பொது

சென்னையின் சினிமா சரணாலயம் :

சினிமா வாய்ப்பு தேடி வீதி வீதியாக அலைபவர்கள் நேரத்தை வீணாக்காமல்  ப்யூர் சினிமாவை நோக்கி வாருங்கள் உங்கள் நோக்கத்தை நோக்கிய பாய்ச்சல் வீரியப்படும்.

வெற்றி திருமகன் திருமாவளவன் மாண்புகள் நூல் வெளியீடு !

இந்த புத்தகமே ஏதோ தனி நபருக்காக எழுதியது போல் அல்லது ஒரு இயக்கத்தின் கட்சியின் தலைமை எப்படி இருக்க வேண்டும் அதன் பண்புகள் எவ்வாறு இருந்தால் வேண்டும் என்று விளக்கிற ஒரு நூலை படைத்த தோழருக்கும்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

6 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் PURE CINEMA புத்தக அங்காடி!

கடந்த 12 வருடங்களாக நிகழ்த்தி வரும் தமிழ் ஸ்டுடியோவின் உழைப்பின் பலனை தமிழ் சினிமா தற்போதே கண்கூட பார்த்து தான் வருகிறது.இன்னும் பல ஆண்டுகளுக்கு செவ்வனே தனது பணிகளை இந்த இயக்கம் நிச்சயம் ஆற்றிவரும் ,இந்த இயக்கத்தோடு இணைந்து உங்களையும்,இந்த சமூகத்தையும்,தமிழ் சினிமாவையும் மேம்படுத்தும் பணியில் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

கொலையும் செய்யலாம் ! மக்கள் படைப்பாளி ஜனநாதனின் நேர்காணல் !

 நான், பெரிய நடிகர்களை வைத்துப் படமெடுத்தாலும், அதை என் படமாகவே எடுக்க முயற்சிக்கிறேன்.ஆர்யா நடித்தாலும், அது ஜனநாதன் இயக்கியபடம். ஜெயம் ரவி நடித்தாலும் அது ஜனநாதன் இயக்கிய படம்.

தோழர் கருப்பு கருணா  குடும்பத்திற்கு நிதி வழங்குவோம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் அமைப்பின் முழுநேர ஊழியருமான தோழர்.எஸ்.கருணா என்கிற 'கருப்பு கருணா' உடல்நலக் குறைவு காரணமாக திங்களன்று (21.12.2020) இயற்கை எய்தினார் என்பதை அறிவீர்கள். 

மாட்டிறைச்சியே மனித நாகரீகத்தின் உணவு!

மாடு தெய்வம் ; மாட்டு மூத்திரமே மருந்து ; மாட்டுக்காக மனிதனையும் கொல்லலாம் ; மாட்டிறைச்சியை உண்பவர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களில்லை என்கிறது இந்த கொடுங்கோல் பார்ப்பனீய அரசு ஆனால் நம் நாகரிகத்தின் தொல்லியல் மையங்களான ஹரப்பாவில் மக்கள் பிரதானமாக உண்டது இறைச்சியே அதுவும் மாட்டிறைச்சியே என்கிறது கேம்பிரிட்ஜ் மற்றும் பனாரஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு.

யார் இந்த ரஞ்சித் சிங்?

உண்மையிலேயே மாணவர்களின் வாழ்வை உயர்த்தும் ஆசிரியர்களை கண்டுபிடித்து அங்கீகரிப்பதற்கான ஒரு முயற்சி அதில், சர்வதேச அளவில் ஒரு இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளார். யார் அவர்?

சென்னைக்கு அத்தியாவசியம்!  மழை நீர் சேகரிப்பு திட்டம் !

ஒரே ஒரு நாள் தண்ணிர் யாருக்கும் கிடைக்காது  ஏதோ ஒரு பூகோள மாறுபாடு ஏற்பட்டு உள்ளது என்று ஒரு அறிவிப்பு வருகிறது என்னவாகும்?

ஆன்லைன் சூதாட்டம் விளையாட தடை! ஆன்லைன் சூதாட்ட நிறுவங்களுக்கு?

ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டு மிக எளிதாக எல்லோர் கைகளிலும் கிடைத்து வருகிறது. விளையாட்டு மக்களை உற்சாகப்படுத்தவும், பொழுது போக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மனதைப் புத்துணர்ச்சியாக்கவும் உருவானது. எந்த ஒரு நல்ல செயல்பாட்டிலும் தீமையை விதைக்கும் நயவஞ்சக உலகில் விளையாட்டிலும் சூது என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள்

புத்தகமாக உயிர்வாழ்வார் பதிப்புலகின் ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு புத்தகமும் அழகாய் சிரிக்கிறது என்றால் அதற்குப் பின்னே அதை மலரச் செய்து தன்னை வருத்திக் கொண்ட பதிப்பாசிரியரின் கண்ணீர் நிச்சயம் ஒளிந்திருக்கும். படைப்புலகம் என்பதே கடினம் நிறைந்ததுதான் பொழுதுபோக்கை, வெற்றுக்கூச்சலை மட்டுமே சிலாகிக்கும் தற்கால தலைமுறைக்கு மத்தியில் கருத்தாழம்மிக்க புத்தகங்களை பதிவிட்டு வெளியிடுவது என்பது எத்தகைய சிரமத்தை கொடுக்கும் என்றாலும் அதை சிரமமாக எண்ணாமல் எதிர்கால தலைமுறையை பண்படுத்த நாம் செய்யும் பணி, நம் கடமை என்று எண்ணி அரை நூற்றாண்டு காலம் தமிழ் உலகில் களம் கண்டவர் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள்.

