நிகழ்வுகள்

அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !

இந்த நெருக்கடி காலத்தில் மக்களுக்கான ஒரு படைப்பை சிறுகதைகளை எழுதி, வெளியீட்டு விழாவை வருகிற 10-1-2021 அன்று தோழர்கள் முன்னிலையில் உங்களோடு பிரசாத் லேபில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது..

தன்னிகரற்ற தமிழ்ஸ்டுடியோவின் 13 ஆம் ஆண்டு தொடக்கம்.... 

கலை மனித வாழ்வின் ஆத்மார்த்தமான கொண்டாட்டம், மக்களின் வலி, காதல், கோபம், இயலாமை, உரிமை  சமத்துவம் என அனைத்து இயல்புகளையும் காட்டுவதற்கான வழித்தடம் அதன் நவீன நீட்சியாக சினிமா.

மானுடத்திற்கு எதிரான மநு

தோழர்  முனைவர், திருமாவளவனை ஆதரித்தும் மானுடத்திற்கு எதிரான மனுவை எதிர்த்தும் தமிழ் ஸ்டுடியோ மற்றும் தம்மம் சிந்தனையாளர் பேரவை இணைந்து நடத்தும் ஒருங்கிணைப்பு விளக்கக் கூட்டம் ஆறு மணி அளவில் திணை நில வாசிகள் நாடக குழுவின் பெண்ணியத்தை மையப்படுத்திய நாடகத்தோடு சிறப்பாகத் தொடங்கியது.

இயக்குனர் அரு‌ண்மொழி நினைவு விருது!

ஒரு மிகப்பெரிய மரம் கீழே விழுந்து விட்டது ஒரு பறவையின் சிறகு முறிந்துவிட்டது  என்று சென்ற வருடம் இதே நாளில் இயக்குநர் அருண்மொழி அவர்களின் மறைவையொட்டி இயக்குனர் மிஷ்கின் கண்ணீருடன் கூறினார். 

திருநங்கைகள் திரைப்பட விழா - விழுப்புரம்

எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோ மையத்தில் திருநங்கைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது.

ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபு நினைவு திரையிடல் - அக்ரஹாரத்தில் கழுதை

நாளை மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபுவின் நினைவு திரையிடலாக அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் திரையிடப்படுகிறது.

ஸ்லோவோகியன் படம் - அருண்மொழி நினைவாக திரையிடல் மற்றும் இயக்குனருடன் கலந்துரையாடல்

நாளை (டிசம்பர் 14) மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் சுயாதீன கலைஞர் அருண்மொழி இறுதியாக பணிபுரிந்த ஆவணப்படத்தை அவரது நினைவாகத் திரையிடுகிறோம்.

தமிழ் ஸ்டுடியோவின் மாதாந்திர திரையிடல் -விழுப்புரம்

உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் தேதி விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமா மையத்தில் `விசாரணை` திரைப்படம் திரையிடப்படுகிறது.

Learn from Masters - ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - Coen Brothers படங்கள் திரையிடல்

Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடலில், எதிர்வரும் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை தமிழ் ஸ்டுடியோவில், இயக்குனர்கள் கோயன் பிரதர்சின் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. 

விழுப்புரத்தில் இந்தியாவின் முதல் தலித் திரைப்பட விழா 

எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு விழா தொடக்கவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் தலித் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.

சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் - புதிய தொடர் திரையிடல் நிகழ்வு

சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் என்கிற புதிய தொடர் திரையிடல் நிகழ்வில் எதிர்வரும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் அனிமேஷன் படங்கள் திரையிடப்படுகிறது.  

ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - ரோபெர் ப்ரெஸ்ஸோன் படங்கள் திரையிடல்

Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடலில் எதிர்வரும் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் தமிழ் ஸ்டுடியோவில் இயக்குனர் ரோபெர் ப்ரெஸ்ஸோனின் படங்கள் திரையிடப்படுகிறது. 

நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விஸ்வநாதனுடன் கலந்துரையாடல்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நகைச்சுவை நடிகர் சாம்ஸுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

விழுப்புரத்தில் - தமிழ் ஸ்டுடியோ தொடக்க விழா

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மதியம் 2 மணிக்கு விழுப்புரத்தில் மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா நடைபெறவிருக்கிறது.

இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம்

எதிர்வரும் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

Learn from Masters- ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - ஹிட்ச்காக் படங்கள் திரையிடல்

எதிர்வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பியூர் சினிமாவில் ஹிட்ச்காக் படங்கள் திரையிடப்படுகிறது.

நடிகர் சார்லி நடத்தும் நடிப்பு பயிற்சிப்பட்டறை

எதிர்வரும் 20ஆம் தேதி நடிகர் சார்லி ஒரு நாள் நடிப்பு பயிற்சிப்பட்டறையை நடத்துகிறார். 

ஒரே கதாபாத்திரம் - எளிமையான சினிமா - திரைக்கதை பயிற்சிப்பட்டறை

எதிர்வரும் 6ஆம் தேதி தமிழில் முதல்முறையாக ஒரே கதாபாத்திரத்தில் திரைக்கதையை நகர்த்திச் சென்ற இயக்குனர் R.அரவிந்த் சினிமா பயிற்சிப்பட்டறை” நடத்தவிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல்

எதிர்வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில், படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பெரியாரும் பகுத்தறிவும்

எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் ”தமிழ் சினிமாவில் பெரியாரும் பகுத்தறிவும்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கம் பெரியார் திடலில் நடைபெறவிருக்கிறது.

இயக்குனர் K.பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இயக்குநர், நடிகர் பாக்யராஜ் ”திரைக்கதை எழுதுவதை எப்படி?”என்பது குறித்த  பயிற்சிப்பட்டறை நடத்துகிறார்.

பௌர்ணமி இரவு: பிங்க் திரைப்படம் திரையிடல்

நாளை (ஆகஸ்ட் 15) இரவு 9 மணிக்கு பியூர் சினிமா மொட்டைமாடியில் `பிங்க்` திரைப்படம் திரையிடப்பட்டு விவாதம் நடைபெறவிருக்கிறது.

சினிமா உருவாக்கம் - மிக முக்கியமான செய்முறை பயிற்சி - இயக்குநர் மிஷ்கின்

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் இயக்குநர் மிஷ்கின் சினிமா உருவாக்கம் குறித்த மிக முக்கியமான செய்முறை பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துகிறார். 

இயக்குனர் V.J கோபிநாத் மற்றும் கதையாசிரியர் பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல்

எதிர்வரும் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் `ஜீவி` திரைப்படத்தின் இயக்குனர் V.Jகோபிநாத் மற்றும் அப்படத்தில் கதை, திரைக்கதை, எழுத்து ஆகியவற்றில் பணிபுரிந்த பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது.

இயக்குநர் மிஷ்கின் நடத்தும் இரண்டு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை - முற்றிலும் மாறுபட்ட முயற்சி

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் இயக்குநர் மிஷ்கின் முற்றிலும் மாறுபட்ட வடிவில் சினிமா பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துகிறார். 

ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது திரைப்படங்கள் திரையிடல்

எதிர்வரும் 21ஆம் தேதி பியூர் சினிமாவில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

இந்தியாவின் முதல் உதவி இயக்குநர்கள் பயிற்சி மையம் தொடக்க விழா

எதிர்வரும் 14ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமா புத்தக அங்காடியில், இந்தியாவின் முதல் உதவி இயக்குனர்களுக்குகான பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெறுகிறது. 

படச்சுருள் 5ஆம் ஆண்டு தொடக்க விழா- முழுநாள் நிகழ்வு

தமிழ்ஸ்டுடியோவின் படச்சுருள் இதழ் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் 30ஆம் தேதி தமிழ்ஸ்டுடியோவில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் ”திரு”வின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மேற்பார்வையில், இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை ஜுலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. 

”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கலந்துரையாடல்

எதிர்வரும் 23ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில், சமீபத்தில் வெளியான ”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கதை எப்படி காட்சியாகிறது?: சினிமா பயிற்சிப்பட்டறை 

இந்த மாதம் 9ஆம் தேதி இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்திருக்கிறோம். 

இயக்குநர் லெனின் பாரதியின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பியூர் சினிமாவில் இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது.

கார்ப்பரேட் பாசிசத்தையும் சனாதனத்தையும் வீழ்த்த வீதியை நமது போராட்டக்களமாக்குவோம் 

எதிர்வரும் 31ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் "கார்ப்பரேட் பாசிசத்தையும் சனாதனத்தையும் வீழ்த்த வீதியை நமது போராட்டக்களமாக்குவோம்" என்ற தலைப்பில் காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் பேரணி நடைபெறுகிறது.

மான்ஸ்டர் திரைப்பட இயக்குனர் நெல்சன் வெங்கடேனுடன் கலந்துரையாடல்

சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேனுடன் கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நடைபெறவுள்ளது.

பாலுமகேந்திரா விருது விழா 2019

2019ஆம் ஆண்டிற்கான பாலுமகேந்திரா விருது விழா எதிர்வரும் 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு பிரசாத் லேப் 70 MM திரையரங்கில் நடைபெற இருக்கிறது. 

இயக்குநர் மகேந்திரன் படச்சுருள் சிறப்பிதழ் வெளியிட்டு விழா 

எதிர்வரும் சனிக்கிழமை (மே 04) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பியூர் சினிமாவில் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டு,  படச்சுருள் மகேந்திரன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

இயக்குநர் மகேந்திரன் படச்சுருள் சிறப்பிதழ் வெளியீடு & திரைப்படங்கள் திரையிடல்

பியூர் சினிமாவில் எதிர்வரும் சனிக்கிழமை (மே 04) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டு, படச்சுருள் மகேந்திரன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

படத்தொகுப்பு & பிலிம் மேக்கிங் குறித்து எடிட்டர் B. லெனின் நடத்தும் பயிற்சிப்பட்டறை 

பியூர் சினிமாவில் வருகிற மே 5ஆம் தேதி, இந்தியாவின் தலைசிறந்த படத்தொகுப்பாளரான எடிட்டர் B. லெனின் பிலிம் மேக்கிங் பற்றிய ஒருநாள் பயிற்சிப்பட்டறை நடத்துகிறார்.

மெஹந்தி சர்க்கஸ் இயக்குனரோடு கலந்துரையாடல் 

சமீபத்தில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் ராஜேந்திரனுடன் கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் நடைபெறவுள்ளது.

 பாலுமகேந்திரா விருது  - தேதி நீட்டிப்பு  

நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க பாலுமகேந்திரா விருதுக்கான குறும்படங்களை அனுப்ப ஏப்ரல் 28ஆம் தேதி வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

உலக புத்தக நாள் - திரையிடல் - அக்னஸ் வர்தா நினைவுக்கூறல் 

நாளை (ஏப்ரல் 23) காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை பியூர் சினிமாவில் உலக புத்தக நாள் திரையிடலாக ,உலக சினிமா தடத்தை மாற்றியமைத்த ''பிரெஞ்சு புதிய அலை''யைச் சேர்ந்த இயக்குநர்களுள் முக்கியமானவரான அக்னஸ் வர்தாவின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

கே.ஜி.ஜார்ஜ் படச்சுருள் சிறப்பிதழ் வெளியீடு & திரைப்படங்கள் திரையிடல்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 07) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பியூர் சினிமாவில், கே.ஜி.ஜார்ஜ் படச்சுருள் சிறப்பிதழ் வெளியீடு மற்றும் அவரது திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

நடனக்கலைஞர் தினேஷ் குமாருடன் கலந்துரையாடல்

பியூர் சினிமாவில், எதிர்வரும் 31ஆம் தேதி மாலை 7 மணிக்குத் தேசிய விருது பெற்ற நடனக்கலைஞர் தினேஷ் குமாருடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. 

திணை நிலவாசிகளின் காட்லா கலைத்திருவிழா

உலக நாடக தினவிழாவை முன்னிட்டு, எதிர்வரும் 27ஆம் தேதி (புதன் கிழமை), திணை நிலவாசிகள் குழுவினர் நடிக்கும் நாடகம் தமிழ் ஸ்டுடியோவில் அரங்கேற்றப்பட உள்ளது.

