அரசியல்

புதிய ஆண்டை எப்படி வரவேற்பது?

2020 யில்   கொரானா மட்டுமே கோரத்தாண்டவம் ஆடியதா? என்றால் வழக்கமாக இந்திய தேசத்தில் தலைவிரித்தாடும் சாதியும், மதமும்  கொரானா காலத்திலும் ஓய்வெடுக்காமல் தன் கொடூரத்தை காட்டிக் கொண்டே வந்தது. பெரும் மனித இழப்பை நோய்த்தொற்று கொடுத்து வந்தாலும் சாதி வைரசும் அதன் தாக்கத்தை நாளுக்கு நாள் கொடுத்துக் கொண்டேதான் இருந்தது. 

சென்னை ஐஐடி முற்றுகை தோழர்கள் கைது!

மக்களை பாதிக்கும் இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை ஐஐடியை முற்றுகையிடும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22--12--2020) நடைபெற்றது. 

மக்களுக்கான போராட்டத்தில் 30 உயிர்கள் பலி!

கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மக்கள் விரோத மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் கடும் குளிருக்கும்,நோய் வாய்ப்பட்டும்,விபத்திற்கு  உள்ளாகியும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்தில் பலியாகியுள்ளனர். 

ஆயிரம் ரூபாயை தாண்டிய கேஸ் சிலிண்டர்! அவதிப்படும் மக்கள்!

சிலிண்டர் விலையை வானளவு உயர்த்தி,நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சோற்றில் மண் அள்ளி போட்டுள்ள மோடி அரசை கண்டித்து,இன்று (19/12/2020) கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காணாமல் போன கட்சித் தலைவர்கள்!

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து வட இந்தியாவை போராட்டக்களமாக கடும் குளிரில் வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் சூழலில் ஓடி ஒளிந்து விட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பற்றி பார்ப்போம்.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் 2.0

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், உலக்குடி என்ற ஊரில் தலித்களுக்கு முடி திருத்திய காரணத்தினால் முடிதிருத்தும் தொழிலாளி ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சாதி வெறியர்களால் ஊர் விளக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

நீங்கள் ஏன் பன்றி மேயக்கவில்லை?

தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கவும் ஆரம்பித்துள்ளனர்.ஆனாலும் அவர்களால் பள்ளி படிப்பை தாண்ட முடியாத நிலை உள்ளது ஏன் தெரியுமா? 

தலித் சிறுவர்களை மலம் அல்ல வைத்த கொடூரம்! 

இன்றைக்கும் சாதியை ஆதரிக்கும் பலர் இம்மண்ணில் இருக்கிறார்கள். அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை, எனக்கு என் சாதி பெருமை தான் முக்கியம் என பெருமிதம் கொள்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இந்த செய்தியைப் படித்துவிட்டு உங்கள் முகத்தில் நீங்களே உமிழ்ந்து கொள்ளுங்கள். 

மண்ணின் மக்களை விரட்டும் அரசு! மே 17 இயக்கத்தினர் கைது! 

சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிமுக அரசு செய்து வருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் வசித்து வரும் மக்கள் வீடு இல்லாமல் போனால் அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? 

கூவத்தில் இறங்கி மக்கள் போராட்டம்! 

நீங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் உங்கள் வீட்டை திடீரென அரசு இயந்திரம், காவல்துறையின் அடக்குமுறையோடு வந்து இடித்தால் உங்கள் நிலை என்னவாகும்! இதே நிலையில் தான் சென்னையில் பல ஆயிரம் தலித் குடும்பங்கள் தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றன..

மீண்டும் எட்டுவழிச் சாலை? 

மத்திய பாரதிய ஜனதா அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 கோடி செலவில் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு சேலம் மற்றும் சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்தது மத்திய அரசு, மாநில அரசும் தன் விசுவாசத்தை காட்ட அத்திட்டத்தை ஒப்புக்கொண்டது. 

வெளியேறு! வெளியேறு! காவிகளே வெளியேறு!- அம்பேத்கரின் நினைவுநாளில் ஆர்பரித்த முழக்கம் ; வெளியேற்றப்பட்ட அர்ஜீன் சம்பத்!

புத்தர் கிருஷ்ணரின் அவதாரம் அதனால் தான் அண்ணல் அம்பேத்கர் இந்துமதத்தின்  கிளைமதமான பெளத்தத்தைத் தழுவினார் என்று அண்ணலின் சிந்தனைகளை மடைமாற்றுவதையும் , இந்துவத்தின் பெயரால் சாதிப்பிளவை மேலும் அதிகப்படுத்துவமே அவர்களின் பிரதான நோக்கம்!

சமத்துவ சுடுகாடு வேண்டும்!

தீண்டாமைச்சுவர், ஆணவப்படுகொலை, சாதிக்கலவரம் என்று தினம் தினம் சாதியின் பெயர் கொண்டு நடக்கும் அநீதிகளை கண்டும் காணாமலும் அமைதி காப்பது எத்தகைய அயோக்கியத்தனம். இவைகளை விடவும் உச்சமாக பட்டியல் மக்கள் அனுபவிக்கும் ஒரு கொடூரம் இறந்த சடலங்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் நிலை. 

இந்தியா முழுவதும் பரவிய போராட்டதீ

பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் வாழ்வுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டே தான் வருகிறது ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் அடிப்படையான உணவின் மீது கை வைக்கும்  செயலில் ஈடுபட்ட மத்திய அரசை எதிர்த்து மக்கள் சீறி எழுந்துள்ளார்கள். ஆயிரம் பேருடன் தொடங்கிய போராட்டம் இப்போது பல கோடி மக்களால் பங்கு கொள்ளும் விதத்தில் நடந்து வருகிறது பஞ்சாப், ஹரியானாவில் பற்றிய தீயை இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

ஆளுநர் மாளிகை முற்றுகை! த பெ தி க தோழர்கள் கைது! 