மலைக்கு மேல் சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கார்கில் கிராம மாணவர்கள்

சூரியன் மேலேறிவிட்டது. ஆனால் லட்டூ கிராமத்தின் அதிகாலை குளிர்ச்சியை சயீத் இம்தியாஸ் முகத்திலிருந்து வெளிவரும் பனிப்புகை மூலம் பார்க்க முடிகிறது.

முதலில் அம்பேத்கர் பிறகு பெரியார் இப்போது புத்தர்!!!

இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதை இரண்டாக பிரித்து காட்ட இயலும் ஒன்று சனாதனம் மற்றொன்ரு அதை எதிர்க்கும் சனநாயகம்.

தொடர் வெள்ளம்: குறுகிய கால தீர்வுகள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்

கடந்த வாரம் ஹைதராபாத்தில் இடைவிடாத மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நகரம் முழுவதும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

வங்கிப் பணிகளில் ஓபிசி, எஸ்சி/எஸ்டி பங்கை கபளீகரம் செய்யும் EWS இடஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் போது, ஏற்கனவே உள்ள இடஒதுகீட்டை இது எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் சமீபத்தில் IBPS தேர்வாணையம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்போ வேறுவிதமாக உள்ளது.

வெல்லலாம் கொரோனாவை பார்ட் - 2

கொரோனா வைரஸ் ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது  தொற்றை பெறுபவர் அனைவருக்கும் அது நோயாக மாறுவதில்லை  தொற்று மட்டும் பெற்று நோய் நிலைக்கு செல்லாதவர்களுக்கு வந்திருப்பது INFECTION மட்டும். அதாவது "நோய்த் தொற்று" மட்டுமே.  தொற்றைப்பெற்று நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டுபவர்களுக்கு கோவிட் நோய் வந்திருக்கிறது என்று அர்த்தம்.  இதை "COVID DISEASE" என்று அழைக்கிறோம். 

கொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1

கொரோனா வைரஸ் ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது  தொற்றை பெறுபவர் அனைவருக்கும் அது நோயாக மாறுவதில்லை  தொற்று மட்டும் பெற்று நோய் நிலைக்கு செல்லாதவர்களுக்கு வந்திருப்பது INFECTION மட்டும். அதாவது "நோய்த் தொற்று" மட்டுமே.  தொற்றைப்பெற்று நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டுபவர்களுக்கு கோவிட் நோய் வந்திருக்கிறது என்று அர்த்தம்.  இதை "COVID DISEASE" என்று அழைக்கிறோம். 

குடியுரிமை திருத்தச் சட்டம்: போராட்டத்தில் ஈடுபட்ட 10,000 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 10,000 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமைச் திருத்தச் சட்டம்: புத்தாண்டில் ஒன்று கூடுவோம்

CAA-விற்கு எதிராக 2019 டிசம்பர் 31 முடிந்து, 2020 சனவரி முதல் நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்குக் கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் ஒன்றுகூடுவோம்.

CAA: கன்னையாகுமார், சந்திர சேகர ஆசாத்தின் வேலைகளை முக்கியமானதாகப் பார்க்கிறேன்- பா. ரஞ்சித்

தமிழ்நாடு முழுக்க குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கலந்துரையாடல் தொடங்கியிருக்கிறது என்று திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

CAA:இதுவரை 20க்கும் மேற்பட்டோர் படுகொலை

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 20 பேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்திருக்கின்றனர்.

ஈழத்தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிறது பாஜக- திருமுருகன் காந்தி

35ஆண்டுகளாக இங்கு இரண்டாம்தர குடிமக்களாக வாழக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கிறார்கள்? என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்த மேட்டுப்பாளையம் தலித் மக்கள்

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையும், பாதுகாப்பும் வேண்டி இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர். 

1968 டிசம்பர் 25: தமிழக வரலாற்றில் கருப்பு நாள்

விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு, நாய்க்கன் கொட்டாய், மேட்டுப்பாளையம் என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது சாதிய ஆதிக்கம் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழ்வெண்மணி படுகொலை: மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

சாதியினை ஒழிக்காமல், வர்க்கப் பிரிவினை களைந்திடாமல் சமூக மாற்றம் இல்லை என்பதை எடுத்துக் காட்டிய மிகப் பெரும் கருப்பு நாளாக டிசம்பர் 25 என்ற நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிற்கிறது என்று மே 17 இயக்கத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவுடைமை ஆதிக்கவாதிகள் வைத்த தீயில் வெந்துமடிந்த 44 தியாகிகளின் நினைவு நாள்

நிலவுடைமை ஆதிக்க வெறியர்களின் ஈவிரக்கமற்ற இந்த வன்முறை வெறியாட்டத்திற்குப் பலியாகிய 44 பேரின் நினைவாக வெண்மணியில் நினைவகம் கட்டப்பட்டு அந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவருகின்றனர்.

