சுற்றுச்சூழல்

பூமிக்கு காய்ச்சல் அதிகரித்து கொண்டே இருக்கிறதா! 

'காலநிலை மாற்றம்' என்பதிலிருந்து 'காலநிலை ஆபத்து' என்ற கட்டத்தை அடைந்துவிட்டோம். தீர்வுகளை விவாதித்து உடனடியாக செயல்படுத்தவேண்டிய நேரம் இது

கல்லூரி மாணவியை கைது செய்த அரசு !

கொலை குற்றவாளிகள் ,கொள்ளையர்கள் ,வன் கொடுமை செய்ப்பவர்களை எல்லாம் கைது செய்வதென்பது தற்போது,மாறி அரசின் அதிகார வர்க்கத்தின் அநீதிகளை தட்டிக் கேட்டால் தடாலடியாக வழக்கு போட்டு கைது செய்து அடக்குமுறையை ஏவுவது வாடிக்கையாகி விட்டது நம் இந்திய திருநாட்டில் .

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்போம்

ஏரிக்கும் சதுப்பு நிலங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் கூட இன்னும் நமக்குத் தெரியாமல் இருப்பது பெரிதும் கவலையளிக்கிறது.

நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்!

5 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 -க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள். 

அமைதி பள்ளத்தாக்கின் பாதுகாவலர்: மாரி, 33 வருடங்களாக காட்டில் வாழ்ந்து வரும் மனிதர் செரின் சாரா சக்காரியா

பாலக்காடில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா இந்தியாவில் நன்கு அறியப்பட்ட வெப்ப மண்டல காடுகளில் ஒன்றாகும். அருகிவரும் சிங்கவால் குரங்கு உள்பட அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு வாழ்விடமாக இது உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதிகரித்திருக்கும் காற்றின் தரம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகத் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் இயற்கை வளம் -கனிம வளப் பாதுகாப்பு மாநாடு

எதிர்வரும் 18ஆம் தேதி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக `தமிழ்நாட்டின் இயற்கை வளம்- கனிமவளப் பாதுகாப்பு மாநாடு` மயிலாடுதுறை கேணிக்கரையில் நடைபெறுகிறது.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்- தமிழகத்தை அழிக்கும் மற்றொரு திட்டம்  

தேனி மாவட்டம், பொட்டி புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கூடங்குளம் வளாகத்திலேயே அணுக்கழிவுகளை வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்குக் கண்டனம் - பூவுலகின் நண்பர்கள்

கூடங்குளம் அணுஉலை தொடர்பாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைககைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே அணுக்கழிவுகள்- மக்கள் கடும் எதிர்ப்பு 

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே அணுக்கழிவுகளை வைப்பதற்குக் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியதற்கு அதிகாரிகளே உடந்தை-  எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் 

ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியதற்கு அதிகாரிகளே உடந்தை என்று எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

8 வழிச்சாலை அமையவிருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்ப்பு 

சென்னை- சேலம் இடையே அமையவிருந்த 8 வழிச்சாலை திட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டபின்னரும், அந்த சாலை திட்டத்திற்காக அளவீடு செய்த பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். 

விதிமுறைகளை மீறி கட்டுமானங்களை எழுப்பியதே வெள்ளத்திற்கு காரணம் - உச்சநீதிமன்றம் 

சமீப வருடங்களில் உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு சந்தித்த மிக மோசமான வெள்ளங்களுக்கு காரணம் ஆற்றோரங்களில் மற்றும் இயற்கையாக நீர் வழிப்பாதைகளை தடுத்து நியாமற்ற முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதே காரணம்.

கடந்த 5 வருடங்களில் 12,0,000 ஹெக்டேர் காடுகளை இந்தியா இழந்துள்ளது 

2009 முதல் 2013 வரையிலான காலகட்டங்களில் 36% காடுகளை இந்தியா இழந்துள்ளது. இது நிச்சியம் எதிர்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

பாமாயில் நிறுவனத்திற்கு எதிராக போராடி சூழலியல் விருதை வென்ற வழக்கறிஞர்

உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்தி வட அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் முனையத்தை கட்டவிடாமல் வெற்றிகரமாக தடுத்த வாஷிங்கடன் நகரைச் சேர்ந்த லிண்டா கார்சியா.

மனிதர்களால் பத்து லட்சம் உயிரினங்கள் அழியும் அபாயம் – ஐநா வரைவு அறிக்கை

மனிதர்களின் தாக்கத்தால் ஏறக்குறைய பத்து லட்சம் உயிரினங்கள் அழிவை சந்திக்கும் நிலையில் உள்ளதாக ஐநாவின் வரைவு அறிக்கை கூறுகிறது.