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றதுஆளுநரை கண்டித்தும், தாமதமாக படும் நீதியும் அநீதி என்றும் கூறி போராடிக்கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை  காவல்துறை கைதுசெய்தது, ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

அரசியல் அட்டகத்தி ரஜினிகாந்த்!

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது ஆனால் அந்த நடிகருக்கு அரசியல் தெளிவு, சமூகம் பற்றிய புரிதல், கள செயல்பாடுகள், மக்களுக்காக களத்தில் நின்று உள்ளார்களா? என்று மக்கள் கேட்பதும் ஜனநாயக உரிமை தான் இந்திய நாட்டின் விவசாயிகளை ஒன்று கூடி நின்று போராடி வருகிறார்கள்! அதை பற்றி வாய் திறந்தாரா? 

இந்திய தேசத்தின் இருண்ட நாள் டிசம்பர் 6! 

உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் பேரிழப்பு. அதோடு மட்டும் அல்ல இதே நாளில் தான் இந்த தேசத்தின் இறையாண்மையும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, இந்துத்துவா மத வெறியர்களால் திட்டமிட்டு பாமர் மசூதி இடிக்கப்பட்டதும் இதே நாளில் தான்.

தலித் மக்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசின் ஓரவஞ்சனைப் போக்கு: தலித் மக்கள் தக்க  பாடம் புகட்டுவார்கள் ! 

அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும்,   காட்டப்படும் ஓரவஞ்சனையையும் தலித் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலின்போது அதிமுகவுக்கு தக்க படத்தைப் புகட்டுவார்கள் என்பதை ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். 

சமூகநீதிப் போராட்டமா ? அரசியல் ஆதாயமா?  PMK Protest! 

இப்படியெல்லாம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் தனது வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிய பிரச்சினைகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போது மௌனம் காத்த மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இப்போது ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்...

60 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து!

ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் அப்பள்ளியின் ஊழியர் வந்து யார் யாரெல்லாம் ஸ்காலர்ஷிப் வாங்குகிறார்கள் என்று கேட்கும்போது ஸ்காலர்ஷிப் வாங்கும் மாணவர்கள் தயங்கி, தயங்கி எழுந்து நிற்கிறார்கள் அவர்கள் மனதிற்குள் இருக்கும் பயம் நமது சாதி தெரிந்துவிடுமே என்ற அச்ச உணர்வு அவர்களின்  நாணத்துக்கும், தலைகுனிவிற்கும் காரணமாய் அமைகிறது கல்வி உதவி தொகை என்பது அவமானகரமான ஒன்றா?

ஐஐடியில் அரங்கேறும் அவலத்தை தடுக்கவே முடியாதா?

இட ஒதுக்கீடு இல்லை என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேறி இருக்கும், சாதி சான்றிதழை கிழித்து போட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று பேசுகிற அறிவாளிகள் நிறைந்த நம் மண்ணில் இன்று வரையிலும் இட ஒதுக்கீடு என்றால் என்ன?

இந்திய அளவில் விவசாயிகளின் போராட்டம்

அண்மையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்றிய முரணான வேளாண் சட்டங்களுக்கு ஏதிராக நாடு முழுவதும் ஏதிர்ப்பலைகள்  மேலெழுந்து வரும் நிலையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இருமாநிலங்களில்  தீவிரமான மக்கள் திரள் போராட்டங்களாக உருப்பெற்றது.

மூன்று   சட்டங்களையும் கைவிடுமா? மத்திய அரசு! 

நீங்கள் பசியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் வேகமாக ஒருவர் வந்து உங்கள் தட்டை  பிடுங்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த தட்டையும் மத்திய அரசு பிடுங்குகிறது. 

பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர்  உள்பட 11 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது..!

சென்னை வண்ணாரப்பேட்டையில், பெண் ஒருவர், கணவனை இழந்த நிலையில், தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.  இரண்டு மாதங்களுக்கு முன், சிறுமியின் தாயின் அக்கா மகளான ஷாகிதா பானு, உடல்நலம் சரியில்லாத, தன்னை கவனித்துக் கொள்ள சிறுமியை அனுப்பும்படி கேட்டுள்ளார்.

உத்திரபிரதேசமா  இல்லை குற்றங்களின் பிரதேசமா! 

உத்திரபிரதேசம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் 80 மக்களவை தொகுதிகளையும், 404 சட்டமன்ற தொகுதிகளின் கொண்டது. தாஜ் மஹால் ,ஆக்ரா கோட்டை என்கிற அழகிய கட்டிடங்களை தன்னகத்தே கொண்டது அழகியல் ஒருபுறம் என்றால் இதன் ஒட்டுமொத்த  உள்புறமும் பல வரலாற்றுக் கறைகள் நிறைந்தது.

அர்னாப்க்கு ஜாமீன் சமூக செயற்பாட்டாளர்களுக்கு சிறை! 

கொலைக் குற்றவாளிகளும், கொள்ளைக்காரர்களும், குற்றமிழைத்த அரசியல்வாதிகளும், வெகு இயல்பாக நம் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், பத்திரிகையாளர்களும் எளிதில் வெளிவர முடியாத அளவுக்கு கடினமான வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.

20 ஆயிரம் கோடியில் புதிய பாராளுமன்றம் தேவையா?

தேனாறு பாயுது செங்கதிறு சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதியிருப்பார். அதுதான் நம்முடைய இன்றைய நிலை உலக வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவே இந்த கொரோனா தொற்றால் முடங்கி பொருளாதார சரிவை சந்தித்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்த நிலையில் தான் நம் மத்திய அரசு 20,000 கோடியை புதிய பாராளுமன்றம் கட்ட ஒதுக்கியுள்ளது...