நீதியைத் தேடும் சடலங்கள்- தீண்டாமை சுவர் விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட அவலம் குறித்தான கருத்தரங்கம்

எதிர்வரும் 29ஆம் தேதி ”நீதியைத் தேடும் சடலங்கள்” என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கோவையில் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

CAA: போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மன் மாணவர் ஐஐடி-யிலிருந்து வெளியேற்றம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவர் சென்னை ஐஐடி-யிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம்: நிரம்பி வழிந்த வள்ளுவர்கோட்டம்

மதத்தை அடிப்படையாகவும், அளவுகோலாகவும் வைத்து ஒரு சட்டத்தை இயற்றுவது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

குடியுரிமை சட்டத் திருத்தம்:  சென்னை சென்ட்ரலில் மாணவர் அமைப்பினர் போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் இன்று (டிசம்பர் 21) சென்னை சென்ட்ரலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அடங்கப் போவது கிடையாது- வளர்மதி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யாதவரை எங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கைது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக APSC மாணவர்களின் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்றுவரும் நிலையில், நேற்று (டிசம்பர் 16) அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா- உயர்நீதிமன்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பாசிச பாஜக கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 13) சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- 16ஆம் தேதி தொடங்குகிறது

எதிர்வரும் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு, ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் தவித்துவரும் தலித் மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சுடுகாடு வசதி இல்லாததால் அவர்கள்  இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கத் தவித்துவருகின்றனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா- மேலும் 2 நாட்களுக்கு இணையச் சேவை முடக்கம் 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அங்கு மேலும் 2 நாட்கள் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. 

இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா?- சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலித் மக்களின் குடியிருப்பைச் சூழ்ந்த தீண்டாமை சுவர்

கடலூர் மாவட்டத்தில் தலித் மக்களின் குடியிருப்பைச் சுற்றி ஆணவ சாதியினர் தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளனர்.

ஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே ''தமிழன் இந்து அல்ல'' என்கிறது

தமிழன் இந்து அல்ல, வள்ளுவ நெறியைச் சார்ந்தவன் என்றபோது கதறிய பாஜக கும்பல் தமிழர்களை ''இந்து'' பட்டியலில் சேர்க்காமல் நழுவியிருக்கிறது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலம் பரோல் முடிந்து சிறைக்குச் செல்லும் பேரறிவாளன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல் முடிவடைந்த நிலையில் நாளை (டிசம்பர் 13) புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: சட்ட நகல் கிழிக்கும் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்கும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று (டிசம்பர் 12) சென்னையில் சட்ட நகல் கிழிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நடூரில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து உயிரிழந்த 17 தலித்துகளுக்கு நியாயமான நீதி கேட்ட சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

17 பேரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டுப் போராடியவரை நிர்வாணப்படுத்தித் தாக்கிய காவல்துறை

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் உயிரிழந்ததற்கு நீதி கேட்டுப் போராடியவரை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தித் தாக்கி கைவிரல்களை உடைத்திருக்கின்றனர்.

இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களைக் குறிவைக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெறு- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்

இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பார்ப்பன பாசிச கும்பல் வதைமுகாம்களில் அடைக்கத் திட்டமிட்டுள்ளது என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் கூறியுள்ளனர். 

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருக்கிறது-ஆய்வில் தகவல்

சென்னை மற்றும் கோவையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்கள் மீது பொய்வழக்கு பதிந்த காவல்துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 தலித் மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களைச் சிறையில் அடைத்த காவல்துறையினரைக் கண்டித்து இன்று (டிசம்பர் 09) மாலை 3 மணிக்குப் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஐஐடியில் நான்கு ஆண்டுகளில் 27 பேர் தற்கொலை

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை சென்னை ஐஐடியில் ஏழு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஹெல்மெட் அணியாத கல்லூரி மாணவனை பூட்ஸ் காலால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

நாமக்கல் மாவட்டம், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவனைக் காவல் உதவி ஆய்வாளர் பூட்ஸ் காலால் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது

சூட் அணிந்ததற்காகத் தலித் இளைஞனைத் தாக்கிய இஸ்லாமியக் கும்பல்

குஜராத் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சூட் அணிந்தார் என்பதற்காக அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று.

17 உயிர்கள் கொல்லப்பட்டால்தான் தீண்டாமை சுவர் இடிக்கப்படுமா?

”வெண்மணியில் வெந்து செத்தோம், பரமக்குடியில் குண்டடிபட்டோம், மேலவளவில் வெட்டுப்பட்டோம், மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை  சுவராலே கொத்து கொத்தாய் கொல்லப்பட்டோம்”.

நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 25 தோழர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்ததற்கு நீதிகேட்டுப் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்ய கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை தீ வைத்து எரித்த ஆதிக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜக எம்எல்ஏ-வால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது அந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

டாஸ்மாக்கை மூடாமல் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் ?- வழக்கறிஞர் நந்தினி 

டாஸ்மாக்கை மூடாமல் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் ? என அரசியல்வாதிகளிடம் பெண்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாளை (6.12.19) முதல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக வழக்கறிஞர் நந்தினி தெரிவித்துள்ளார்.

வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்க நடைபயணம் மேற்கோண்ட தோழர்களை கைது செய்திருக்கும் காவல்துறை

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து பத்து நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு சென்னை கோட்டையில் மனு அளிக்க முயன்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரைக்  கைது செய்யவேண்டும்- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்க தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

17 தலித் மக்களின் உயிருக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் 

17 தலித் மக்களின் உயிருக்கு நியாயம் கேட்டுப் போராடிய தோழர்களை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் உயிரிழப்பு

மேட்டுப்பாளையத்தில் இன்று (டிசம்பர் 02) அதிகாலை 5.30 மணிக்குத் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததில் 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

15 வயது தலித் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய முற்பட்ட தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழப்பு

சேலத்தையடுத்த  ஆத்தூரில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்ய முயன்ற கூலித் தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்துள்ளார்.