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ''''பாலுமகேந்திரா விருது" - 2019

மாற்று சினிமாவிற்கான கலமாக ஓயாமல் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ் ஸ்டுடியோ, ஒவ்வொரு ஆண்டும் இயக்குநர் பாலுமகேந்திரா பெயரில் குறும்பட விருது விழாவை, அவரது பிறந்த தினமான மே 19ஆம் நடத்திவருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் மே 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

திரைக்கதை உருவாக்கம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் நடத்தும் பயிற்சிப்பட்டறை

சினிமா உருவாக்கம், சினிமாவும் வாசிப்பு, சினிமாவில் லாஜிக் அடிப்படை, திரைக்கதை உருவாக்கம் போன்ற தலைப்புகளில் எதிர்வரும் 23ஆம் தேதி காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை, பியூர் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறன் நடத்தும் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் நடத்தும் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை 

வருகிற 23ஆம் தேதி காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை, பியூர் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறன் நடத்தும் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.

மக்களின் வாழ்வியலுக்கான நல்ல சினிமாவை உருவாக்க வேண்டும்- கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன் நூல் வெளியீட்டு விழா

கலை மக்களுக்கானது. கலை உட்படக் கையில் கிடைக்கின்ற ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம். ஆகவே நீண்ட நெடு காலமாக இங்கு இறுகிக் கிடக்கிற, சனாதன சமூக அமைப்பு முறையைத் தகர்க்கமுடியும் என்ற அடிப்படையில் கலையைப் பயன்படுத்துவோம்.

விதை இயற்கை அங்காடி வேளச்சேரி கிளை தொடக்க விழா

தமிழ் ஸ்டுடியோவின், "விதை" இயற்கை அங்காடி வேளச்சேரி  கிளையின் தொடக்க விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 03) மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது.

கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன் நூல் வெளியீட்டு விழா 

தோழர் திருவாசகத்தின் எழுத்தில், தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி பதிப்பகம் வெளியிட்ட கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தடம் பதித்த ''சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019'' நிறைவு

2019-ஆம் ஆண்டின் சென்னை சுயாதீன திரைப்பட விழா 3 நாட்கள் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

IFFC-யில் பால்புதுமையினர் சார்ந்த திரைப்படங்கள் ஒரு பார்வை!

பால்புதுமையினரைப் (LGBTQ / Queer persons) பற்றி வெளியான திரைப்படங்களும், உரையாடல்களுமாக இந்நிகழ்வு இருந்தது.

இந்தியாவின் முதல் க்ரவுட் ஃபண்டிங் திரைப்பட விழா

இதுவரை நீங்கள் பார்த்திராத, ஒரு புதிய சினிமா உலகை, பல புத்தம்புதிய அம்சங்களுடன் காட்டவிருக்கும் இந்தச் சுயாதீன திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ஏற்கனவே நூற்றுக்கணக்கான நண்பர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.

சென்னை சுயாதீன திரைப்பட விழாவிற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது

எதிர்வரும் 8, 9,10 ஆகிய தேதிகளில் சென்னையில் சுயாதீன திரைப்பட விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. 

போன்ஸ்லே முதல் நியூட் (Nude) வரை - ''''சென்னை சுயாதீன திரைப்படவிழாவில்''''

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ''''சென்னை சுயாதீன திரைபட விழாவில்'''', தொடக்கப்படமாக ''போன்ஸ்லே'' (Bhonsle)  திரைப்படமும், நிறைவு படமாக ''நியூட்'' (Nude) திரைப்படமும் திரையிடப்படுகிறது.

சென்னை சுயாதீன திரைப்பட விழாவிற்குத் தயாராகுங்கள் 

இந்தத் திரைப்படவிழாவில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள நண்பர்கள் பியூர் சினிமா அலுவகத்தை தொடர்புகொண்டு உங்கள் டிக்கெட்டை வாங்கிவிடுங்கள்.

இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை- IFFC நிதிக்காக

இயக்குனர் மிஷ்கின் ஒரு முழு இரவு திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சிப்பட்டறை நடத்திக்கொடுக்க உள்ளார்.

