ஆசிய விளையாட்டு போட்டியின் போது வீரர்களுக்கு அமைச்சர் உணவு பரிமாறினாரா? உண்மை என்ன?

/files/detail1.png

ஆசிய விளையாட்டு போட்டியின் போது வீரர்களுக்கு அமைச்சர் உணவு பரிமாறினாரா? உண்மை என்ன?

  • 0
  • 0

-V.கோபி

இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரான ராஜ்வர்த்தன் சிங் ரத்தோர், இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய தடகள வீரர்களுக்கு உணவு பரிமாறுவதாக கூறப்படும் புகைப்படம் சமூக வலைதளத்தில் ‘வைரலாக’ பரவி வருகிறது. 

அப்புகைப்படத்தில், அமைச்சர் தன் கையில் தட்டோடு விளையாட்டு வீர்ர்களிடம் பேசுவது போல் உள்ளது. அவர் வைத்திருக்கும் தட்டில் மூன்று கின்னங்கள் இருப்பதால், வீரர்களுக்கு அமைச்சர் உணவு பரிமாறுகிறார் என அனைவரும் எண்ணிக்கொண்டனர்.

The frustrated Indian என்பவர், “தட்டை வைத்திருப்பது யார் என்று தெரியுமா, அது நமது விளையாட்டுத் துறை அமைச்சர்” என்று தலைப்பிட்டு இந்த புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்பதிவு 6000 முறைக்கும் மேல் பகிரப்பட்டுள்ளது. மேலும், “அமைச்சர் ஒருவர் வீர்ர்களுக்கு உணவு பரிமாறுகிறார் என்பதை ஐந்து வருடங்களுக்கு முன் நினைத்து கூட பார்க்க முடியாது” என்று குறிப்பிட்டு கட்டுரை ஒன்றையும் The frustrated Indian வெளியிட்டுள்ளது. இதனை 1500 பேர் பகிர்ந்துள்ளனர்.

போலி செய்திகளை பரப்பும் போஸ்ட்கார்ட் நியுஸின் நிறுவனர் மகேஷ் ஹெட்கேவும் ரத்தோரின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்பதிவு 900 தடவைக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில பாஜக தலைவர் டாக்டர்.லட்சுமன், பாஜக சட்டசபை உறுப்பினர் ரகுபதி பட், ஆம் ஆத்மியின் டெல்லி சட்டசபை உறுப்பினர் கபில் மிஷ்ரா என பலரும் ரத்தோர் உணவு பரிமாறுவதாக கூறி இப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதில் மிஷ்ராவின் பதிவு 7,700 தடவைக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

ரத்தோரின் புகைப்படங்களை கொலேஜ் முறையில் இணைத்து, “புதிய இந்தியா” என்று தலைபிட்டு பேஸ்புக் பக்கமான India First பதிவிட்டுள்ளது. இதுவரை 12,000 தடவைக்கு மேல் இப்பதிவு பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை, போலி செய்தியை பரப்புகிறவர்களும், அரசியல்வாதிகளும், தனிநபர்களும் பகிர்கிறார்கள் என நினைக்காதீர்கள், பல ஊடக நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும் கூட ரத்தோர் “உணவு பரிமாறுவதை” புகழ்கிறார்கள்.

ரத்தோர் உணவு பரிமாறுவதாக, NDTV, DNA, Dainik Jagran, India Today, Republic World போன்ற ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டுள்ளன. இவர்கள் கட்டுரைக்கு ஒரே ஆதாரம், ரத்தோர் கையில் தட்டு வைத்திருப்பதே. பல ஊடகவியலாளர்கள் விளையாட்டு துறை அமைச்சரின் செயலை ட்விட்டரில் பாராட்டி வருகிறார்கள். மூத்த ஊடகவியலாளர்களான ராஜ்தீப் சர்தேசி, பல்லவி ஜோஷியும் இதில் அடங்குவர். ஆனால் ராஜ்தீப் சர்தேசி தனது ட்வீடை தற்போது அழித்துள்ளார். 

உண்மை என்ன?

இப்படி சமூக வலைதளத்தில் ‘வைரலாக’ பரவும் இப்புகைப்படம் முதன் முதலில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியானது. ஜகர்த்தா நகரில் உள்ள ஆசிய விளையாடு போட்டியின் கிராமத்தில் விளையாட்டு வீர்ர்கள் மற்றும் அதிகாரிகளோடு இணைந்து விளையாட்டு துறை அமைச்சரான ரத்தோர் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை இந்திய விளையாட்டு ஆனையம் (SAI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டது. அதில் ரத்தோர் தட்டை வைத்திருக்கும் புகைப்படமும் அடங்கும். ஆனால் ரத்தோர் உணவு பரிமாறுவதாக SAI கூறவில்லை.

தான் வீர்ர்களுக்கு உணவோ அல்லது தேனீரோ பரிமாறினேன் என விளையாட்டு துறை அமைச்சரான ரத்தோரும் எங்கும் கூறவில்லை.

அன்று ரத்தோர் பல வீர்ர்களிடம் உரையாடிய புகைப்படங்கள் உள்ளன. ஆனால் அவர் கையில் தட்டு வைத்துள்ள புகைப்படம் மட்டும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. நாம் அந்த புகைப்படத்தை கூர்ந்து கவனித்தாலே, அமைச்சர் தன்னுடைய உணவை தட்டில் எடுத்து செல்வது நன்றாக தெரியும்.

அன்று ரத்தோர் கலந்து கொண்ட நிகழ்வில் பங்கேற்ற பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் கூறுகையில், “அனைவரும் கூறுவது போல் அமைச்சர் உணவோ தேனீரோ வீர்ர்களுக்கு பரிமாறவில்லை. 

தனுடைய உணவை எடுத்துகொண்டு செல்லும்போது அங்கிருந்த வீரர்களோடு உரையாடினார். அவ்வளவே” என்றார். இதன்மூலம் ரத்தோர் உணவு பரிமாறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இப்படி தவறான தகவல்களை தனிநபர்கள் மட்டுமல்லாமல் ஊடக நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும், அமைச்சர்களும் சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள். உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இப்படி தவறான தகவல்களை பரப்பவே உதவும். இதுபோன்ற சமயங்களில் கண்டிப்பான அனுகுமுறை தேவைப்படுகிறது.

நன்றி: altnews

Leave Comments

Comments (0)