தலித் செயற்பாட்டாளர் மீது ஆணவ சாதியினர் தாக்குதல்

குஜராத்தில் தலித் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிவந்த செயல்பாட்டாளர் மீது ஆணவ சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெரியாரும் போராட்டங்களும் விளக்கப் பொதுக்கூட்டம்

இன்று (நவம்பர் 29) மாலை 6 மணிக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், “பெரியாரும் போராட்டங்களும்” என்ற தலைப்பிலான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

32 வயது பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது

கடலூரில் 32 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரை ஐந்து பேர்க் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் சிறுவன் மீது ஆணவ சாதியினர் தாக்குதல்

குஜராத்தில் 14 வயது தலித் சிறுவன் நாற்காலியில் அமர்ந்தார் என்பதற்காக ஆணவ சாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த சிறுவனைக் கொடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்க முற்பட்ட தோழர்கள் கைது

மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த முற்பட்ட மக்கள் இயக்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வன்னியர் சாதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

மேலவளவில்  கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்- எவிடன்ஸ் கதிர்

மேலவளவில் கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 நாட்களாகத் தூக்கம் இல்லாமல் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

தலித் மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய வன்னிய இளைஞர்கள்

கடலூரில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை ஆணவ சாதியினர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து சுவரொட்டி ஒட்டிய மூன்று பேர் கைது

பாபர் மசூதி தீர்ப்பு அநீதியானது என்று சுவரொட்டி ஒட்டிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாத்திமா லத்தீபின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்களின் போராட்டம்

மாணவி பாத்திமா லத்திபின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடி மாணவர்கள் இன்று (நவம்பர் 15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'பாபர் மசூதி தீர்ப்பு'' நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று மிரட்டும் காவல்துறை

'பாபர் மசூதி தீர்ப்பு''  தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மாணவர்களை காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். 

தலித் மக்களிடம் லட்சங்களைப் பறித்த காவலர்கள் உடையில் இருக்கும் திருடர்கள்

மதுரை மாவட்டத்தில், தலித் மக்களிடம் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி லட்சக்கணக்கான பணத்தைப் பறித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முண்ணனியினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தற்கொலை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பாத்திமா லத்தீப் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளைத் தடுத்து நிறுத்த?-  பா. ரஞ்சித்

மலக்குழி மரணம் குறித்து இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளைத் தடுத்து நிறுத்த என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.

மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும்  என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

மத வெறுப்பின் காரணமாகத் தனது மகள் உயிரிழந்திருக்கிறாள்- பாத்திமா லத்தீப்பின் பெற்றோர்

மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டதால் நான் மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீப் தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார்.

விசவாயு நிறைந்த கழிவுநீர் தொட்டிக்குள் மனிதரை இறக்கிவிட்டு கொலை செய்திருக்கிறது எக்ஸ்பிரஸ் அவென்யூ பேரங்காடி -ஜெயராணி

மலக்குழி அடைப்பை நீக்க எந்திரத்தைப் பயன்படுத்தத் துப்பில்லாமல், விசவாயு நிறைந்த கழிவுநீர் தொட்டிக்குள் மனிதரை இறக்கிவிட்டு கொலை செய்தது, தென்னிந்தியாவின் இந்த நவீன வணிகப் பேரங்காடி என்று எழுத்தாளர் ஜெயராணி தெரிவித்துள்ளார்.

மலக்குழி மரணம்: ஒப்பந்ததாரர் கைது 

சென்னையில் மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட  இளைஞர் விசவாயு தாக்கி உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலவளவு படுகொலை: 13 பேர் விடுதலையை எதிர்த்து வழக்கு தொடரலாம்

மேலவளவு படுகொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மேலவளவு படுகொலைகள்- குற்றவாளிகள் விடுதலை

மேலவளவு படுகொலைகள் சம்பவம் தொடர்பாக 10ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்றுவந்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீலச்சட்டை பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி  மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது

மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தபட்ட தொழிலாளி  உயிரிழப்பு

சென்னை ராயபேட்டையில் மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட துப்புரவு தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது.

சீர்காழியில் 15 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

சீர்காழியில் 15 வயது பள்ளி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

ஆணவ சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞன் ஆணவக் கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆணவ சாதிப் பெண்ணை காதலித்ததற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது-  தோழர் பெ. மணியரசன்

தீர்ப்புரையின் செயலாக்கப் பகுதியில் (முடிவுரையில்), 796ஆம் பத்தியில் “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது” என்று சரியாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் “நம்பிக்கையை”த்தான் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.

பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளது. 

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சிறைக் காவலர்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 35 வயது மதிக்கத்தக்கத் தலித் பெண்ணை சிறைக் காவலர்கள் இருவர் உட்பட மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வோம்- தோழர் செல்வி

இந்த வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மனிதி அமைப்பின் ஆதரவுடன் பெண்கள் செல்வார்கள் என்று அவ்வமைப்பினை சேர்ந்த தோழர் செல்வி தெரிவித்திருக்கிறார்.

ஈழத்தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே நியாயம் மறுக்கப்படும் கொடுமை

திருச்சி மத்திய சிறைச்சாலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு  உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மே 17 இயக்க தோழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஈழத்தமிழர்களில் 20 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியை விடச் சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள்- மே 17 இயக்கம்

இவ்வளவு பெரிய சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் இராயபுரம் ஆகிய வெறும் நான்கு இடங்களில் மட்டுமே காற்று மாசை கண்காணிக்கும் அட்டோமேடிக் நிலையங்கள் இருக்கிறதாம் என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம்

பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்வரும் 11ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது ஆணவ சாதியினர் கொடூர தாக்குதல்

குஜராத் மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உணவகத்தில் சாப்பிடும்போது உணவை இரைத்ததாக ஆணவ சாதியினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு: தொடரும் தீண்டாமை

கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் இறந்த உடலை ஆணவ சாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு கிளம்பியதால், இறந்த உடலைச் சாக்கடை வழியாக எடுத்துச் சென்ற அவல நிலை நடந்துள்ளது.

கல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மே 17 இயக்கத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

தமிழர்களின் நெறி நூலை இந்துத்துவ நூலாகக் காட்டுகிற வேலையை பாஜக செய்துவருகிறது- திருமுருகன் காந்தி

தமிழர்களின் நெறி நூலை இந்துத்துவ நூலாகக் காட்டுகிற வேலையை பாஜக செய்துவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

மாற்றுச் சாதிப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞன் ஆணவக் கொலை

சென்னை பெரும்பாக்கத்தில் காதலித்துச் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞன் நேற்று (நவம்பர் 05) ஆணவக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது

பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம், பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலைக் கண்டித்து நேற்று (நவம்பர் 05) விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையே- மே பதினேழு இயக்கம்

சில கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் நியாயமானவையே. அதனால் மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாமல், உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று  மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் - தன்னாட்சித் தமிழகம்

ஐந்து, எட்டு வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தன்னாட்சித் தமிழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலித் பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த ஆணவ சாதியினர்

தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்த சில ஆண்கள்.

பசுக்களைச் சரியாகப் பராமரிக்கவில்லை- அதிகாரிகள் பணியிடை நீக்கம் 

உத்தரப் பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாக்கும் கோசாலைகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரைப் பதவியைவிட்டுத் தூக்கியிருக்கிறது உ.பி அரசு.

நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மீனவர்களைக் கைவிடாதே- மே 17 இயக்கம்

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 150-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்களை உடனே மீட்டெடுக்கவேண்டும் என்று மே 17 இயக்கத்தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவன் மணிகண்டனின் நீக்கத்தை ரத்து செய்யவேண்டும்

5, 8ஆம் வகுப்பு வகுப்பிற்கான பொதுத்தேர்வு அறிவிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய சென்னை நந்தனம் கல்லூரி மாணவர் மணிகண்டனைக் கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் நளினி நான்காவது நாளாக உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்றுவரும் நளினி கடந்த நான்கு நாட்களாகச் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்.

சுஜித் மரணம் நமக்குச் சொல்லும் பாடங்கள் என்ன?: பூவுலகின் நண்பர்கள் 

ஆழ்துளைக் கிணறுகள் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம், நீர் மேலாண்மை தோல்வியில் முடிந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனதுதான். இனிமேலாவது நீர் மேலாண்மையில் நாம் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞனை தட்டிக்கேட்டதற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், சகோதரனும் தாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

நந்தனம் கல்லூரி மாணவர் மணிகண்டன் நீக்கத்தை ரத்து செய்- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 

சென்னை நந்தனம் கல்லூரி மாணவர் மணிகண்டன் நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஐஐடி-ஹைதராபாத்தில் மாணவர் தற்கொலை- ஒரு வருடத்தில் மூன்றாவது தற்கொலை

ஹைதாபாத்தில் உள்ள ஐஐடி-யில் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர் இன்று (அக்டோபர் 29) கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தலித் இளைஞர்களைத் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவேரிப்பாக்கத்தில் கள்ளசாரயம் காய்ச்சிவந்த இந்து முன்னணியினரை அம்பலப்படுத்தியதற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நவம்பர் 1ஆம் தேதி மக்கள் மன்ற தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

மனித உயிர்கள் இங்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதன் வெளிபாடு: சுர்ஜித்தின் உயிரிழப்பு

நாட்டு மக்கள் சுர்ஜித்தின் உயிரிழப்பை எண்ணிக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் எங்குப் பார்த்தாலும் `மனித்துவிடு சுஜித்` என்ற வாசகம்.

கச்சநத்தம் படுகொலை: ஜாமின் கோரிய மனு தள்ளுபடி

கச்சநத்தத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காக 3 பேரைக் கொலை செய்த சாதிவெறியர்கள் கோரிய ஜாமினை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தலித் இளைஞர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

காவேரிப்பாக்கத்தில் கள்ளசாரயம் காய்ச்சிவந்த இந்து முன்னணியினரை அம்பலப்படுத்தியதற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

கள்ளச் சாராயம் காய்ச்சி வந்த கும்பலை அம்பலப்படுத்தியதற்காக மக்கள் மன்ற தோழர்கள் மீது தாக்குதல்

சாதிய மதவாத சக்திகளை எதிர்த்து மக்களின் உரிமைகளுக்காக களமாடி வரும் அமைப்புகளில் ஒன்றாக திகழ்ந்துவரும் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த தோழர் விவேக் மீது இந்துமுன்னணியினரும், பாமகவினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: போராட்டம் நடத்திய மாணவர்கள் நீக்கம்

5, 8ஆம் வகுப்பு வகுப்பிற்கான பொதுத்தேர்வு அறிவிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்களை நீக்கியுள்ளது கல்லூரி நிர்வாகம்.

பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வா ?- வலுக்கும் கண்டனங்கள்

நுழைவுத்தேர்வு ஏழை கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் செயல். நுழைவுத்தேர்வு கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வு தான் உதாரணம்.

தமிழன் தொலைக்காட்சி ஊழியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தமிழன் தொலைக்காட்சி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்திய பாஜக அரசே! எதிர்ப்பை மீறி புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலாதே-மே 17 இயக்கம்

10ஆம் வகுப்பு முடித்தவுடனேயே ஏழை மாணவர்களைக் கல்லூரிப் படிப்பிலிருந்து மாற்றி தொழிற்கல்விக்கு அனுப்புவதையே புதிய தேசியக் கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவரைச் சாதிப் பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்திய  உதவி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தலித்துகளுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரிப்பு - என்சிஆர்பி அறிக்கையில் தகவல்

இந்தியாவிலேயே தலித் மக்களுக்கு எதிரான கலவரங்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

கல்வி நிறுவனங்களில் மத ரீதியில் மாணவர் குழுக்கள் அமைப்பதைத் தடுக்க வேண்டும்- கல்வித் துறை

கல்வி நிறுவனங்களில் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கச் செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மலம் அள்ளுவது மனிதர்கள் செய்யும் வேலை கிடையாது என்று முற்றிலுமாக தடை செய்யவேண்டும்- எழுத்தாளர் மதிமாறன்

கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பொது பிரச்னையாக இருக்கக்கூடிய அனைத்து பிரச்னைக்கும் முதலில் நிற்கிறார்கள். ஆனால் கையால் மலம் அள்ளும் பிரச்னை வந்தால் மட்டும் அந்த மக்கள் மட்டும்தான் போராடுகிறார்கள்.

ஒரு சமூகத்தினருக்கு மழை எவ்வளவு சிக்கலானது என்பதை மஞ்சள் உணர்த்துகிறது- பா. ரஞ்சித்

மழை எவ்வளவு அழகானது என்று சொல்லும் காலகட்டத்தில், ஒரு சமூகத்தினருக்கு மழை எவ்வளவு சிக்கலானது என்பதை மஞ்சள் நாடகத்தை விட மிக அற்புதமாகப் பேசமுடியாது.

தலித் மாணவர் மீது ஆணவ சாதி மாணவர் தாக்குதல்-  நடவடிக்கை எடுக்கக்கோரி தீஒமு தோழர்கள் வலியுறுத்தல்

இந்த சம்பவம் அறிந்த இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர்களும் (SFI), தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த தோழர்களும் பாதிக்கப்பட்ட மாணவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனை பிளேடால் கிழித்த ஆணவ சாதி மாணவன்

மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்தும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனின் முதுகில் ஆணவ சாதியைச் சேர்ந்த மாணவன் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

தலித் பள்ளி மாணவரின் ஆணவ படுகொலையைத் தற்கொலையாக மூடி மறைக்கும் காவல்துறை

கோபி கடத்தி செல்லப்பட்டதையும், அடித்துத் துன்புறுத்தப்பட்டதையும் சிலர் நேரில் பார்த்துள்ளனர். இவர்களை காவல்துறை விசாரிக்க வில்லை.

மனித கழிவை மனிதனே அகற்றுவது இந்தியாவைத் தவிர உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லை- இயக்குனர் ராம்

இன்றளவிலும் இந்தியாவில் மலம் அள்ளுவது ஒரு சாதி பிரிவினரின் தொழிலாக இருப்பது என்பது அரச பயங்கரவாதம் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

தலித் மக்கள் பயன்படுத்தும் பொது பாதையை அடைத்த ஆணவ சாதியினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் பொது பாதையை ஆணவ சாதியினர் குழி தோன்றி அடைத்துள்ளனர்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா -திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எதிர்வரும் 12ஆம் தேதி திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த 6 முதியவர்களின் வாயில் மனித மலத்தை திணித்த கொடுமை

தலித் சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் 6 பேரை அடித்துத் துன்புறுத்தி, பற்களைப் பிடுங்கி, அவர்களின் வாயில் மனித மலத்தைத் திணித்த 29 பேரை ஒடிசா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆணவ சாதியினரால் தாக்கப்பட்ட சுந்தருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- எவிடன்ஸ் கதிர்

கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்காக ஆணவ சாதியினரால் தாக்கப்பட்ட சுந்தருக்கு அரசு வேலையும், ரூ.5 இலட்சம் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அசுரன் திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீது இந்து அமைப்பினர் புகார்

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் அசுரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் மீது அகில பாரத இந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காகத் தலித் இளைஞன் மீது அரிவாள் வெட்டு

தேனி மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அவரை ஆணவ சாதியினர் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

பிரனாயை ஆணவக் கொலை செய்த மாருதி ராவ் பொதுக்கூட்டத்தில் உரை

பிரனாயை ஆணவக் கொலை செய்த மாருதி ராவ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடம் உரையாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மனித கழிவை மனிதனே அள்ளுவது தேசிய அவமானம்- இயக்குனர் பிரம்மா

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும், மனித கழிவுகளை மனித அள்ளும் இழிவு நிலை இன்றும் நீடிக்கிறது என்பது தேசிய அவமானம் என்று இயக்குனர் பிரம்மா தெரிவித்துள்ளார்.