திரைப்பட உருவாக்கம் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் கலந்துரையாடல்

பியூர் சினிமாவில் எதிர்வரும் 27ஆம் தேதி, திரைப்பட உருவாக்கம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோ மொய்த்திரை: ஆரண்ய காண்டம் திரைப்படம் திரையிடல்

தமிழின் மிக முக்கியமான திரைப்படமான ஆரண்ய காண்டம் திரைப்படம், திரையரங்கில் வெளியான வெர்சனில் மீண்டும் ஒரு முறை தமிழ் ஸ்டுடியோவில் திரையிடப்படுகிறது.

நடிகர் நாசரின் நடிப்பு பயிற்சி பட்டறை

எதிர்வரும் சனிக்கிழமை (ஜனவரி 05) காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை பியூர் சினிமாவில் நடிகர் நாசர் நடத்தும் நடிப்பு பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

புத்தாண்டை சமத்துவ முழக்கத்தோடு வரவேற்ற வானம் திருவிழா!

நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வானம் கலை திருவிழா நேற்று அதன் உச்சகட்ட உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சென்னையில் இன்று தொடங்கியது ''வானம் கலை திருவிழா''

கலைகளின் ஊடாக சாதியத்துக்கு எதிரான முன்நகர்வை ஏற்படுத்தும் நோக்கில் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்திருக்கும் மூன்று நாள் தொடர் நிகழ்ச்சியான ''வானம் கலை திருவிழா'' சென்னையில் இன்று தொடங்கியது.

நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 01) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பியூர் சினிமாவில் ''நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு'' பயிற்சிப்பட்டறை நடைபெறவுள்ளது.

புத்தாண்டு நிகழ்ச்சியாகத் தமிழ் ஸ்டுடியோவில் நாடகம் அரங்கேற்றம்

எதிர்வரும் திங்கள் கிழமை (டிசம்பர் 31), மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை புத்தாண்டை வரவேற்கும் விதமாகத் தமிழ் ஸ்டுடியோவில் நாடகம், ஒயிலாட்டம், கரகாட்டம் அடங்கிய கலை இரவுக் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. 

புத்தாண்டு பரிசு: மேற்கு தொடர்ச்சி மலை பெஸ்டிவல் வெர்சன் திரையிடல் 

தமிழ் ஸ்டுடியோவில் வருகிற திங்கள் கிழமை (டிசம்பர் 31) இரவு 9 மணிக்குப் புத்தாண்டு பரிசாக "மேற்கு தொடர்ச்சி மலை பெஸ்டிவல் வெர்சன்" திரையிடப்படுகிறது.

'செம்மஞ்சேரியில் இருந்து'' புகைப்பட கண்காட்சி மகிழ்வுடன் நிறைவு

லலிதகலா அகாடமியில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை ''செம்மஞ்சேரியில் இருந்து'' புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

சீதக்காதி திரைப்பட இயக்குநர் பாலாஜி தரணிதரனுடன் கலந்துரையாடல்  

பியூர் சினிமாவில் எதிர்வரும் சனிக்கிழமை (டிசம்பர் 29) சீதக்காதி திரைப்பட  இயக்குநர் பாலாஜி தரணிதரனுடன்  கலந்துடையாடல் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

பியூர் சினிமாவில் பிரபஞ்சன் நினைவு திரையிடல்

பிரபஞ்சனின் நினைவைப் போற்றும் வகையில் பியூர் சினிமாவில் நாளை (டிசம்பர் 25) முழு நாள் நிகழ்வாக இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழா (IFFC) 2019

நண்பர்களே, தமிழ் நாட்டின் முதல் திரைப்பட இயக்கமான தமிழ் ஸ்டுடியோ சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சுயாதீன திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சென்ற ஆண்டு ஒரு நாளாக நடந்த இந்த விழா இந்த ஆண்டு மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது.

அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை!

பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரனின் ''திரைக்கதை பயிற்சிப்பட்டறை'' பியூர் சினிமா புத்தக அங்காடியில் நாளை (22-12-2018, சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தமிழ் ஸ்டுடியோவில் நாடகங்கள் அரங்கேற்றம்

இனி ஒவ்வொரு மாதமும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. அவ்வகையில் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15,16) குறுநாடகங்கள் அரங்கேற்றப்படுகிறது.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்துடன் கலந்துரையாடல்

பியூர் சினிமாவில் வருகிற சனிக்கிழமை கிழமை (டிசம்பர் 08) படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்துடன் கலந்துடையாடல் நிகழ்வும், படச்சுருள் ‘நிகழ்கால தமிழ் சினிமா’ சிறப்பிதழ் வெளியீட்டு விழாவும்  நடைபெறவிருக்கிறது.