புதுச்சேரியில் பாலியல் பயங்கரம்! மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்!

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மிரட்டி மீண்டும், மீண்டும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூரத்தை செய்த குற்றவாளிகளுக்கு இன்றுவரை எந்த தண்டனையும், தீர்ப்பும் வழங்கப்படாத நிலையில் அதேபோன்று புதுச்சேரியில் பண்ணை வீட்டில் 5 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது...

சடலத்தை தூக்கிச் செல்ல சாலை வேண்டும்? தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் நவீன தீண்டாமை!

ஏன் ஒருவனை அடக்கம் செய்யும் மயானத்தின் கூட சாதிய பிரிவுகள் உள்ளன இப்படியான நிலை இருக்கிறதே இதைவிட கொடூரம் வேறு உண்டா என்று கேட்டாள் நான் நிச்சயம் உண்டு என்றுதான் கூறுவேன் சாதியை காரணம் காட்டி சடலத்தை கூட எடுத்துச் செல்ல வழியில்லாமல் வயல்வெளியில் தூக்கி செல்லும் மக்களின் துயரத்தை தான்...

சமத்துவ திருமணம்!

அறிவியல் யுகத்திலும் சாதியின் தாக்கம் குறைந்தபாடில்லை நித்தம் பல பிரச்சனைகள். சாதி பெயரை சொல்லி திட்டுவது,சாதிய சண்டைகள், தீண்டாமைச் சுவர், ஆணவப்படுகொலைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்வு என சாதியின் பெயரிலான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.

நேர்மைக்கு சன்மானம் மரணம்!

ஊடகத்துறைக்கு வேலைக்கு வருவதே மக்களின் குரலாக மாறவேண்டும்

ஊராட்சியில் சாதியின் ஆட்சி!

தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பேசு பொருள் என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான் இப்போது இவர்களுடைய லேடி சூப்பர் ஸ்டார் அவரை கொண்டாடித் தீர்க்கும் தமிழகம், நம் தமிழ் மண்ணில் நம்மோடு பிறந்து வளர்ந்த சக மனிதர்களை மனிதர்களாக கூட பார்க்காது ஒடுக்கும் வன்கொடுமையை என்னவென்று சொல்ல?

மீண்டும் கட்டப்பட்ட மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர்!

சென்ற ஆண்டு டிசம்பர் 2 ஒரு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து தன் வீட்டை தந்தையை இழந்த பெண் சிறுமி எனக்கு நோட்டு புக்கு கொடுத்தா என் அம்மாவை காப்பாற்றுவேன், என் அப்பாதான் போயிட்டாரு என்று கண்ணீர் மல்க பேசிய காணொளி பார்க்கும் அனைவர் கண்களையும் கலங்க செய்தது. பொதுமக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்ட அந்த தீண்டாமைச்சுவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

இப்பலா யாரு சாதிபாக்குறா?

யாராவது சாதி ஒழிப்பை பற்றி பேசினாலோ? சாதி பிரச்சனைகள் குறித்து பேசினாலோ? அறிவுடைய சமூகத்தின் வாதம் என்னவென்றால்.! இப்பலா யாரு சாதி பாக்குறா?

மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்!

திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு நேர்காணலில் பேட்டி அளித்து இருப்பார் விசாரணை திரைப்படத்தினை 22 பார்ட் களுக்கும் மேல் கூட எடுக்கலாம் என்று கூறியிருப்பார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே....

என் மகனை மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அற்புதம்மாளின் உருக்கமான பேட்டி,

‘வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் மநு ஸ்மிரிதி கடைபிடிக்கப்படுகிறது’ – தொல் திருமாவளவன்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், இப்போதே அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் கருத்தியல் சார்ந்து முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலை மறுவரையுறைச் செய்யும் மோடி-அமித் ஷா

1998-ம் ஆண்டு லால் கிருஷ்ன அத்வானியின் பாஜக, 25-க்கும் மேற்பட்ட கட்சிகளோடு தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது.

முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு அரசியல்தான் பேசுகிறீர்கள்..

கிரிக்கெட்டுடன் ஒப்பிடும்போது நான் தனிமையில் வாழ்ந்த நாட்களில் சக நண்பர்களோடு அமர்ந்து நீண்ட நேரங்கள் கால்பந்து விளையாட்டுக்களைப் பார்ப்பதில் கழிப்பதில் ஈடுபாடு வந்ததும் உண்டு. மரடோனா, ஜிடேன் போன்ற விளையாட்டு வீரர்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கான புவியியல் சார்ந்த காரணங்கள் இருந்ததும் இந்த ஈடுபாட்டுக்கான ஆதாரமாக அமைந்திருந்தது.

டெல்லி ஷகீன் பாக்கில் “எல்லாம் இயல்பாக உள்ளது”

“நாங்கள் வருத்தத்தில் இருக்கிறோம்” என்கிறார் டெல்லி ஷகீன் பாக்கில் வசிக்கும் இளைஞர் ஒருவர். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. கருத்து கூறுவதை நிறுத்துமாறு அருகிலிருக்கும் அவரது நண்பர் கண்களால் சைகை செய்கிறார்.

அரசியலமைப்பை அகற்றி மனுநீதியைக் கொண்டு வர முயற்சிக்கும் சாதிய பஞ்சாயத்துகள்

கிராமப்புற இந்தியாவில் பாரம்பர்ய சாதி அடிப்படையிலான பஞ்சாயத்துகளே நீதி பரிபாலன அமைப்பாக செயல்படுகிறது. கிராமங்களில் ஒவ்வொரு சாதிக்கும் தனியாக பஞ்சாயத்து செயல்படுகிறது.

CAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி

இலங்கையில் அந்த அரசாங்கத்தை வழி நடத்துகிற புத்த பிட்சுகள் எவ்வளவு கொடூரமானவர்களோ அவ்வளவு கொடுரமானவர்கள் ஆர்எஸ்எஸ் குருமார்கள் என்று வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

CAA: போராட்டம் தொடரும்- ஜி.ராமகிருஷ்ணன்

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

CAA: சேப்பாக்கத்தில் இசைமுழக்கப் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச்செயல்பாட்டாளர்களின் தொடர் இசைமுழக்கப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவருகிறது.

குடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை அசோக் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பத்திரிகை அலுவலகத்தில் உள்ளே புகுந்து பாமகவினர் வன்முறை

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து, அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளனர் பாமகவினர்.

குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது ஜனநாயக விரோதம் - கி. வீரமணி

குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது ஜனநாயக விரோத செயல் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பொருளாதார கொள்கை முடிவுகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்- திருமா

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால் மத்திய அரசு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பொருளாதார கொள்கை முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பெரியாருடைய சிந்தனைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பாஜக அவதூறுகளைப் பரப்புகிறது- திருமாவளவன்

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு கிளை மணியம்மையாரை கொச்சைப்படுத்தும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வன்மையான கண்டத்திற்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

கல்வி நிறுவனங்களில் தொடரும் மதவெறி வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- திருமா

ஹிஜாப் அணிந்திருந்த இசுலாமிய மாணவிக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவமதிப்பு, பல்கலைக்கழக நிர்வாகம் மதப்பாகு பாட்டை கடைப்பிடிப்பதா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் இதுவரையில் எந்த இராணுவத் தளபதிகளும் அரசியல் பேசியதில்லை- திருமாவளவன்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தோழர் நல்லக்கண்ணு கைது

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமித்ஷாவின் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்- பாஜக அமைச்சர் சி.டி ரவி 

கோத்ரா ரயில் எரிப்பிற்குக் குஜராத் கலவரம் மூலம் பதிலடிக்கொடுக்கப்பட்டதுபோல் தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று பாஜக அமைச்சர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களைப் படுகொலை செய்யும் பாஜக அரசின் அடக்கு முறையைக் கண்டிக்கிறேன் -திருமாவளவன்

காவல்துறை மூலம் முஸ்லிம்களைப் படுகொலை செய்யும் பாஜக அரசின் அடக்கு முறையைக் கண்டிக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரமிது- திருமாவளவன்

போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்குமுறையைத் திணிக்கும் பாஜகவின் பாசிச அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில்  ஜனநாயக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டமா? குடியை அழிக்கும் சட்டமா? - சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

பாசிச பாஜக கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும் அதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக-வை கண்டித்தும் நேற்று (டிசம்பர் 12) மாலை 4 மணிக்கு அண்ணாசாலையில் அனைத்து கட்சிகள், அமைப்புகளின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமைக் கொடுக்க இந்த அரசு முயற்சிக்காதது ஏன்?- திருமாவளவன்

இந்துக்களாக இருக்கின்ற ஈழத்தமிழர்களைக் குடியுரிமை கொடுத்து இந்த நாட்டில் தங்க வைக்க இந்த அரசு முயலாதது ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதாலா? தமிழர்களும் இசுலாமியர்களும் புறக்கணிக்கக்கூடியவர்களா? என்று நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் 

இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்தும் விதமாக நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தம் மசோதாவைக் கண்டித்து எதிர்வரும் 14ஆம் தேதி  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இலங்கையிலிருந்து வந்த 10 லட்சம் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா?- அசாதுதீன் ஒவைசி

மோடி அரசின் குடியுரிமை சட்ட மசோதாவை கிழித்தெறிந்தார் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி.

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரி போராட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று (டிசம்பர் 06) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மசூதி வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.

நான்கு பேரையும் என்கவுண்டர் செய்தது முறையான தீர்வு அல்ல- அருள்மொழி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்கவுண்டர்களால் தீர்க்கப்பட முடியாதது என்று வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

தீண்டாமைச் சுவர்கள் அனைத்தையும் அகற்றுங்கள்- ரவிக்குமார்

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ‘தீண்டாமைச் சுவர்’ என்ற வன்கொடுமை இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின்மீது படிந்துள்ள இந்தக் கறையைக் களையவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நளினி

தன்னையும் தனது கணவர் முருகனையும் கருனை கொலை செய்யக்கோரி நளினி 7வது நாட்களாகச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தீண்டாமைச் சுவரால் 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 

தீண்டாமைச் சுவரை எழுப்பி 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்யவேண்டும் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர்சாதியினருக்கு மட்டும் சட்ட விரோதமாக பம்பர் பரிசா?- கி.வீரமணி

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கை வாசிகளான பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமம் சாத்துவதா?