கூடங்குளம் அணுவுலையில் பிரச்னைகள் உள்ளதை ஒப்புக் கொண்டது இந்திய அரசு-  பூவுலகின் நண்பர்கள்

கூடங்குளம் அணுவுலை அடிக்கடி நிறுத்தப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது. அந்த உலையில் தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளது. அதைச் சரிசெய்ய இந்திய அணுமின் சக்தி கழகத்தினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் அனுமதிகோரி விண்ணப்பம்

காவிரிப்படுகையில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம் அளித்துள்ளதற்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்தாண்டு கழுகு கூடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது! 

முதுமலை புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்க காலத்தில் கட்டப்படும் கழுகு கூடுகளின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறைந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் ஈஷா நிகழ்வுக்கு அனுமதி ஏன்?

ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் பகுதியில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு என்பது 55 டெசிபல்தான். 2017ஆம் ஆண்டு விழா நடந்த நாளில் எட்டு இடங்களில் ஒலி அளவை மாசு கட்டுபாட்டு வாரியம் பதிவு செய்தது.

கரை ஒதுங்கிய டால்பின், திமிங்கல குடலில் பிளாஸ்டிக் துகள்கள் – ஆய்வில் அதிர்ச்சி!

இங்கிலாந்து கடலோரத்தில் ஒதுங்கிய அனைத்து கடல்வாழ் பாலூட்டிகளின் குடலிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்படுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க ஒஎன்ஜிசி ஆயத்தம்

சீர்காழி அருகே மக்களின் எதிர்ப்பை மீறி இயற்கை எரிவாயு குழாய் பதிப்பதற்காக ஒஎன்ஜிசி நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது.

நாகையில் 4 கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது - பூவுலகின் நண்பர்கள் 

நாகை மாவட்டத்தின் 4 கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் சூழலியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது

நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பால் அழிந்து வரும் கங்கை நதி டால்பின்!

சுந்தரவனக் காடுகளை உருவாக்கும் நீர்வழி அமைப்புகளில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் இப்பகுதிகளில் காணப்படும் கங்கை நதி டால்பின்களின் (ஓங்கில்கள்) எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்டெர்லைட் தீர்ப்பு மக்களுக்கு எதிரானது - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

8 வழிச்சாலை: விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை - சேலம் இடையே அமையவுள்ள பசுமை அழித்தொழிப்பு சாலை (பசுமை வழிசாலை) திட்டத்தை எதிர்த்து இன்று (டிசம்பர் 14) சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க எளிய வழியை கூறும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் உள்ள குயினானான் நகரில் புதிய வடிகட்டும் செயல்முறையை இந்த ஆண்டு பொறுத்தியுள்ளார்கள் அதிகாரிகள். நம்பமுடியாத வகையில் இந்த வடிகட்டுதல் அமைப்பு எளிமையாக உள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க “நடமாடும் குப்பை தொட்டியாக” வலம் வரும் மனிதர்

நாம் எவ்வுளவு தூரம் மறுக்க முயற்சித்தாலும், காலபோக்கில் நமது வாழ்க்கையில் ஒன்றாக கலந்துவிட்டது பிளாஸ்டிக் (நெகிழி). சொலப்போனால் பிளாஸ்டிகை பயன்படுத்துவதில் நாம் அடிமையாகிவிட்டோம் என்று தான் கூற வேண்டும்.

இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

சென்னை கிழக்கு கடலோரச் சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் கிராமத்தில் உள்ள கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிட திமிங்கலம் ஒன்றை இன்று காலை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர்.

தனி ஒருவராக காடுகளை உருவாக்கிய இந்தியர்!

இப்போதெல்லாம் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்த கதைகளே செய்திகளை பெரிதும் ஆக்ரமித்துள்ளன. ஆனால், ஜாதவ் “மோலாய்” பயேங் கதை அப்படியே இதற்கு எதிராக இருக்கிறது.

இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள்

நியூசிலாந்து கடற்கரையில் 50க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் ஒரே நாளில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஒடிஸாவில் தோன்றிய புதிய “சிப்கோ” இயக்கம்!

70 வயதான சதூரி சாஹு, அருகிலுள்ள ஜின்கார்கடி காடுகளை காவல் காப்பதற்காக கடந்த நாற்பது வருடங்களாக, தனது குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் நபரை தவறாமல் அனுப்பி வருகிறார்.

உலக வனவிலங்குகளின் எண்ணிக்கையை அழிப்பது முதலாளித்துவம் தான்; “மனித இனம்” அல்ல!  

சமீபத்தில் வெளியான உலக வனவிலங்கு நிதியத்தின் வாழும் கிரகம் அறிக்கை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அதாவது, 1970 ஆண்டுகளிலிருந்து இன்றுவரையில் வன விலங்குகளின் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துள்ளது.

காடுகள் அழிக்கப்படுவதை தடை செய்த நார்வே!

காடுகள் அழிக்கப்படுவதை தடை செய்த முதல் நாடாக நார்வே திகழ்கிறது. இனிமேல் அரசாங்க கொள்முதல் திட்டங்கள் யாவும் காடு அழிப்பிற்கு உதவாத பொருட்களாக இருக்க வேண்டும் என மே 26-ம் தேதி நார்வே பாரளுமன்றம் உறுதிமொழி எடுத்துள்ளது. 

“சபரிமலையை புலிகளிடம் விட்டுவிடுங்கள்” - சுற்றுச்சூழலியலாளர் அச்சுதன்!

சபரிமலை கோயிலுக்கு ஆண்களும் செல்ல வேண்டாம், பெண்களும் செல்ல வேண்டாம்; அது புலிகள் காப்பிடம். புலிகளிடமே விட்டு விடுங்கள். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் நமக்கு படிப்பினையாக இருந்திருக்க வேண்டும்.

டெல்லி காற்று மாசுபாட்டின் தீவிரத்தை உணர்த்தும் நுரையீரல் மாதிரி!

தீபாவளி முடிந்த நிலையில், காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் டெல்லியை நோக்கி நாட்டின் மொத்த கவனமும் உள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க விவசாயிகள் கோரிக்கை

நியூட்ரினோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அந்தத் தடையை நிரந்தர தடையாக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்கால தடை

தேனி அம்பரப்பர் மலை அடிவாரத்தில் செயல்படுத்தப்படவிருந்த நியூட்ரினோ திட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

மாசடைந்த காற்றால் 15 வயதிற்கும் குறைவான குழந்தைகள் கடுமையாக பாதிப்படைகிறார்கள்: உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை

அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் சுவாச கோளாறு நோயினால், 2016-ம் ஆண்டில் மட்டுமே ஆறு லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

உலகை அச்சுறுத்தும் "புதிய புகையிலை": பூவுலகின் நண்பர்கள்

மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சைச் சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள் என்றும் காற்று மாசே "புதிய புகையிலை" என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மரு. டெட்ராஸ் அதனோம் ஜிஹெப்ரேயெஸ்ஸ்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் காற்றின் மாசு குறைந்துள்ளது

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், அப்பகுதியில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது எனத் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவசமாக பயணம் செய்யலாம்

10 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுத்தாலே போதும். 10 பிளாஸ்டிக் பாட்டிகள் கொடுத்தால் இரண்டு மணி நேரமும், ஐந்து பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால், இரண்டு மணி நேரத்திற்குக் குறைவாகவும் பயணம் செய்யலாம்.

உலகின் 71% மாசு வெளியற்றத்திற்கு வெறும் 100 நிறுவனங்களே காரணம்!

1988-ம் ஆண்டிலிருந்து உலகத்தில் வெளியேறும் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான பசுமை இல்ல வாயுக்களுக்கு காரணம் வெறும் 100 நிறுவனங்களே என சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை (Carbon Majors Report) தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தோடு நம்மை அச்சுறுத்தும் இன்னொரு விசயம் "நிலத்தடிநீர் பேரிடர்"

தண்ணீரை அடிப்படை வளமாகப் பார்க்காமல் விற்பனை பண்டமாக பார்த்ததன் விளைவுதான் தற்சமயம் நடைபெறும் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

ஜி.டி. அகர்வாலை தொடர்ந்து கங்கைக்காக உண்ணாவிரதமிருந்த மற்றொருவர் கவலைக்கிடம்

உண்ணாவிரதமிருந்த மற்றொரு செயற்பாட்டாளர் சந்த் கோபால்தாஸ் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கங்கை நதியை காப்பாற்றக் கோரி  உண்ணாவிரதமிருந்த ஜி. டி. அகர்வால் உயிரிழந்தார் 

கங்கை நதியை காப்பாற்றக் கோரி 109 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சூழலியலாளர் ஜி. டி. அகர்வால் ரிஷிகேஷில் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்தார்.

எரிவாயு குழாய்களை பதிப்பதற்கு மக்களிடம் கருத்துகேட்க வேண்டாமா?

மக்களை மதிக்காத அரசுகள் காலவெள்ளத்தில் தூக்கி எறியப்படுவதுதான் வரலாறு. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் அனைவரும் காலத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதும் கூட வரலாறாகப் பதிவாகி உள்ளது.

ஒரே மாதத்தில் 23 சிங்கங்கள் உயிரிழப்பு

கிர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்குள், 23 சிங்கங்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கையெழுத்தானது 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தம் இன்று (அக்டோபர் 01) கையெழுத்தானது.

ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு கிடைத்துள்ள இடம் சிதம்பரம்!

சிதம்பரத்தில் அந்நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது தற்போது தெரியவந்திருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் நான்கு லட்சம் கிலோ குப்பைகளை இமயமலையிலிருந்து அகற்றிய இளைஞர்!

பொறுப்பற்ற சுற்றுலாவால் இமயமலையின் அமைதி குலைவது குறித்தும் மலைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள 2014-ம் ஆண்டிலிருந்து தான் மேற்கொள்ளும் பணி குறித்தும் விரிவாக பேசுகிறார் 33 வயதாகும் சங்வான்.

மக்களுக்கு எதிரான திட்டம் : இப்போது பாதிக்கப்பட்டிருப்பது காசிமேடு

சென்னை, காசிமேட்டில் புதியதாகத் திறக்கப்பட்டுள்ள ''கியாஸ் பங்கிற்கு'' எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவரும் கருப்பையா

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, 81 வயதான கருப்பையா 16 ஆண்டுகளில், 10,000திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

காரைக்குடியிலும் ஒரு ஸ்டெர்லைட்டா?

ஆலையிலிருந்து வெளிவரும் ரசாயனத்தால் பெரும் பாதிப்பு அடைந்துவருவதாகவும், தோல் அரிப்பு, சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய், கர்ப்பப்பை கோளாறு போன்ற பிரச்னைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அகலத்தை குறைத்தால் போதாது: 8 வழிச்சாலையே வேண்டாம்

சாலையின் அகலத்தையோ, 8 வழிச்சாலை திட்டத்திற்காக கையப்படுத்தவுள்ள நிலங்களின் அளவைக் குறைப்பதையோ மக்கள் கேட்கவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட்டுவிட்டு இருக்கின்ற சாலைகளை மேம்படுத்துங்கள்.

சிறப்புக் கட்டுரை: உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உண்மையா?

நாம் அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இருக்கிறது.

சென்னை கடலில் மூழ்குமா?

புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதில், நாகை மாவட்டத்துக்கு பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால், நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நிலமட்டம் தாழ்ந்து போகும்.

நதி நீர் இணைப்பினால் ஏற்படும் விளைவுகள்!

தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தினால் (NRLP), வட மாநில ஆறுகளில் நீர்வரத்து குறைவது மட்டுமல்லாமல் டெல்டா பகுதிகளில் தேங்கும் வண்டல் படிவங்களையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

8 வழிச் சாலைக்காக தடையை மீறி 500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதா?

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சின்ன கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் 500 மரங்கள் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் மிகவேகமாக மூழ்கிக்கொண்டிருக்கும் ஜகார்டா நகரம்

உலகில் மிக வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம் ஜகார்டா என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மறைந்திருந்து கொல்லும் பூச்சிகொல்லி மருந்துகள்

அதிகளவிலான பூச்சிகொல்லி மருந்து எச்சங்கள் இருந்த காரணத்தினால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.

 கானுலா - ஒரு காடோடியின் பயணக்குறிப்புகள் -6

கோயமுத்தூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல கோவையிலிருந்தும் செல்லலாம். அல்லது பொள்ளாச்சியிலிருந்தும் செல்லலாம். கேரளா வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாகவும் இங்கு வரலாம்.

யானை வழித்தடங்களை மறித்துள்ள கட்டிடங்களை மூட உச்சநீதிமன்றம் ஆணை

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யானை வழித்தடங்களில் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் விடுதிகளை கட்டியுள்ளனர். குறிப்பாக மசினகுடி சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு கண்டுள்ளது.

இந்தோனிசியா: நிலநடுக்கத்தால் 164 பேர் பலி

இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 164 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யானை சவாரிகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம்

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) மற்றும் மிருகவதை தடுப்பு சட்டம் (1960) இரண்டையும் பின்பற்றி ஜிம் கார்பட் தேசிய பூங்கா, ராஜாஜி புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் வர்த்தக நோக்கில் யானை சவாரி செய்யப்படுவதை உத்தரகாண்ட் அரசு தடை செய்துள்ளது.

மலரே... குறிஞ்சி மலரே!