தெளிவுப்பாதையின் நீச தூரம் திரைப்படம் திரையிடல்

இயக்குநர் அரவிந்த் இயக்கிய "தெளிவுப்பாதையின் நீச தூரம்" திரைப்படம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 09) மாலை 6 மணிக்கு கோடம்பாக்கம் MM திரையரங்கில் தமிழ் ஸ்டுடியோ திரையிடுகிறது.

ராட்சசன் திரைப்பட இயக்குனர் ராம் குமாருடன் கலந்துரையாடல்

பியூர் சினிமாவில் வருகிற ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 02) "ராட்சசன்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமாருடன் கலந்துடையாடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

ரெட்ரோஸ்பெக்டிவ்- பெர்னார்டோ பெர்ட்டுலூசி படங்கள் திரையிடல் 

அண்மையில் மறைந்த இத்தாலியைச் சார்ந்த மக்கள் கலைஞன் பெர்ட்டுலூசியின் நினைவாகத் தமிழ் ஸ்டுடியோ ரெட்ரோஸ்பெக்டிவ் (Retrospective) திரையிடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோவின் பதினோராவது தொடக்கவிழா நிகழ்வுகள்

நாளை (நவம்பர் 23) தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து பதினோராவது ஆண்டு தொடங்குகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் 24, 25 ஆம் தேதிகளில், மதுரையில் தொடர் நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

தயாரிப்பாளர் சி.வி. குமாருடன் கலந்துரையாடல்

எதிர்வரும் சனிக்கிழமை (நவம்பர் 17) மாலை 6 மணிக்குத் தயாரிப்பாளர் சி.வி. குமாருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடைபெற உள்ளது.

விதை இயற்கை அங்காடி வடபழனி கிளை தொடக்க விழா

தமிழ் ஸ்டுடியோவின், "விதை" இயற்கை அங்காடி வடபழனி கிளையின் தொடக்க விழா எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 11) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இளைஞர்கள் கொண்டாடி தீர்த்த தமிழ் ஸ்டுடியோவின் ரித்விக் கட்டக் முழுநாள் பயிலரங்கு    

கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி பியூர் சினிமா புத்தக அங்காடியில் ''படச்சுருள் - ரித்விக் கட்டக்'' சிறப்பிதழ் வெளியீடு, ஒரு முழுநாள் கட்டக் அறிமுக நிகழ்வாக நடைபெற்றது.

இளைஞர்கள் திரளாக கலந்துக்கொண்ட தமிழ் ஸ்டுடியோவின் ரித்விக் கட்டக் பயிலரங்கு!

தமிழக திரைப்பட சூழலில் பெரிதும் வாய்க்காத பேரனுபவத்தை ''ரித்விக் கட்டக் வாழ்வும் கலையும்'' என்கிற தமிழ் ஸ்டுடியோவின் நேற்றைய நிகழ்ச்சி சாத்தியப்படுத்தியிருந்தது.

ரித்விக் கட்டக்: வாழ்வும் கலையும் - ஒருநாள் பயிலரங்கம்

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 04) காலை 10 மணி முதல் இரவு 9 வரை பியூர் சினிமா புத்தக அங்காடியில்,"ரித்விக் கட்டக்- வாழ்வும் கலையும்" என்கிற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.

96 படத்தின் படத்தொகுப்பாளர் ஆர். கோவிந்தராஜுடன் கலந்துரையாடல்

96 படத்தின் படத்தொகுப்பாளர் ஆர். கோவிந்தராஜுடன் கலந்துரையாடல் நிகழ்வு நாளை (அக்டோபர் 20) பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடைபெற்றவுள்ளது. 

சாரு நிவேதிதாவின் சினிமா ரசனை பயிற்சி பட்டறை - மூன்றாவது வகுப்பு

எழுத்தாளர், சாரு நிவேதிதாவின் சினிமா ரசனை குறித்தான பயிற்சி பட்டறை (மூன்றாவது வகுப்பு) எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 21) பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடக்கயிருக்கிறது.

