளை குறைக்கலாம் அல்லவா??

டைப் ஒன்று நீரிழிவு இருக்கும் ஒருவர் தானியங்களையும் 
குறிப்பாக கோதுமையையும் மைதாவையும் உண்பதை நிறுத்துவது நல்லது.

கோதுமையில் உள்ள க்ளூடன் மற்றும் க்ளையாடின் புரதங்கள் நேரடியாக கணையத்தின் பீட்டா செல்களை அழிக்கின்றன.

மைதா மாவில் உள்ள அலோக்சானும் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் பீட்டா செல்களை அழிக்கும். 

டைப் ஒன்று நீரிழிவு திறன் கொண்டோர் 

அரிசி 
கோதுமை 
மைதா 
பழங்கள்
சிறு தானியங்கள் முதலியவற்றை உண்பதை நிறுத்த வேண்டும்.

இவற்றை தவிர்த்து விட்டு
பிறகு எதை உண்பது???

முட்டை , மாவுச்சத்து குறைவான காய்கறிகள் , மாமிசம் போன்றவற்றை உண்ணலாம்.

முட்டையிலும் மாமிசத்திலும் மாவுச்சத்து மிக சொற்பமான அளவு தான் இருக்கிறது 

சைவ உணவு வழியை பின்பற்றுபவர்கள்

பால் பொருட்களான பனீர் 
காய்கறிகள் 
பட்டர் டீ போன்றவற்றை உண்ணலாம்.

இந்த உணவு முறைக்கு மாறுவதால் ரத்த சர்க்கரை மிகவும் சீரான நிலையை அடையும் 

தினசரி இன்சுலின் தேவை மூன்றில் ஒரு பகுதியாக குறையும். 

வாழ்வின் தரம் மேம்படும். 

நீரிழிவால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

தொடரும்...

முந்தய தொடரினை படிக்க   

 

Leave Comments

Comments (0)