நீலக்குறிஞ்சிப் பூக்கள் அதிக அளவில் நீலகிரி மலைகளில் பூத்து மலையே நீல வண்ணத்தில் காணப்பட்டதால் நீலகிரி என்று பெயர் பெற்றது. 

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

கானுலா - ஒரு காடோடியின் பயணக்குறிப்புகள் -5

நீலகிரியின் மிக முக்கியமான காட்டுயிர் சரணாலயமாக இந்த காட்டுயிர் தேசியப்பூங்கா விளங்குகிறது. இது நீலகிரி தெற்கு வனத்துறையின் கீழ் வருகிறது. இது மேற்கு மலைத்தொடரின் சமவெளியில் அமைந்துள்ளது.

ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுவுலை!

கூடங்குளம் அணுவுலையின் இரண்டு அலகுகளும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அணுஉலைக்கு எதிராக போராடிய, பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

கோவை: ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

கோவை அருகே உள்ள வாலாங்குளம் ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

கானுலா - ஒரு காடோடியின் பயணக்குறிப்புகள் -4

கானுலா என்பது காட்டில் செல்லும் உலா என்பதாகும். அப்படியானால் மலையேற்றம் கானுலா இல்லையா? காடு அல்லது வனம் அல்லது கானகம் என்பது வெறும் மரங்கள் நிறைந்த தோப்பல்ல.

நேற்று சேலத்தில் மேட்டூருக்கு அருகே நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

மேட்டூர் அணை தன் முழூ கொள்ளளவை எட்டும் நிலையில் இந்த நில அதிர்வு பல சந்தேகங்களை எழுப்புகிறது.

குஜராத்தில் தற்போது ஒரே ஒரு ஆண் கானமயில் (Great Indian Bustard) மட்டுமே உள்ளது

கடந்த சில வருடமாக இனப்பெருக்கத்துக்குரிய எந்த ஆண் பறவையும் கட்ச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்படவில்லை

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம்

கேப்டவுன் நகரம் தண்ணீர் இன்றி தவித்ததை நாம் அறிவோம். அறிஞர்களின் பரிந்துரைப்படி நமது மலையின் இயற்கை வளத்தை பாதுகாத்தால் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் நம் தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்கும்.

சென்னை-சேலம் இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய எட்டு வழிச்சாலை குறித்து கருத்தரங்கு

இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை, தேதி : 22.07.2018, மாலை 5.30 மணி

கருப்பின் கணிப்பு சரியே : இன்று அணைத்து கர்நாடக அணைகளும் நிரப்பின

நேற்று நம் தளத்தில் சொன்னது போலவே கிருஷ்ணசாகர் அணை மட்டுமல்ல கர்னாடகாவில் உள்ள காவிரியின் எல்லா அணைகளும் இன்று நிறைந்தன.

நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு இல்லையா? - பூவுலகின் நண்பர்கள் பதிலடி

நியூட்ரினோ ஆய்வு மையம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என அதன் திட்ட இயக்குநர் விவேக் தத்தார் கூறியுள்ளது தொடர்பில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர் ராஜன் கருத்து வெளியிட்டுள்ளார்.

கானுலா - ஒரு காடோடியின் பயணக்குறிப்புகள் -3

மலையேற்றத்தில் தண்ணீர் மிக அவசியம் சாதாரணமாக செல்லும் பயணங்களை விட மலையேற்றத்தில் வியர்வையின் காரணமாகவும் சோர்வின் காரணமாகவும் உங்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும்.

கானுலா - ஒரு காடோடியின் பயணக்குறிப்புகள் -2

கானுலா செல்ல அனைவரும் ஆசைப்படுகின்றோம். கானுலா செல்ல யாருக்கு ஆசை இருக்காது? பயமா இருக்காதா? என்று கேட்டுக்கொண்டே கானுலா செல்ல ஆசையாக உள்ளது என்பார்கள்.

கங்கை நதி புனித நதியா

நம் நாட்டின் மூன்று பறமும் கடல் நீரானது நாம் வழக்கமாக பயன்படுத்தும் நீரைவிட அதிகமாக இருந்தாலும், ஒரு சொட்டு நீரைக் கூட யாரும் குடிப்பதற்காக பயன்படுத்த முடியாது.

