திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
March 3, 2021,2:11:50 PM
ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும் எனப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
”எதிர்க்கும் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது. அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசத்துரோகி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. இந்திய அரசியலமைப்பு கருத்துச் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. நாட்டின் ஒரு குடிமகன் கூட தனது சொந்த நாட்டில் உயிர் பயத்தில் வாழும் நிலை கூடாது. இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை நிறுத்த வேண்டும்” என்று அடூர் கோபால கிருஷ்ணன், மணிரத்னம், அபர்னா சென், அனுராக் காஷ்யாப், கொங்கொனா சென், சவுமிதா சாட்டர்ஜி, ராமச்சந்திர குஹா போன்ற 49 பேர் கடிதம் எழுதிக் கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு எதிராகப் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நேற்று (அக்டோபர் 03) மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இதுபோல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ’ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும், பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. அதனால் மக்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று எழுத்தாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள், பத்திரிக்கையாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இயற்கை வளங்கள் ஒரு புறத்தில் சுரண்டப்பட்டு இருக்கிறது, மறுபுறத்தில் சாதிய மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்துவருகிறது. மற்றொரு பக்கம் பொருளாதார மந்த நிலையாக இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன என்னவெல்லாம் நடந்துவிடும் என்று நாம் பயந்தோமோ அது அனைத்தும் தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருகிறது.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments