யாழில் பெண் கடத்தல் விவகாரம் – நீதி கோரி போராட்டம்

/files/detail1.png

யாழில் பெண் கடத்தல் விவகாரம் – நீதி கோரி போராட்டம்

  • 0
  • 0

 

யாழ்.நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடா்பில் நீதியைவேண்டி நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனா்.

நாவாந்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்த நிலையில் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த நபா் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தாா்.

alt text

இந்நிலையில் பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபா் எங்கே? எனக்கேட்டும், காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனா் எனக்கேட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்போது “எம் பிள்ளைகளின் எதிா்காலம் என்ன..?”, “சிறுவா், பெண்கள் துஸ்பிரயோகம் தமிழ் இனத்துக்கு மட்டுமா..?” என்பனபோன்ற கோஷங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

alt text

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆங்காங்கு பெண்கள், இளைஞர்கள் என காணாமல் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இது போர் காலங்களில்  தமிழர்கள்  காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கையை விட குறைவு என்ற போதிலும் இப்போது யார் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என தெளிவாக தெரிகின்றன. ஆனாலும் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில்  நடக்கும்  இவ்வாறான செயற்பாடுகளைக்கண்டும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் உள்ளது என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் படையினர், காவல்துறையினருக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் நடந்த கடத்தல் தொடர்பாக பிடிக்கப்பட்ட குற்றவாளியை காவல்துறையினர் தப்பிச்செல்ல விட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த பொது மக்கள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)