மரம் வளர்கின்றதா சாதி வளர்கின்றதா கிராமங்களில்

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! என்ற சொற்களை விளம்பரங்களாக சுவர்களில் எழுதப்பட்டும், பாடப் புத்தகங்களின் அட்டையில் எழுதப்பட்டும் வந்த காலத்திலேயே மரங்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

வானிலை போர் : நிழலா.. நிஜமா…

இன்னும் 30 ஆண்டுகளுக்கு பின் உலக ஜனத்தொகை பெருமளவில் அதிகரித்திருக்கும். இந்தியா தான் உலகிலேயே அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

கானுலா - ஒரு காடோடியின் பயணக்குறிப்புகள்

காடு என்றதும் நம் மனசுக்குள் ஒரு பரவசம் ஏற்படுகிறது. அது நமக்கும் காடுகளுக்குமான தொடர்ச்சி என்றே கருதுகிறேன். தற்போது இந்தியாவில் "கானுலா" அதாவது காடுகளில் உலாவுதல், மலைகளில், புல்வெளிகளில், ஆற்றங்கரைகளில், அருவிகளில் என உலாவச் செல்லுதல் அதிகரித்துள்ளது.

ஆறு மாதத்திற்குள்ளாகவே இதுவரை 60 சிறுத்தைகள் இந்தியாவில் இறந்துள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ள 55 சிறுத்தை உடல்களில் 35 சிறுத்தைகள் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிகிறது.

முருங்கை மரத்தில் உள்ள விதையை கொண்டு பல கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்கலாம்

ஸ்டீபன் வெல்கால் என்னும் ஆய்வறிஞர், முருங்கை மரத்தில் உள்ள மூலப்பொருளின் புரதங்களோடு மணலை கலந்து மலிவான அதே சமயத்தில் வெற்றிகரமான தண்ணீர் வடிகட்டியை கண்டுபிடித்துள்ளார். இதற்கு F-SAND என பெயரிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ரசாயன மூல பொருட்கள் அகற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ரசாயன மூல பொருட்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

பசுமை அழித்தொழிப்பு சாலை: கால்நடைகளுக்குக் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்

சென்னை-சேலம் இடையேயான பசுமை அழித்தொழிப்பு சாலை (பசுமை வழிச்சாலை) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குக் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தியதுள்ளனர்.

தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

நம் நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டும், அரசியலைமைப்பின் படி ஆட்சிகள் நடந்து வந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழியை தாய்மொழி என்றும் மாநில மரம், மாநிலப் பறவை, மாநிலப் பழம், மாநில விலங்கு, மாநில மரம் என்று அங்கு

மதுரா கோட்ஸ் ஆலை மூடல்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுரா கோட்ஸ் நூற்பாலை நிறுவனத்தின் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக எழுந்த புகாரின் பேரில் அந்த ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்துள்ளது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.

தேவாலா : பாதுகாக்கப்பட வேண்டிய சோலைக்காடு

தேவாலா தென்னகத்தின் சிரபுஞ்சி என அழைக்கப்படும் அதிக மழை பெய்யுமிடமாகும். தேவாலா சரகத்தில் கிட்டதட்ட 30 க்கும் அதிகமான யானைகள் உள்ளது.

வளங்களை வேட்டையாடும் வேதாந்தா

அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில் பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர்.

பசுமை அழித்தொழிப்பு சாலை: திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு

சென்னை - சேலம் இடையேயான பசுமை அழித்தொழிப்பு சாலை (பசுமை வழிச்சாலை) திட்டத்திற்கான திட்ட அறிக்கை இன்னும் இரண்டு மாதங்களில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி குழாய் வெடித்ததால் எண்ணைய் படலமாக மாறிய வயல்வெளிகள்

மயிலாடுதுறை அருகே வயல்களில் பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் பரவியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பசுமை அழித்தொழிப்பு சாலை: விவசாயிகள் தீ குளிக்க முயற்சி

சென்னை - சேலம் இடையேயான பசுமை அழித்தொழிப்பு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் விவசாயிகள் தீ குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுச்சூழல் பாதிப்பில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்

சுற்றுச்சூழலுக்கும், மனிதக் குலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கக் கூடிய  நாடுகளில் ஆசிய அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பசுமை அழித்தொழிப்பு சாலை: திருவண்ணாமலையில் விவசாயிகள் கைது 

திருவண்ணாமலையில் பசுமை அழித்தொழிப்பு சாலைக்கு எதிராக, ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்கள் உள்பட 23க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஷம் கொடுத்து கொன்றுவிட்டு ரோடு போடுங்கள்: கதறி அழும் கிராம மக்கள்

'எங்களுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு எங்கள் பிணங்கள் மீது ரோடு போடுங்கள்''

எங்களைக் கொன்றுவிட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்

சேலம் - சென்னை பசுமை அழித்தொழிப்பு சாலை அமைக்க சேலம் மாவட்டத்தில் நிலங்கள் அளவீடும் பணிகள் நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களைக் காவல்துறையினர் கைது செய்துவருகின்றனர். 

பசுமை அழித்தொழிப்பு சாலை: 7 பேர் கைது 

சேலம் அருகே பசுமை அழித்தொழிப்பு சாலை தேவையில்லை என தங்களின் நிலங்களை அளக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

சேலம் அருகே உள்ள ஏரி ஒன்றில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதற்குச் சாய கழிவுகளே காரணம் என அந்தப் பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர்.

பசுமைஅழித்தொழிப்பு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது

சென்னை - சேலம் இடையேயான பசுமை அழித்தொழிப்பு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகானை நேற்று (ஜூன் 17) சென்னையில் காவல்துறையினர் கைது செய்தனர்

நான்கு வழி சாலைக்காக 2000 மரங்கள் அகற்றம்

திருநெல்வேலி முதல் தென்காசி வரையில் நான்கு வழி சாலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 மரங்கள் வெட்டப்படுகிறது.

யார் பறவை மனிதர்?

மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்.

பிறந்தாலும் ஒரு மரம், இறந்தாலும் ஒரு மரம்

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் ஒரு குழந்தை பிறந்தாலும் அல்லது ஒருவர் இறந்தாலும் அவர்களின் நினைவாக ஒரு மரக்கன்றுகளை நட்டுவருகின்றனர்.

தருமபுரி - ஓசூர் இடையே பசுமையை அழிக்கும் மற்றொரு சாலை!

மக்களின் கவனம் முழுவதும் இந்த நெடுஞ்சாலையை எதிர்க்கும் முனைப்பில் இருக்கும்பொழுது, இதே பகுதியிலிருக்கும் மற்றொரு சாலையை விரிவாக்கும் பணியை தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

கூட்டக் கூட்டமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள்

சென்னை- சேலம் இடையே அமையவிருக்கும் பசுமை அழித்தொழிப்பு சாலை குறித்து மக்கள் தங்களின் ஆட்சபனையை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, ஏராளமான பொதுமக்கள் கூட்டக் கூட்டமாக தங்களின்  ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.

பசுமை அழித்தொழிப்பு சாலை: நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு பகுதியில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் நிலங்கள் அளவிடும் பணி தொடங்கி நடைபெறுகிறது.

நீலகிரியில் யானைகள் இறப்பு அதிகரிப்பு ஏன்?

வனத்துறையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வன உயிரினங்களைக் காப்பதில் என்ன தான் முனைப்பு காட்டினாலும் வன உயிரின இறப்புகளை தடுக்க முடிவதில்லை.

பசுமை அழித்தொழிப்பு சாலை - மரங்களை அழித்த்தொழித்தல் - பத்து நிமிட ஆவணப்படங்கள்

பசுமை வழிச் சாலை, எட்டு வழி சாலை என்றெல்லாம் அரசு பெயரிட்டு அழைக்கும் இந்த சாலை, உண்மையில் பசுமையை அழித்தொழிக்கும் சாலை.

நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் தமிழகம் முதலிடம்

நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலை நொறுக்கினால் ரூ.5 பரிசு

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படுகிற மாசுபாட்டைக் குறைக்க இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி முதன்முறையாக,  பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் இயந்திரத்தை வாதோரா ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது. 

8வழி பசுமை சாலை: போராட்டத்தை முன்னெடுக்க 150 கிராம குழுக்கள்

சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைப்பதற்கு  எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதற்காக 150 கிராம குழுக்களுடன் 26 அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் போராளி முகிலன் சிறையில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

சுற்றுச் சூழல் போராளி முகிலன், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதியவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் களை

அயல் நாடுகளில் உணவுக்காக கையேந்தி தான் நிற்கின்றோம். அப்படித்தான் 1950-இல் நம் நாட்டில் ஏற்ப்பட்டப் பஞ்சம் காரணமாக,  அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்கு கோதுமை இறக்குமதிச் செய்யப்பட்டது

பந்து வடிவ பூமியில் உயிர்கள்

 பந்து வடிவிலான பூமி என்றக் கோளில் எத்தனையோ வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அந்த உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக நீரும், உணவும் அவசியமான ஒன்றாகத் தேவைப்படுகின்றது.

சிறுநீரை விட மோசமான குடிநீர்

மனித சிறுநீரைக் காட்டிலும் போபால் நகரின் குடிநீரில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

வெடித்துச் சிதறிய எரிமலை: 72 பேர் பலி!

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்துச் சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

சேலம்: சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாழாகும் கொடுமை

சேலம் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான சாய பட்டறையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

“இளைஞர்களின் சூழலியலியல் எழுச்சி தொடர்ச்சியாக பரவும் என்ற நம்பிக்கை உள்ளது!”: எழுத்தாளர் நக்கீரன்

நிறைய என் ஜி ஓக்கள் சூழலியல் சார்ந்து 20 ஆண்டுகளாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு ஒரு சூழலியல் பிரச்னை என்பது ஒரு ப்ராஜெக்ட்; அவ்வளவே

தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை 

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 05), தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம்: பிளாஸ்டிகை ஒழிப்போம்

அழியும் நிலையில் இருக்கும் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இறக்கும் விலங்குகளுக்கு முகநூலில் கண்ணீர் வடிக்கின்றீர்கள்

உலகம் முழுவதும்  ஒரு ஆண்டில் மக்கள் பயன்படுத்தும் நெகிழிப்பைகள் 5 இலட்சம் கோடியாம். ஒரு நிமிடத்தில் உலகம் முழுக்க பத்து இலட்சம் நெகிழி புட்டிகள் விற்பனையாகிறதாம்.

கடல்வாழ் உயிரினங்களின் உயிரைப் பறிக்கும் பிளாஸ்டிக் பைகள்!

மனிதர்களாகிய நாம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் நமக்குமட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன

மரத்தை வெட்டி கடை திறந்த போத்தீஸ்

மரங்கள் நமது பொதுச்சொத்து. மரங்கள் கடையை மறைக்கிறது என்ற ஒரு காரணத்திறாக, லாபம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, லாப வெறி முதலாளிகள் மரங்களை இரவோடு இரவாக வெட்டிச் சாய்த்துள்ளனர்

ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்!

சேலத்தில் உள்ள ஏரி ஒன்றில் நீர் மாசடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்.

சிம்லாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!

சிம்லாவில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து!

கடல்நீரைத் தூய்மை படுத்தும் ஆலையால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படப்போவதாகக் கடல் உயிரியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிரிவலப்பாதையில் 2,000 மரக்கன்றுகள் நடப்படுகிறது!

பக்தர்கள் சிரமமின்றி கிரிவல பாதையில் செல்வதற்கு, 2000 மரக்கன்றுகள் நடும்பணி அடுத்த 10 நாட்களுக்குள் தொடங்கும் எனத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

கடலில் கொட்டப்படுகின்ற ஸ்டெர்லைட் கழிவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவு நீர் கடலில் கலக்கும் புகைப்படத்துடன் தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர் தூத்துக்குடி மக்கள்.

நெடுவாசலில் மூடி நாகையில் திறப்பதே சுரண்டலின் தந்திரம்!

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்திய அன்றைய தினமே நாகை மாவட்டத்தில் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மாவட்டவாரியாக தமிழகம் சந்திக்கும் சூழலியல் கேடுகளின் பட்டியல்

தமிழகம் இன்று மிக மோசமான சுற்றுச்சூழலில் சிக்கி தவிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சூழல் பிரச்சனைகள் உள்ளன, தமிழகத்தின் நிலப்பரப்பில் 30 சதவீதம் ஏற்கனவே பாலை ஆகிவிட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

நீர் ஆதாரம் காக்க சோலைக்காடுகளின் மகத்துவத்தை போதிக்கும் ''நீர்க்குடம்''

ஆவணப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர் தவமுதல்வன் படைப்பாக்கத்தில் வெளியாகியிருக்கும் ''நீர்க்குடம்'' ஆவணப்படம் தமிழ் ஸ்டூடியோ சார்பில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நேற்று திரையிடப்பட்டது.

நீர் நிறைச் செயல் திட்டம் – மழைக்கும் நிலத்திற்குமான உறவு!

நீரில்லாக் காடு எனப் பெயர் பெற்ற எல்லாப் பகுதிகளையும் நீர் நிறைப் பகுதிகளாக மாற்ற முடியும். செம்மை நீர்நிறைச் செயல் திட்டத்தின் வழியாக தமிழகத்தின் பல பகுதிகளை நீர்நிறைப் பகுதிகளாக மாற்ற வேண்டும்.

மரங்கள் இல்லை: கிரிவலம் சென்ற பக்தர்கள் அவதி!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 29) திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள் அவதிக்கு ஆளாகினார்கள்.

இந்தியாவை எச்சரிக்கும் அதிர்ச்சி புகைப்படம்!

தற்போது நிலவி வருகிற பருவநிலை மாற்றத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா படம்பிடித்துள்ளது.