அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,10:28:41 PM
-தமிழில் V.கோபி
இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரும் சோசியலிச புத்தக கடையான புக்மார்க்ஸ் (Bookmarks) கடையை முகமூடி அணிந்த தீவிர வலதுசாரி போரட்டக்காரர்கள் அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து, புத்தகம் மற்றும் இதழ்களை கிழித்து சேதப்படுத்தியுள்ளதாக கடையின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புக்மார்க்ஸ் கடையில் அரசியல், பொருளாதாரம், வரலாறு, நாவல்கள் என பல வகையான நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
“லண்டனின் உள்ள தங்களது கடையில் 12க்கும் மேற்பட்ட போராட்டக்கார்ர்கள் உள்நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வதாகவும்” புக்மார்க்ஸ் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.
கடைக்குள் சிலவற்றை சேதப்படுத்தி விட்டு போலீசார் அங்கு வரும் முன்பே அவர்கள் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் கடையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது சம்மந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் டொனால் டிரம்ப் முகமூடியையும் “British Bolshevik Cult” என்று எழுதிய தட்டியை வைத்திருந்ததாகவும் பிரச்சார குழுவான Stand up to Racism தெரிவிக்கிறது.
ரகசிய செய்திகளை வெளியிடும் Infowars என்ற இணையதளத்தை முடக்கி தணிக்கை செய்ததற்கு எதிராக தீவிர வலதுசாரிகள் மத்திய லண்டன் பகுதியில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியபோது இதுபோன்று எழுதிய தட்டிகளையே வைத்திருந்தனர். சிலர் “பிரிட்டனை மீண்டும் சிறந்ததாக்குங்கள்” என்ற வாசகம் அடங்கிய தொப்பியை அணிந்திருந்தனர்.
Stand up to Racism அமைப்பின் மைக்கேல் பிராட்லி கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக யாரும் இந்த தடவை காயம் படவில்லை. பகல் நேரத்தில் அதுவும் மத்திய லண்டன் பகுதியில் புத்தக கடையை தாக்கும் அளவிற்கு வலதுசாரிகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதையே இத்தாக்குதல் உணர்த்துகிறது. மேலும் புத்தககடையை தாக்கியதின் மூலம் தாங்கள் பேச்சுரிமையின் காவலர்கள் என்ற வலதுசாரிகளின் கூற்று பொய்யாகியுள்ளது”.
இத்தாக்குதலுக்கு தொழிலாளர் கட்சியின் எம்.பி ரூபா ஹக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நன்றி : theguardian
January 9, 2021 - selvamani T
December 28, 2020 - selvamani T
December 26, 2020 - selvamani T
December 22, 2020 - selvamani T
December 20, 2020 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreJanuary 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments