இந்தி எழுத்தை அழித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

/files/detail1.png

இந்தி எழுத்தை அழித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

  • 0
  • 0

 

இந்தியாவின் ஒற்றை மொழி இந்திதான் என்று கூறிய அமித்ஷாவின் கருத்தைக் கண்டித்து நேற்று (செப்டம்பர் 19) குடியாத்தத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 14ஆம் தேதி இந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், ”சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும்”என்று குறிப்பிட்டிருந்தார். அமித்ஷாவின் இத்தகைய கருத்து விவாத பொருளாக மாறியது. பல்வேறு மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டுவந்த பாஜக, தற்போது இந்தியையும் திணிக்க முயற்சிக்கிறது என்று பலரும் கண்டம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், அமித்ஷாவின் கருத்தைக் கண்டித்து நேற்று (செப்டம்பர் 19) குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த இளைஞர்கள் குடியாத்தம் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கு எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்தனர்.

Leave Comments

Comments (0)