பாசிச பாஜக ஆட்சி குறித்து இஸ்லாமியப் பெண்களுடன் கலந்துரையாடல்

மனிதி அமைப்பு ஒருங்கிணைக்கும் இஸ்லாமியப் பெண்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 12ஆம் தேதி சென்னையில் உள்ள SDPI அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி இஸ்லாமிய இணையர் மீது தாக்குதல்

ஹரியானாவில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த இணையரை `ஜெய் ஸ்ரீ ராம்` என்று சொல்லச் சொல்லி இரண்டு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்- மஞ்சள் நாடகம்

அக்டோபர் 19ஆம் தேதி சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பிலான மஞ்சள் நாடகம் சென்னையில் நடைபெறுகிறது.

சாதியை ஒழிப்போம் கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது இப்படி ஒரு தண்டனையைச் சுமத்துவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது. மனிதனை மனிதனாக மதிக்கக்கூடிய யாரும் இந்த விசயத்தை ஏற்க முடியாது என்று எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்பு திருமணம்: தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திக் குடியிருப்பை நாசம் செய்த ஆணவ சாதியினர்

ஆந்திராவில், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர் மீதும், தலித் சமூகத்தைச் சேர்ந்த அவர்களது உறவினர்கள் மீதும் பெண்ணின் வீட்டைச் சேர்ந்த ஆணவ சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு - மே 17 இயக்கம்

மத்தியில் பிஜேபியின் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து லாபத்தில் இயங்கும் பல்வேறு அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் வேலையைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது பிஜேபியின் மோடி அரசு என்று  மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் உள்ள மாணவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத வேண்டும்- இந்திய மாணவர்கள் சங்கம்

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய அடூர் கோபாலகிருஷணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைக்  கண்டித்து நாடெங்கும் உள்ள மாணவர்கள் மோடிக்குக் கடிதம் எழுத வேண்டும்.

கூலியை கேட்டதற்காக 60 வயது முதியவரின் விரல்களை வெட்டிய காண்ட்ரக்டர்

நாக்பூரில், வேலை செய்த கூலியைக் கேட்டதற்காக 60 வயது முதியவரின் கை, கால் விரல்களை வெட்டியுள்ளது காட்டுமிராண்டித் தனமான கும்பல் ஒன்று.

ஹரியானாவில் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த மூவரில் ஒருவர் கைது

ஹரியானாவில் திருமணமான பெண் ஒருவரை மூன்று பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் போட்டுச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது.

இறந்த பசுவின் உடலை எடுத்துச்சென்ற துப்புரவுத் தொழிலாளி மீது தக்குதல் நடத்திய பாஜக தலைவர்

ராஜஸ்தான் மாநிலத்தில், இறந்த பசுவின் உடலை எடுத்துச்சென்ற துப்புரவுத் தொழிலாளி மீது பாஜக தலைவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

ஆளுமைகள் மீது தேசதுரோகப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது- தமுஎகச

பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்தாளர்களை மவுனமாக்கவும், சிறுமைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தலித் மாணவரைத் தக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது

கடலூரில் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கல்லூரி மாணவரைக் கடுமையாகத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த நீரையும் நிலத்தையும் பாழாக்க பார்க்கிறார்கள்: பேராசிரியர் த.செயராமன்

இந்த மண்ணில் நம் சந்ததிகள் தொடர்ந்து வாழ, எண்ணெய் நிறுவனங்கள் இன்று அளிக்கும் அற்பப் பரிசுகளை ஏற்க மறுத்து விடுங்கள்! அப்படியின்றி பரிசுகளையோ, பணத்தையோ ஏற்பது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்- கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர்

தன் மகனை விட்டு பிறிந்து செல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்று பூமிகாவை மிரட்டியுள்ளனர்.

காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது- மே 17 இயக்கம்

காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது என்று மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாவை பார்த்ததற்காக தலித் இளைஞன் அடித்துக் கொலை

குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கோவில் திருவிழாவில் நடைபெற்ற கர்பா நிகழ்வைப் பார்த்ததற்காக 21 வயது தலித் இளைஞன் ஆணவ சாதியினரால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தலித் மாணவரைத் தக்கிய ஆசிரியரைக் கைது செய்

கடலூரில் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கல்லூரி மாணவர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம்

எதிர்வரும் 7ஆம் தேதி சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிராகச் சென்னையில் மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும் எனக் கடிதம் எழுதினால் தேசத்துரோக வழக்கு

ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும் எனப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளைகளுக்கு எல்லாம் மூத்த கொள்ளை

கடற்கரை மணல், ஆற்று மணல் மற்றும் பிற சிறிய, பெரிய கனிமங்களான கிரானைட் மற்றும் பாக்சைட் ஆகியவற்றை விஞ்ஞானப்பூர்வமற்ற முறையில் சுரங்கம் அமைத்து எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நீர் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

போரில் கொலைதான் முக்கியம் என்று போதிப்பதுதான் பகவத்கீதை- எழுத்தாளர் மதிமாறன்

போரில் கொலைதான் முக்கியம் என்று போதிப்பதுதான் பகவத்கீதை. இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானது என்று எழுத்தாளர் மதிமாறன் தெரிவித்துள்ளார்.

வழியை விட்டு நில்லுங்கள் என்று சொன்ன தலித் இளைஞரின் காலை உடைத்த காவல்துறையினர்

திருச்சியில் சாலையை அடைத்து நின்றுகொண்டிருந்த காவல்துறையினர் சிலரை வழியை விட்டு நில்லுங்கள் என்று சொன்ன தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தி அவரின் காலை காவல்துறையினர் உடைத்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை: திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று (அக்டோபர் 02) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலித் மக்கள் அமர்ந்ததற்காகப் பேருந்து நிலையத்தை உடைத்தெறிந்த சாதி வெறியர்கள் 

பேருந்து நிலைய நிழற்குடையில் தலித் மக்கள் அமர்ந்தார்கள் என்பதற்காக அந்த நிழற்குடையை உடைத்தெறிந்த சாதி வெறியர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று கொள்கை முடிவெடுக்கவேண்டும்- பூவுலகின் நண்பர்கள்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று தமிழக முதல்வர் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று  பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.சி/எஸ்.டி மாணவ விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகள் மற்றும் பள்ளிகளை நவீனப்படுத்தக் கோரி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் இன்று (அக்டோபர் 01) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. 

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத் தீர்ப்பு: வடமாநிலங்களில் ரத்தம் சிந்தி இறந்துபோன தோழர்களின் ரத்ததிற்கு கிடைத்த நீதி

அந்த ஒரே ஒரு சட்டம்தான் தலித் மக்களை வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கக்கூடிய சட்டமாக இருக்கிறது. அதையும் அரசு பறிக்கப்பார்த்தது.

டாஸ்மாக் கடையைப் புதிதாகத் திறக்காதே-  மக்கள் அதிகாரம் போராட்டம்

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டை வாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதைக் கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய இரு காவலர்கள் கைது

நெல்லையில் டிக்கெட் வாரண்ட் கேட்ட அரசுப் பேருந்து நடத்துநரை பேருந்துலையே வைத்துத் தாக்கிய இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலை செய்த ஊதியத்தைக் கேட்ட பழங்குடியின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

தெலுங்கானாவில் வேலை செய்த ஊதியத்தைக் கேட்ட பழங்குடியின பெண்ணை மூன்று நாட்களாக வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் ஆணவ சாதியினர்.

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் கண்டன இயக்கம்

மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து அக்டோபர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தலித் சிறுமிக்கு ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது

ஒரு மாதத்துக்கு முன்னர், ரோஷினி அழுது கொண்டே வீட்டுக்கு வந்தாள். விசாரிக்கும்போது, ஹக்கீம் யாதவ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தான்.

பாடப்பிரிவில் பகவத்கீதை சேர்க்கப்பட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய தோழர்கள் கைது

பொறியியல் பாடப்பிரிவில் பகவத்கீதை சேர்க்கப்பட்டத்தைக் கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட தோழர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

தென்னிந்திய மக்கள் நாடக விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் சென்னை கேரள சமாஜம் இனைந்து ”தென்னிந்திய மக்கள் நாடக விழாவை” நடத்துகின்றனர்.

பார்ப்பனிய திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும்- ம.க.இ.க 

பார்ப்பனிய திணிப்பு முயற்சியை அனைத்து முற்போக்கு, ஜனநாயக  இயக்கங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகழ்வாய்வு தற்போது டிரண்டிங் என்பதால் குழந்தைகளுக்கு விடுமுறையில் அதைக் கற்பித்துவிடுவீர்களா? - ஆசிரியர் மகாலட்சுமி

நீங்கள் சொல்லும் புராணங்கள் எவையென்று யூகிக்க முடியவில்லை, மதம் சார்ந்ததா? மொழி சார்ந்ததா?  என்று அரசுப் பள்ளி ஆசிரியர்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 

இந்தியாவின் முதல் பால்புதுமையினர் இலக்கியவிழா

பல புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாற்றிலும் பால்புதுமையினர் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் அவை பால்புதுமையினரைக் கொச்சைப்படுத்துவதாகவே இருப்பதால் வரலாற்றிலுள்ள அந்தக் கதைகள் அனைத்தும் திருப்பி எழுதப்படவேண்டும்.

கிராமத்தை விட்டு வெளியேற விரும்பும் கொல்லப்பட்ட தலித் குழந்தைகளின் குடும்பத்தினர்

பொது வெளியில் மலம் கழித்ததற்காக கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் குடும்பம் தற்போது வாழ்ந்துவரும் பாவ்கேதி கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

பள்ளியிலிருந்து தனது குழந்தைகள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து தலித் தந்தை போராட்டம்

”என் குழந்தைகளுக்கு நீதி கிடைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்”.

பொறியியல் பாடத்தில் பகவத் கீதை என்ற பெயரில் வருணாசிரமத் திணிப்பு - மக்கள் அதிகாரம் கண்டனம் 

மோடி அரசின் மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியல் படிப்பில் திணிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப்பொருளாளர் தோழர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.

எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை அதனால்தான் குழந்தைகள் அங்கு சென்றார்கள் - கொல்லப்பட்ட தலித் குழந்தையின் அப்பா

12 வயது ரோஷ்ணி, 10 வயது அவினாஷ் என்ற இரு குழந்தைகளும் தங்களது உடல்களின் இயற்கை அழுத்தத்திலிருந்து விடுபட முயன்றிருக்கிறார்கள். தங்களின் உடல்களின் இயற்கையான இயக்கமே முடிந்துபோகும் என்று அவர்கள் அப்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

பகவத்கீதை மனித நேயத்திற்கு எதிரானது- திருமுருகன் காந்தி

அண்ணாவின் பெயரில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தில் அண்ணா எதிர்த்த தத்துவ மரபைக் கொண்டுவந்து திணிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.