எழுவர் விடுதலை: முருகனைச் சாதாரண சிறைக்கு மாற்ற வலியுறுத்தி நளினி உண்ணாவிரதம்

தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகனைச் சாதாரண சிறைக்கு மாற்ற வலியுறுத்தி நளினி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி மதவெறி-திருமாவளவன்

மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆளுநரின் அனுமதியோடு கள்ளர் சாதிவெறியர்கள் 13 பேரையும் விடுதலை செய்துள்ளது தமிழக அரசு- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள்

7 தலித்துக்களை வெட்டிக் கொன்ற கள்ளர் சாதி வெறியர்களை விடுதலை செய்த எடப்பாடி அரசு,  எவ்வித தவறும் செய்யாமல் சிறையில் வாடும் ஏழுபேரை விடுதலை செய்ய மறுக்கின்றது

மேலவளவு சாதிய படுகொலை- குற்றவாளிகள் விடுதலை- இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்

மதுரை மேலவளவில் சாதி வெறி படுகொலையை நிகழ்த்திய 13 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம்

பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (நவம்பர் 12) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தலித் சமூகத்தை சேர்ந்தவரின் திருமணம் கோவிலுக்குள் நடக்ககூடாது என கோவிலை பூட்டிய ஆணவ சாதியினர்

அரியலூர் மாவட்டத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரின் திருமணம் அங்குள்ள கோவிலுக்குள் நடைபெறகூடாது என்று ஆணவ சாதியை சேர்ந்தவர்கள் கோவிலை மூடியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இடிக்கப்பட்டது எதுவோ அதைக் கட்டும் படி சொல்வது தானே நீதி -ஆளுர் ஷாநவாஸ்

பாபர் மசூதி வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ், `இடிக்கப்பட்டது எதுவோ அதைக் கட்டும் படி சொல்வது தானே நீதி. இது மனுநீதி` என்று தெரிவித்துள்ளார்.

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்யவேண்டும்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலையின் மீது கயிறைக்கட்டி தூக்கு மாட்டுவதுபோல் சித்தரித்த சாதி வெறியர்களை கைது செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீர்ப்புக்கும் நீதிக்கும் வித்தியாசம் உள்ளது என்று மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது- ரவிக்குமார் 

தீர்ப்புக்கும் நீதிக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர் ஆணவக் கொலை

கர்நாடக மாநிலத்தில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர் கடந்த புதன் கிழமையன்று ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாபர் மசூதி வழக்கு பெரும் குற்றத்திற்கு வெகுமதி- பொதுவுடைமை இயக்கம்

பாபர் மசூதியைச் சட்டவிரோதமாக இடித்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் மத துவேஷத்தை வளர்த்த இந்துத்துவ சக்திகளுக்கு என்ன தண்டனை? என்று பொதுவுடைமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.​​​​​​​

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையரை ஆணவக் கொலை செய்த இருவர் கைது

கர்நாடக மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையரை ஆணவக் கொலை செய்தவர்களில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம்-  கே. பாலகிருஷ்ணன்

மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சாஸ்திரங்களின் அடிப்படையில் மட்டுமே பாபர் மசூதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது- திருமா

ராமர் கோவிலைக் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதைப் போல பாபர் மசூதியைக் கட்டுவதற்கும் ஏன் அறக்கட்டளையை நிறுவக் கூடாது? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதச்சார்பற்ற என்கிற கொள்கையில் நாம் தீவிரமாக பணியாற்ற வேண்டிய காலமிது-எவிடன்ஸ் கதிர்

10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தலா 5 ஏக்கரில் ராமர் கோவிலும் 5 ஏக்கரில் பாபர் மசூதியும் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு இருக்கும் என்று ஆழமாக நம்பினேன் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி வழக்கு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக இருக்கிறதா?

அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்குச் சொந்தமானது என்று ஐந்து நீதிபதிகள் ஒரு மனதாக உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பில் திருப்தி இல்லை- சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி

உச்சநீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை என்று சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி வேண்டும்- திருமாவளவன்

தமிழ்நாடு நாள் கொண்டாடும் இந்தவேளையில், தமிழ்நாட்டுக்கென தனியே ‘மாநிலக்கொடி’ ஒன்றை உருவாக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முட்டை சாப்பிடுவது இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானதாம்-  பாஜக மூத்த தலைவர் கோபால் பார்கவா

பள்ளிகளில் குழந்தைகள் முட்டை சாப்பிடுவது நம் இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று மத்தியப் பிரதேச மாநில மூத்த பாஜக தலைவர் கோபால் பார்கவா தெரிவித்துள்ளார்.

நவீன குலக்கல்வி திட்டத்தைப் போராடி முறியடிப்போம்-  அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள்

தமிழக அரசு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியிட்டுள்ளது.

மணிகண்டன் என்கிற ஏழை மாணவனை நீக்கியது ஏன்?-  சி. மகேந்திரன்

அதே கல்லூரி ஆசிரிய பெருமக்கள்தான் நந்தனம் கல்லூரியில் ஒன்றுகூடி மணிகண்டன் என்கிற ஏழை மாணவனை டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள்.

சுர்ஜித் உயிரிழப்பு- மீட்புத் தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம்

ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்குக் கடுமையான விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய புதிய சட்டத்தை அரசு இயற்றிட வேண்டும்.

சுர்ஜித் மரணித்து விட்டான் ஆனால் அவன் நமக்குள் ஏற்படுத்திய தாக்கம் மரணிக்க நாம் விடக் கூடாது

82 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகும் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்று பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் செயல்பட்டுவரும் மதவெறி அமைப்புகளை வெளியேற்ற வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரசியல் ரீதியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் விளைவாகத் தமிழகத்தின் சமூக சீர்திருத்த வரலாற்றை பின்னுக்குத் தள்ளும் பாஜகவின் சித்தாந்தத்தை அடியொற்றி அரசுத்துறைகளில் நடவடிக்கைகளைக் கட்டமைப்பது, அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும்.

பாஜக - அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்குப் பாதுகாப்பில்லை- திருமாவளவன்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையும் போக்ஸோ சட்டத்தையும் தமிழ்நாட்டில் சரிவர நடைமுறைப்படுத்துவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி- திருமா கண்டனம் 

தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை முற்றாகப் பறித்து கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 15-ல் நீலச்சட்டை பேரணி 

எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

7 பேரின் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுவரும் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்குத் தமிழக ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா?