இசையமைப்பாளர் தாஜ் நூருடன் கலந்துரையாடல்

தமிழ் சினிமாவில் நூறு ஆண்டுகளாக திரை இசை அடைந்துள்ள மாற்றங்கள், சினிமாவில் இசையின் பங்கு, பாடல்களின் தேவை, இசை ஒரு காட்சியை எந்த அளவிற்கு முன்னோக்கி இட்டு செல்கிறது போன்றவை குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கலாம்.

சாரு நிவேதிதாவின் "சினிமா ரசனை" பயிற்சி பட்டறை - இரண்டாவது வகுப்பு

எழுத்தாளர் சாரு நிவேதிதா சினிமா ரசனை பற்றிய பயிற்சி வகுப்பைத் தொடர்ந்து ஐந்து வாரங்கள் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடத்துகிறார்.

தமிழ் சினிமாவின் முதல் திரைப்படம் ''பரியேறும் பெருமாள்'' - பியூர் சினிமா கலந்துரையாடலில் லெனின் பாரதி

படச்சுருள் மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பிதழ் வெளியீடு மற்றும் படத்தின் இயக்குனர் லெனின் பாரதியுடனான கலந்துரையாடல் தமிழ் ஸ்டுடியோவின் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.

சாரு நிவேதிதாவின் சினிமா ரசனை அறிமுக பயிற்சி பட்டறை - இரண்டாவது வகுப்பு 

சினிமா, இசை, ஓவியம், இலக்கியம் என பல கலைகளையும் ஒருங்கிணைத்து நடைபெறும் இந்த பயிற்சி தமிழ்நாட்டின் முதல் முயற்சி. இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுங்கள்.

பி. லெனினின் மூன்றாவது படத்தொகுப்பு பயிற்சிப்பட்டறை - குறைந்த இடங்களே உள்ளன

தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடைபெற்றுவரும் எடிட்டர் பி. லெனினின் பயிற்சிப்பட்டறையின் முன்றாவது வகுப்பு வருகின்ற சனிக்கிழமை (06-10-2018) நடைபெறவுள்ளது.

பியூர் சினிமாவில் இயக்குனர் லெனின் பாரதியுடன் கலந்துரையாடல் 

அக்டோபர் மாத படச்சுருள் ''மேற்குத் தொடர்ச்சி மலை'' சிறப்பிதழாக வந்திருக்கிறது.

சாரு நிவேதிதா நடத்தும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவேண்டுமா?

ஒருவர் நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்றால் அவருக்குச் சினிமா ரசனை சார்ந்த புரிதல் இருக்கவேண்டும். அதனை தமிழ் ஸ்டூடியோ தொடர்ந்து செய்துவருவதோடு, குறைந்த கட்டணத்தில் மிக அவசிமான பயிற்சி பட்டறைகளையும் நடத்திவருகிறது.

பியூர் சினிமாவில் சாரு நிவேதிதாவின் தொடர் சினிமா பயிற்சி பட்டறை

பியூர் சினிமா மற்றும் சாப்ளின் பிலிம் அகாடெமி இணைந்து நடத்தும் தொடர் பயிற்சி பட்டறையில் அடுத்ததாக எழுத்தாளர் சாரு நிவேதிதா வகுப்பு நடத்துகிறார்.

நிகழ்காலத் தமிழ் சினிமா - சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல்

புதுப்பிக்கப்பட்ட பியூர் சினிமா புத்தக அங்காடியில், வருகிற ஞாயிற்றுக் கிழமை மாலை  5 மணிக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா நிகழ்காலத்  தமிழ் சினிமா என்ற தலைப்பில் கலந்துரையாட இருக்கிறார்.

எளிய மொழிநடையில் அழுத்தமான அரசியல் - சா. திருவாசகத்தின் சல்வா ஜூடும் புத்தகம் வெளியீடு

கருப்பு பதிப்பகத்தின் முதல் சிறுகதை தொகுப்பான சா. திருவாசகம் எழுதிய சல்வா ஜூடும் புத்தக வெளியீட்டு விழா பியூர் சினிமா புத்தக அங்காடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.

