மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

/files/detail1.png

மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

  • 0
  • 0

 

திருநின்றவூரில், மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட இளைஞர் விசவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூரை அடுத்த பேரத்தூரை சேர்ந்தவர் சம்பத்குமார். 24 வயதான இவருக்கு நேற்று முன்தினம் (செப்டம்பர் 07) பிறந்த நாள் என்பதால் தனது நண்பர் நரேந்திரன் என்பவருடன் திருநின்றவூரை சேர்ந்த சாமியாரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றுள்ளார். அப்போது சாமியார் தனது வீட்டில் இருக்கிற கழிவு நீர்த் தொட்டியில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதனைச் சுத்தம் செய்யவேண்டும் என்று அந்த இரு இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து நரேந்திரன் கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு விசவாயு தாக்கியதில் மயக்கமடைந்திருக்கிறார். இதனைப் பார்த்த சம்பத் குமார்  நரேந்திரனைக் காப்பாற்றுவதற்காகக் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சம்பத் குமாரையும் விசவாயு தாக்கியது. சம்பத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நரேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

Leave Comments

Comments (0)