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமியை, கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய 6 மாணவர்கள் நீக்கம்

கும்பல் கொலைகள், காஷ்மீர் விவகாரம் போன்றவை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய மகாத்மா காந்தி அந்தராஷ்டிரிய இந்தி விஸ்வத்யாலய வர்தா கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களை நீக்கியுள்ளது நிர்வாகம்.

கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்- இயக்குனர் கரு. பழனியப்பன் 

துப்புரவு தொழில் செய்யும் தோழர்களே ஒரு நான்கு நாட்களுக்கு யாரும் எந்த வேலையும் செய்யாது பேசாமல் இருங்கள், அரசாங்கம் தானாக உங்களிடம் பேச வரும் என்று இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

மனித கழிவை மனிதனே அள்ளும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா?- ஜி.ராமகிருஷ்ணன்

அரசுதான் இப்படி கொடுமையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், சக மனிதர்கள் அந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

மோடி- ஜி ஜின்பிங் வருகைக்காக திபெத்திய மாணவர்களைக் கைது செய்த காவல்துறை

மோடி- ஜி ஜின்பிங் வருகையையொட்டி திபெத்திய மாணவர்களைக் கைது செய்துள்ளனர் தமிழக காவல்துறையினர். இதனைக் கண்டித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சி-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது.

தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன- திருமாவளவன்

உலக நாடுகள் மதிக்கும் புரட்சியாளர் அம்பேத்கரைத் தமிழகத்தில் தொடர்ந்து அவமதித்து வருவது தலைதூக்கி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி கருத்தரங்கம்

மத்திய பாஜக அரசு வரைவு செய்த புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று (அக்டோபர் 08)  திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு செலவு செய்யாதா?- தோழர் திருமுருகன் காந்தி 

தமிழரின் தொல் வரலாறு கண்டெடுக்கப்பட்ட கீழடி பகுதியை நிலத்தின் சொந்தக்காரர்களிடம் சரியான தொகையைக் கொடுத்து தமிழக அரசு வாங்கவேண்டும் என்று தோழர் திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

அடூர் மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு- மக்கள் அதிகாரம் கண்டனம்

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர்.

அடூர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் - திருமா

பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் எந்த ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியோ, யாரையும் புண்படுத்தக் கூடிய செய்தியோ இல்லை. நாட்டில் அப்பாவி மக்கள் பசுவின் பெயரால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு: வலுக்கும் கண்டனங்கள்

நம் கருத்தைச் சொன்னால் அது தேசத் துரோகமா? அப்படி என்றால் நாம் அமைதியாக இருக்கவேண்டும். அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் நினைத்ததைச் செய்கிறார்கள்.

மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைக்குத் தேசவிரோத வழக்கா? - கே. பாலகிருஷ்ணன் 

அரசு வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது பதற வைக்கிறது.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இருப்பது நியாயமானது என்று பகவத்கீதை சொல்கிறது- திருமாவளவன்

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இருப்பது நியாயமானது என்று பகவத்கீதை சொல்கிறது அதனால்தான் அதை எதிர்க்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது- ரவிக்குமார்

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது என்று ரவிக்குமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன- திருமாவளவன்

பொது வெளியில் மலம் கழித்தார்கள் என்ற காரணத்துக்காகத் தலித் வகுப்பைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளை அடித்துக் கொலைசெய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.

தமிழ் மொழி தெரியாதவர்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது- கே. பாலகிருஷ்ணன்

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகும் என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

காந்தியின் 150வது பிறந்த நாளில் எனது பிள்ளை வீடு திரும்புவானா? - அற்புதம்மாள்

காந்தியின் 100வது பிறந்த நாளில் 100க்கும் மேற்பட்ட ஆயுள் சிறை வாசிகள் விடுதலை செய்யப்பட்டதுபோல் காந்தியின் 150வது பிறந்த நாளான இன்று எனது பிள்ளை வீடு திரும்புவானா? என்று அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் கைது

புதிய கல்விக் கொள்கை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பகவத்கீதையை திணிக்காதே!- போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது

அண்ணா பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

15,000 ஆதாரங்களில் வழிபாட்டுத் தொடர்பான ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை- சு. வெங்கடேசன்

சமணம், பௌத்தம், வைணவம், சைவம் போன்ற பெரு மதங்கள் உருவாவதற்கு முன்பு இருந்த மனித கூட்டம் இயற்கையை வழிபட்டிருப்பார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய நிர்வாக மொழியாகத் தமிழை அறிவிக்கவேண்டும்-  ரவிக்குமார் எம்.பி.

தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய நிர்வாக மொழியாகத் தமிழை அறிவிக்கவேண்டும்.

பாஜக அரசின் 100 நாள் ஆட்சி சாதனை அல்ல, வேதனை - ரவிக்குமார்

இந்த பாஜக அரசு மேலும் மேலும் இந்தியப்  பொருளாதாரத்தைச் சிக்கலில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்த்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது- திருமாவளவன்

பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்த்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி பேராசிரியரை தாக்கிய பாஜகவின் ஏபிவிபி மாணவர்கள்

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் பிறந்த நாள் கொண்டாடிய பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களை வகுப்பறைக்குச் செல்லச் சொன்ன பேராசிரியர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

பாலியல் புகாரில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது

பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பாலியல் புகாரில் இன்று (செப்டம்பர் 20) கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தமிழக பணியிடங்களில் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் - மே 17 இயக்கம்

