அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,10:51:07 PM
-தமிழில் V.கோபி
“ராகுல் காந்தியும் சீனாவும்: அடிமையா, அன்பா அல்லது வேறு ஏதாவதா?” என்று தலைப்பிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஆகஸ்ட் 31ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
இந்த வீடியோ முழுவதிலும் ராகுல் காந்தி கேலி செய்யப்படுகிறார். “ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வத்ரா மூவரும் சீன தூதரை சந்தித்துள்ளனர். சீன உணவு திருவிழாவின் போது சந்தித்து கொண்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்போது ஆறு மாதங்கள் கழித்து, சீன கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குழுவினரை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்புகிறது பாஜக. ஆனந்த் ஷர்மாவும் புகைபடத்தில் இருக்கிறார்….” என்று இந்த வீடியோவின் வர்ணனையாளர் விவரிக்கிறார்.
இந்த வீடியோவில் வரும் முதல் புகைப்படத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வத்ரா ஆகியோர் இந்தியாவிற்கான சீன தூதரோடு புகைப்படத்தில் உள்ளனர்.
கடந்த காலங்களில் இதே புகைப்படம் ராகுல் கந்தியை குறை கூறுவதற்கு பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 2017ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீன படைக்கும் இந்தியப் படைக்கும் பிரச்சனை மூண்ட சமயத்தில் ராகுல் காந்தி சீன தூதரை ரகசியமாக சந்தித்துள்ளார் என கூறப்பட்டது.
உண்மை என்ன?
2017ம் ஆண்டு Republic TV மற்றும் Times Now செய்தி தொலைக்காட்சிகள் இந்த புகைப்படத்தை ட்வீட் செய்து, “தேதியில்லாத”, “சரிபார்க்கப்படாத” படம் எனக் கூறி ராகுல் காந்தியின் செயலை விமர்சித்தது. இதுகுறித்து ஏற்கனவே இப்புகைப்படம் குறித்து ஆஸ்ட் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதை நாம் எளிதாக கூகுளில் சென்று ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடினாலே நமக்கு உண்மை தெரிந்து விடும். இரு செய்தி தொலைக்காட்சிகள் கூறியது போல் ராகுல் காந்தி சீன தூதரோடு இருக்கும் புகைப்படம் “தேதியில்லாதது” அல்ல. இப்புகைப்படம் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதியிலிருந்து சீன தூதரக வலைதளத்தில் உள்ளது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா மூவரும் சீன உணவு விழாவில் கலந்து கொண்டனர். அந்த விழாவில், மத்திய அமைசர் சுரேஷ் பாபு, கம்யுனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ஜனதா தள கட்சியைச் சேர்ந்த கே.சி.தியாகி மற்றும் பாஜக தலைவர்கள் தருன் விஜய் மற்றும் உதித் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தற்போது ராகுல் காந்தி கைலாஷ் மான்சரோவர் பகுதிகளுக்கு யாத்திரை சென்றுள்ள நிலையில், இதே நிகழ்வில் கலந்து கொண்ட ராகுல் காந்தியின் புகைப்படத்தை மட்டும் வைத்துகொண்டு, சீனாவோடு ரகசிய உறவு வைத்துள்ளார் என ராகுல் காந்தியை பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டுகிறது. சமூக வலைதளத்தில் இப்படி தவறான தகவல்களை பரப்புவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஏற்கனவே பொய் என்று கூறிய செய்தியை திரும்ப திரும்ப உண்மைபோல் கூறி பரப்புவது சரியான செயல் அல்ல.
நன்றி ALT NEWS
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments