அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani-t
January 26, 2021,10:20:40 AM
இந்த நெருக்கடி காலத்தில் மக்களுக்கான ஒரு படைப்பை சிறுகதைகளை எழுதி, வெளியீட்டு விழாவை வருகிற 10-1-2021 அன்று தோழர்கள் முன்னிலையில் உங்களோடு பிரசாத் லேபில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
சிலிண்டர் விலையை வானளவு உயர்த்தி,நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சோற்றில் மண் அள்ளி போட்டுள்ள மோடி அரசை கண்டித்து,இன்று (19/12/2020) கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2020 யில் கொரானா மட்டுமே கோரத்தாண்டவம் ஆடியதா? என்றால் வழக்கமாக இந்திய தேசத்தில் தலைவிரித்தாடும் சாதியும், மதமும் கொரானா காலத்திலும் ஓய்வெடுக்காமல் தன் கொடூரத்தை காட்டிக் கொண்டே வந்தது. பெரும் மனித இழப்பை நோய்த்தொற்று கொடுத்து வந்தாலும் சாதி வைரசும் அதன் தாக்கத்தை நாளுக்கு நாள் கொடுத்துக் கொண்டேதான் இருந்தது.
கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மக்கள் விரோத மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் கடும் குளிருக்கும்,நோய் வாய்ப்பட்டும்,விபத்திற்கு உள்ளாகியும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்தில் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் அமைப்பின் முழுநேர ஊழியருமான தோழர்.எஸ்.கருணா என்கிற 'கருப்பு கருணா' உடல்நலக் குறைவு காரணமாக திங்களன்று (21.12.2020) இயற்கை எய்தினார் என்பதை அறிவீர்கள்.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து வட இந்தியாவை போராட்டக்களமாக கடும் குளிரில் வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் சூழலில் ஓடி ஒளிந்து விட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பற்றி பார்ப்போம்.
மக்களை பாதிக்கும் இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை ஐஐடியை முற்றுகையிடும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22--12--2020) நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், உலக்குடி என்ற ஊரில் தலித்களுக்கு முடி திருத்திய காரணத்தினால் முடிதிருத்தும் தொழிலாளி ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சாதி வெறியர்களால் ஊர் விளக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கவும் ஆரம்பித்துள்ளனர்.ஆனாலும் அவர்களால் பள்ளி படிப்பை தாண்ட முடியாத நிலை உள்ளது ஏன் தெரியுமா?
இன்றைக்கும் சாதியை ஆதரிக்கும் பலர் இம்மண்ணில் இருக்கிறார்கள். அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை, எனக்கு என் சாதி பெருமை தான் முக்கியம் என பெருமிதம் கொள்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இந்த செய்தியைப் படித்துவிட்டு உங்கள் முகத்தில் நீங்களே உமிழ்ந்து கொள்ளுங்கள்.
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிமுக அரசு செய்து வருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் வசித்து வரும் மக்கள் வீடு இல்லாமல் போனால் அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?
நீங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் உங்கள் வீட்டை திடீரென அரசு இயந்திரம், காவல்துறையின் அடக்குமுறையோடு வந்து இடித்தால் உங்கள் நிலை என்னவாகும்! இதே நிலையில் தான் சென்னையில் பல ஆயிரம் தலித் குடும்பங்கள் தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றன..
உண்மையிலேயே மாணவர்களின் வாழ்வை உயர்த்தும் ஆசிரியர்களை கண்டுபிடித்து அங்கீகரிப்பதற்கான ஒரு முயற்சி அதில், சர்வதேச அளவில் ஒரு இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளார். யார் அவர்?
மத்திய பாரதிய ஜனதா அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 கோடி செலவில் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு சேலம் மற்றும் சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்தது மத்திய அரசு, மாநில அரசும் தன் விசுவாசத்தை காட்ட அத்திட்டத்தை ஒப்புக்கொண்டது.
தீண்டாமைச்சுவர், ஆணவப்படுகொலை, சாதிக்கலவரம் என்று தினம் தினம் சாதியின் பெயர் கொண்டு நடக்கும் அநீதிகளை கண்டும் காணாமலும் அமைதி காப்பது எத்தகைய அயோக்கியத்தனம். இவைகளை விடவும் உச்சமாக பட்டியல் மக்கள் அனுபவிக்கும் ஒரு கொடூரம் இறந்த சடலங்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் நிலை.
பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் வாழ்வுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டே தான் வருகிறது ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் அடிப்படையான உணவின் மீது கை வைக்கும் செயலில் ஈடுபட்ட மத்திய அரசை எதிர்த்து மக்கள் சீறி எழுந்துள்ளார்கள். ஆயிரம் பேருடன் தொடங்கிய போராட்டம் இப்போது பல கோடி மக்களால் பங்கு கொள்ளும் விதத்தில் நடந்து வருகிறது பஞ்சாப், ஹரியானாவில் பற்றிய தீயை இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றதுஆளுநரை கண்டித்தும், தாமதமாக படும் நீதியும் அநீதி என்றும் கூறி போராடிக்கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறை கைதுசெய்தது, ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது ஆனால் அந்த நடிகருக்கு அரசியல் தெளிவு, சமூகம் பற்றிய புரிதல், கள செயல்பாடுகள், மக்களுக்காக களத்தில் நின்று உள்ளார்களா? என்று மக்கள் கேட்பதும் ஜனநாயக உரிமை தான் இந்திய நாட்டின் விவசாயிகளை ஒன்று கூடி நின்று போராடி வருகிறார்கள்! அதை பற்றி வாய் திறந்தாரா?
உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் பேரிழப்பு. அதோடு மட்டும் அல்ல இதே நாளில் தான் இந்த தேசத்தின் இறையாண்மையும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, இந்துத்துவா மத வெறியர்களால் திட்டமிட்டு பாமர் மசூதி இடிக்கப்பட்டதும் இதே நாளில் தான்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் செல்லம் கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இப்படியெல்லாம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் தனது வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிய பிரச்சினைகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போது மௌனம் காத்த மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இப்போது ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்...
ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் அப்பள்ளியின் ஊழியர் வந்து யார் யாரெல்லாம் ஸ்காலர்ஷிப் வாங்குகிறார்கள் என்று கேட்கும்போது ஸ்காலர்ஷிப் வாங்கும் மாணவர்கள் தயங்கி, தயங்கி எழுந்து நிற்கிறார்கள் அவர்கள் மனதிற்குள் இருக்கும் பயம் நமது சாதி தெரிந்துவிடுமே என்ற அச்ச உணர்வு அவர்களின் நாணத்துக்கும், தலைகுனிவிற்கும் காரணமாய் அமைகிறது கல்வி உதவி தொகை என்பது அவமானகரமான ஒன்றா?
இட ஒதுக்கீடு இல்லை என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேறி இருக்கும், சாதி சான்றிதழை கிழித்து போட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று பேசுகிற அறிவாளிகள் நிறைந்த நம் மண்ணில் இன்று வரையிலும் இட ஒதுக்கீடு என்றால் என்ன?
சமீபகாலமாக பாய்காட் என்கிற வார்த்தையை சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் அதிகமாக நாம் பார்த்திருக்கலாம் அதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ள வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை தான்.
ஒரே ஒரு நாள் தண்ணிர் யாருக்கும் கிடைக்காது ஏதோ ஒரு பூகோள மாறுபாடு ஏற்பட்டு உள்ளது என்று ஒரு அறிவிப்பு வருகிறது என்னவாகும்?
நீங்கள் பசியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் வேகமாக ஒருவர் வந்து உங்கள் தட்டை பிடுங்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த தட்டையும் மத்திய அரசு பிடுங்குகிறது.
ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டு மிக எளிதாக எல்லோர் கைகளிலும் கிடைத்து வருகிறது. விளையாட்டு மக்களை உற்சாகப்படுத்தவும், பொழுது போக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மனதைப் புத்துணர்ச்சியாக்கவும் உருவானது. எந்த ஒரு நல்ல செயல்பாட்டிலும் தீமையை விதைக்கும் நயவஞ்சக உலகில் விளையாட்டிலும் சூது என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள்
கலை மனித வாழ்வின் ஆத்மார்த்தமான கொண்டாட்டம், மக்களின் வலி, காதல், கோபம், இயலாமை, உரிமை சமத்துவம் என அனைத்து இயல்புகளையும் காட்டுவதற்கான வழித்தடம் அதன் நவீன நீட்சியாக சினிமா.
உத்திரபிரதேசம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் 80 மக்களவை தொகுதிகளையும், 404 சட்டமன்ற தொகுதிகளின் கொண்டது. தாஜ் மஹால் ,ஆக்ரா கோட்டை என்கிற அழகிய கட்டிடங்களை தன்னகத்தே கொண்டது அழகியல் ஒருபுறம் என்றால் இதன் ஒட்டுமொத்த உள்புறமும் பல வரலாற்றுக் கறைகள் நிறைந்தது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு இந்தியாவில் முடிவுக்கு வருகிறது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ள சட்டத்தின் படி கழிவுகளை அகற்ற இனி இயந்திரங்கள் கட்டாயம்!
கொலைக் குற்றவாளிகளும், கொள்ளைக்காரர்களும், குற்றமிழைத்த அரசியல்வாதிகளும், வெகு இயல்பாக நம் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், பத்திரிகையாளர்களும் எளிதில் வெளிவர முடியாத அளவுக்கு கடினமான வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.
சென்ற ஆண்டு டிசம்பர் 2 ஒரு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து தன் வீட்டை தந்தையை இழந்த பெண் சிறுமி எனக்கு நோட்டு புக்கு கொடுத்தா என் அம்மாவை காப்பாற்றுவேன், என் அப்பாதான் போயிட்டாரு என்று கண்ணீர் மல்க பேசிய காணொளி பார்க்கும் அனைவர் கண்களையும் கலங்க செய்தது. பொதுமக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்ட அந்த தீண்டாமைச்சுவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மிரட்டி மீண்டும், மீண்டும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூரத்தை செய்த குற்றவாளிகளுக்கு இன்றுவரை எந்த தண்டனையும், தீர்ப்பும் வழங்கப்படாத நிலையில் அதேபோன்று புதுச்சேரியில் பண்ணை வீட்டில் 5 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது...