மதுரை, திருச்சி கோட்ட ரயில்வே பணி காலியிடங்களை வட இந்தியர்களைக் கொண்டு நிரப்பிய தென்னக ரயில்வேவைக் கண்டித்து மே 17 இயக்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கீழடி நிலத்தைப் பாதுகாக்க மத்திய தொல்லியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே. பாலகிருஷ்ணன் 

தமிழ் மக்களின் வரலாற்றுப் பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய பொது தேர்வுமுறையைக் கண்டித்து திருவண்ணாமலையில் போராட்டம்

5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் தமிழக அரசின் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி இன்று (செப்டம்பர் 19) திருவண்ணாமலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தைத் தகர்ப்பதுதான் பாஜகவின் நோக்கம்- திருமாவளவன்

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த மண்ணில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி,  ஒரே ஆட்சி என்கிற ஒற்றை தன்மையை நிறுவுவதற்குப் பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது

5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் தமிழக அரசின் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி நேற்று (செப்டம்பர் 18) அனைத்து ஜனநாயக இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலித் மக்களை இழிவுபடுத்திய சாதுவைக் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

தலித் மக்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய சுவாமிநாராயண் குழுவைச் சேர்ந்து சாது மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தலைமையில் பேரணி நடைபெற்றது.

சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த போராளி தாத்தா ரெட்டை மலை சீனிவாசன்

பறையன் என்கிற பெயரில் இதழ் ஒன்றினை நடத்தி இந்த சமூகத்தில் சாதியின் பெயரால் நிகழக்கூடிய அடக்குமுறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பிறப்பின் அடிப்படையில் (தகுதி அடிப்படையில் அல்ல) பார்ப்பன ஆண்கள் அனுபவிக்கும் முதல் பத்து சலுகைகள்

பெருநகரங்களில், தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்களைப் போல பார்ப்பனர்களுக்கு ஏற்படுவதில்லை.

எம்.பி தலித் என்பதால் ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்கள்.

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து இன்று (செப்டம்பர் 16) பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேனர் சரிந்து இளம் பெண் மரணம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நீதிமன்ற உத்தரவை காவல்துறையினரும், தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருந்துள்ளதன் விளைவே சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுபஶ்ரீ உயிரிழப்பு: விளம்பரத் தட்டிகள் தொடர்பாக அரசு சட்டம் இயற்ற வேண்டும்

விபத்து நேர்வதற்குக் காரணமானவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், சுபஶ்ரீயின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

5, 8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், அந்த புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் இருக்கிற ஒரு திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

சமூக ஆர்வலர் ஷீலா ரஷீத்துக்கு ஜாமின் 

காஷ்மீர் குறித்த கருத்தைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததற்காக சமூக ஆர்வலர் ஷீலா ரஹீத் மீது தேச துரோக வழக்குப்பதியப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய நவம்பர் 5ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணை போகும் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் 

நாகை வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை தகர்ப்பு ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணை போகும் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெறுகிறது.

பியூஷ் மனூஷ் மீது தாக்குதல் நடத்திய பாஜக குண்டர்களைக் கைது செய்- எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர்

சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனூஷ் மீது தாக்குதல் நடத்திய பாஜக குண்டர்களைக் கைது செய்யவேண்டும்.

வங்கி தொழிலாளர்கள் போராட்டம்

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 31) வங்கி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

வங்கிகள் இணைப்பு அல்ல, வங்கிகள் அழிப்பு - ரவிக்குமார்

வங்கி இணைக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.02 லட்சம் கோடி ரூபாய்க்கான வாராக் கடன்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்திருக்கிறது.

பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் இந்தியாவிற்குப் பெருத்த அவமானம்- எவிடன்ஸ் கதிர்

சூழலியல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது குறித்து பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் இந்தியாவிற்குப் பெருத்த அவமானம் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கூறியுள்ளார்.

அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைப் பயங்கரவாதியாகக் கருதவேண்டும்- ரவிக்குமார் எம்.பி 

அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைப் பயங்கரவாதியாகக் கருதி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் மாபெரும் வங்கிக்கொள்ளை-  ரவிக்குமார்

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கைமூலம் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ள பாஜக அரசு ரிசர்வ் வங்கியைச் சூறையாடுவதன்மூலம் திவால் நிலையை நோக்கித் தள்ளுகிறது.

புதிய கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிரானது- சு. வெங்கடேசன் எம்.பி 

கல்வி எங்கள் பிறப்புரிமை அதை என்ன பெயர் கொண்டு எவன் பறிக்க நினைத்தாலும் அதற்கெதிரான சமரசமற்ற போராட்டத்தில் தமிழகம் பின்தங்காது என்று சு. வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் சமரசம் கூடாது- திருமாவளவன்

அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அம்பேத்கர் சிலை உடைப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தோழர்கள் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 26) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் விலை உயர்வு: ஏழை எளிய மக்களுக்கு பெரும் நெருக்கடி- திருமாவளவன்

பால் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்துவதாக ஆவின் பால் நிறுவனம் அறிவித்துள்ளதை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

மோடி அரசின் சனாதன கல்விக்கொள்கையை எதிர்த்து பரப்புரை பயணம் 

இன்று (ஆகஸ்ட் 16)  விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் `மோடி அரசின் சனாதன கல்விக்கொள்கையை எதிர்த்து பரப்புரை` பயணம் மேற்கொள்கின்றனர்.