பியூர் சினிமா புத்தக அங்காடி என் வாழ்வில் மிக முக்கியமான இடம்!

சினிமா கனவோடு அலைந்து திரியும் பலரையும் ஒன்று சேர்த்து அவர்களை சினிமா கலைஞர்களோடும் எழுத்தாளர்களோடும் கலந்துரையாட வைக்கும் ஒர் அற்புதமான ஸ்பேஸ்.

மினி படச்சுருள் கண்காட்சி - படச்சுருள் மாத இதழ் - தள்ளுபடி விலையில்...

நாளை காலை பத்து மணிக்கு தொடங்கி ஞாயிறு இரவு பத்து மணி வரை இந்த சலுகை தொடரும்.

கருப்பு பதிப்பகத்தின் ''சல்வா ஜூடும்'' புத்தக வெளியீட்டு விழா

கருப்பு பதிப்பகத்தின் முதல் சிறுகதை தொகுப்பான சல்வா ஜூடும் புத்தக வெளியீட்டு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 16) மாலை 5.30 மணிக்கு பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடைபெறவுள்ளது.

தொடக்க விழா - சினிமா புத்தகங்களுக்கான இந்தியாவின் ஒரே புத்தக அங்காடியான பியூர் சினிமா - புதுப்பொலிவுடன்

இந்தியாவில் செயல்படும் நிலையில் இருக்கும் முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களுக்காகவே செயல்படும் இந்தியாவின் ஒரே சினிமா புத்தக அங்காடி பியூர் சினிமா புத்தக அங்காடி.

உலக குறும்பட விழா

சென்னையில் உலக குறும்பட விழா வருகிற அக்டோபர் மாதம் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

விநியோகஸ்தர் & நடிகர் வெங்கட் சுபாவுடன் கலந்துரையாடல்

சினிமாவின் வெவ்வேறு துறைகளை சார்ந்த கலைஞர்களுடன் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் இதுவரை விநியோகஸ்தர்கள் பங்கேற்கவில்லை. முதல்முறையாக நடிகரும் விநியோகஸ்தருமான வெங்கட் சுபா இந்நிகழ்வில் பங்கேற்கிறார்.

படத்தொகுப்பாளர் பழனிவேலுடன் கலந்துரையாடல்

தமிழ் சினிமாவின் நூற்றாண்டைத் தமிழ் ஸ்டுடியோ பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறது. இடையில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு பிரச்னைகளால் இந்நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளோம்.

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்தும் கவிதைப் போட்டி / கவியரங்கம்

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் தமிழ்ப் பழமொழிகளின் சிறப்புகளை யாவரும் அறியும் வண்ணம் “பழமொழி காட்டும் பண்புகள்” என்ற தலைப்பில் 07.07.2018 அன்று விழா நடத்தவுள்ளது.

படச்சுருள் நான்காம் ஆண்டு கொண்டாட்டம் & ஒரு கண் ஒரு பார்வை படம் திரையிடல்

சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு, சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு சினிமாவை தொடர்புபடுத்தி சமூக சினிமா என்கிற புதிய வகைமையை படச்சுருள் உருவாக்கியது.

 அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ''மாள்வுறு'' நாடகம்!

முக்கியமான நாடகம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நாளை (ஜூன் 17) நடைபெறுகிறது.

சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் - திரையிடல் 4 - ஜூன் மாத நிகழ்வு

சினிமா ரசனை சார்ந்து தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் முதல் நிகழ்வு சாமிக்கண்ணு திரைப்படச் சங்க திரையிட்டால்தான்.

தமிழ் ஸ்டுடியோ - பௌர்ணமி இரவு - மே மாத நிகழ்வு.

29-05-2018, செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணிக்கு.

மாணவர்களுக்கான அரசியல், கலை பயிலரங்கம் - மகத்தான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

புத்தெழுச்சிகொண்ட சமூகத்தை உருவாக்க மாணவர்கள் ஒவ்வொருவரையும் அரசியல்படுத்த வேண்டும், கலை பண்பாட்டு தளத்தில் ஈடுபடுத்த வேண்டுமென்ற கருத்தியல் முன்னெப்போதையும் விட நிகற்காலத்தில் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.