தேனாறு பாயுது செங்கதிறு சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதியிருப்பார். அதுதான் நம்முடைய இன்றைய நிலை உலக வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவே இந்த கொரோனா தொற்றால் முடங்கி பொருளாதார சரிவை சந்தித்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்த நிலையில் தான் நம் மத்திய அரசு 20,000 கோடியை புதிய பாராளுமன்றம் கட்ட ஒதுக்கியுள்ளது...
ஒவ்வொரு புத்தகமும் அழகாய் சிரிக்கிறது என்றால் அதற்குப் பின்னே அதை மலரச் செய்து தன்னை வருத்திக் கொண்ட பதிப்பாசிரியரின் கண்ணீர் நிச்சயம் ஒளிந்திருக்கும். படைப்புலகம் என்பதே கடினம் நிறைந்ததுதான் பொழுதுபோக்கை, வெற்றுக்கூச்சலை மட்டுமே சிலாகிக்கும் தற்கால தலைமுறைக்கு மத்தியில் கருத்தாழம்மிக்க புத்தகங்களை பதிவிட்டு வெளியிடுவது என்பது எத்தகைய சிரமத்தை கொடுக்கும் என்றாலும் அதை சிரமமாக எண்ணாமல் எதிர்கால தலைமுறையை பண்படுத்த நாம் செய்யும் பணி, நம் கடமை என்று எண்ணி அரை நூற்றாண்டு காலம் தமிழ் உலகில் களம் கண்டவர் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள்.
தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பேசு பொருள் என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான் இப்போது இவர்களுடைய லேடி சூப்பர் ஸ்டார் அவரை கொண்டாடித் தீர்க்கும் தமிழகம், நம் தமிழ் மண்ணில் நம்மோடு பிறந்து வளர்ந்த சக மனிதர்களை மனிதர்களாக கூட பார்க்காது ஒடுக்கும் வன்கொடுமையை என்னவென்று சொல்ல?
ஏன் ஒருவனை அடக்கம் செய்யும் மயானத்தின் கூட சாதிய பிரிவுகள் உள்ளன இப்படியான நிலை இருக்கிறதே இதைவிட கொடூரம் வேறு உண்டா என்று கேட்டாள் நான் நிச்சயம் உண்டு என்றுதான் கூறுவேன் சாதியை காரணம் காட்டி சடலத்தை கூட எடுத்துச் செல்ல வழியில்லாமல் வயல்வெளியில் தூக்கி செல்லும் மக்களின் துயரத்தை தான்...
திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு நேர்காணலில் பேட்டி அளித்து இருப்பார் விசாரணை திரைப்படத்தினை 22 பார்ட் களுக்கும் மேல் கூட எடுக்கலாம் என்று கூறியிருப்பார்.
அறிவியல் யுகத்திலும் சாதியின் தாக்கம் குறைந்தபாடில்லை நித்தம் பல பிரச்சனைகள். சாதி பெயரை சொல்லி திட்டுவது,சாதிய சண்டைகள், தீண்டாமைச் சுவர், ஆணவப்படுகொலைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்வு என சாதியின் பெயரிலான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
யாராவது சாதி ஒழிப்பை பற்றி பேசினாலோ? சாதி பிரச்சனைகள் குறித்து பேசினாலோ? அறிவுடைய சமூகத்தின் வாதம் என்னவென்றால்.! இப்பலா யாரு சாதி பாக்குறா?
என் மகனை மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அற்புதம்மாளின் உருக்கமான பேட்டி,
ஒரு மிகப்பெரிய மரம் கீழே விழுந்து விட்டது ஒரு பறவையின் சிறகு முறிந்துவிட்டது என்று சென்ற வருடம் இதே நாளில் இயக்குநர் அருண்மொழி அவர்களின் மறைவையொட்டி இயக்குனர் மிஷ்கின் கண்ணீருடன் கூறினார்.
தோழர் முனைவர், திருமாவளவனை ஆதரித்தும் மானுடத்திற்கு எதிரான மனுவை எதிர்த்தும் தமிழ் ஸ்டுடியோ மற்றும் தம்மம் சிந்தனையாளர் பேரவை இணைந்து நடத்தும் ஒருங்கிணைப்பு விளக்கக் கூட்டம் ஆறு மணி அளவில் திணை நில வாசிகள் நாடக குழுவின் பெண்ணியத்தை மையப்படுத்திய நாடகத்தோடு சிறப்பாகத் தொடங்கியது.
இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதை இரண்டாக பிரித்து காட்ட இயலும் ஒன்று சனாதனம் மற்றொன்ரு அதை எதிர்க்கும் சனநாயகம்.
January 9, 2021 - selvamani-t
December 28, 2020 - selvamani-t
December 26, 2020 - selvamani-t
December 22, 2020 - selvamani-t
December 20, 2020 - selvamani-t
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreJanuary 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.