சாதி அடையாள கயிறுகளைக் குழந்தைகளுக்குக் கட்டுவது சமூகத்திற்கு நல்லது இல்லை-திருமாவளவன்

சாதி அடையாளங்கள் மற்றும் கட்சி அடையாளங்களை முன் நிறுத்துகிற கயிறுகளைக் குழந்தைகளின் கைகளில் கட்டுவது பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு விதைப்பது சமூகத்திற்கு நல்லது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன்

நீலகிரி மாவட்டத்தைப் ‘பேரிடரால் பாதிக்கப்பட்டப் பகுதியாக’ அறிவித்து, மக்களின் துயர் துடைப்பதற்குப் போதிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கருத்தரங்கம்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து இன்று மாலை 6 மணிக்கு எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் `கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு` கருத்தரங்கத்தை நடத்துகின்றனர்.

மனிதன்தான் சக மனிதனை சுரண்டுவதற்கு கடவுள் என்கிற கற்பனை கருத்தியலைப் படைத்தான் -சத்யராஜ்

மனிதன்தான் சக மனிதனை எய்ப்பதற்காகவும், சுரண்டுவதற்காகவும் கடவுள் என்கிற கற்பனை கருத்தியலைப் படைத்துவிட்டான் என்று தோழர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு அளிப்பதால்தான் சாதிகள் நீடிக்கிறது- பாஜக எம்.எல்.ஏ-வின் சர்ச்சை பேச்சு

பட்டியலினத்தினர் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டில் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்.

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை ரஜினியிடம் எதிர்பார்க்க முடியாது- திருமாவளவன்

நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவை மகாபாரதத்திலிருந்து கிருஷ்ணன்-அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து மாற்றி ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நாடாக உருவாக்குகிறது மத்திய அரசு     

மக்களைச் சாதி ரீதியாக, மத ரீதியாக பிளவுப்படுத்தி நாட்டை நாசகரமாக மாற்றும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஆங்கிரி அனுமனுக்கு யார்மேல் ஆங்கிரி?

prise the lord, 786 போன்ற வாசகங்கள் யாரையும் அடையாளப் படுத்தவில்லையா? என்று கேட்டால், ஆம் அடையாளப் படுத்துகிறது. ஆனால் அது கட்டாயப்படுத்தவில்லை, காயப்படுத்தவில்லை.

ஜம்மு காஷ்மீர் மக்களைச் சந்திக்கச் சென்ற சீத்தராம் யெச்சூரி, டி. ராஜா கைது

ஜம்மு காஷ்மீர் மக்களைச் சந்திக்கச் சென்ற சீத்தராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ராஜஸ்தானில் ஆணவக்கொலைகளைத் தடுக்கப் புதிய சட்டம்

ராஜஸ்தானில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அம்மாநிலத்தின் காங்கிரஸ் அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

இது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல! அதற்கும் மேலே- ரவிக்குமார்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல ! அதற்கும் மேலே என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து- மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அரசு நடத்தியுள்ள ஜனநாயக படுகொலை- கே. பாலகிருஷ்ணன்

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அரசு நடத்தியுள்ளது ஜனநாயக படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு மத்திய அரசுத் திட்டம் வைத்திருக்கிறதா?- திருமாவளவன்

தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்கிற வகையில் ஆற்று நீரை இணைக்கிற வகையில் நதிகளை இணைக்கிற வகையில் மத்திய அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா? என்று தொல். திருமாவளவன் எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

புதிய சட்ட மசோதா  அரசியல் சட்டத்துக்கு எதிரானது- சு. வெங்கடேசன்

புதிய சட்ட மசோதா சமூக நீதிக்கு எதிரானது என்பதால் அதை நாங்கள்  முழு முற்றாக எதிர்க்கிறோம் என்று  சு.வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் வேண்டாம்- திருமாவளவன்

நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் (NMC)வேண்டாம். இவற்றை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும்.

மனித கழிவை மனிதனே அள்ளும் அவலத்தை அழித்திடவேண்டும்- திருமாவளவன் 

மனித கழிவை மனிதனே அகற்றும் அவலம் இன்றும் தொடர்வது வேதனை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும்- திருமாவளவன்

அஞ்சல் துறை தேர்வுகளைத் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி வழக்கம்போலத் தமிழில் எழுத உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்தை வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது- முத்தரசன் 

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கில் 10% இட ஒதுக்கீடு- வைகோ

சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கில் 10% இட ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மறுமலர்ச்சி திராவிடக் முன்னேற்றக் கழகத் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைகள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திடத் தனிச் சட்டம் இயற்றவேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

மது ஒழிப்பு போராளி நந்தினியை விடுதலை செய்- கே. பாலகிருஷ்ணன்

மது ஒழிப்பு போராளி நந்தினி மற்றும் ஆனந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் இந்தியைத் திணிக்க அரசின் முரட்டுத்தனமான முயற்சி-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழுவின், பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு ஆதரவாக 6500 கலைஞர்கள்

ராஜராஜன் சோழன் குறித்த இயக்குனர் ரஞ்சித்தின் கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சுமார் 6,500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ”கலைஞர்களின் பேச்சு உரிமைக்கான கூட்டணியின்” கீழ் ஒன்றிணைந்து  ரஞ்சித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முயற்சி ஆபத்தானது- திருமாவளவன்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முயற்சி ஆபத்தானது அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தலித் சமூகத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியைக் கொடூரமாகத் தாக்கிய காவல்துறை

சிவகங்கை அருகே 7 மாத கர்ப்பிணியை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமாவளவன்

இந்தியை மட்டுமே பிறமொழி பேசுவோர் மீது திணிக்கும் முயற்சியை முற்றிலும் கைவிடவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தோழர் அசோக்கின் படுகொலையைக் கண்டித்து போராட்டம்

தோழர் அசோக்கின் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் திருநெல்வேலியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

தென்னக ரயில்வேயில் இந்தி திணிப்பு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழகத்தில் உள்ள ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.