அடுத்த கால்பந்து உலக்கோப்பையிலாவது இந்திய அணி விளையாடுமா?

/files/detail1.png

அடுத்த கால்பந்து உலக்கோப்பையிலாவது இந்திய அணி விளையாடுமா?

  • 0
  • 0

-V.கோபி

 

உலகின் மிகப்பெரும் விளையாட்டு நிகழ்ச்சியான கால்பந்து உலக கோப்பை போட்டிகள் ரஷ்ய நாட்டில் நடைபெற்று வருகின்றன. இச்சமயத்தில் ஒவ்வொரு இந்தியரும் வருடம் தவறாமல் கேட்க கூடிய ஒரே கேள்வி, அடுத்த உலககோப்பையிலாவது இந்தியா விளையாடுமா?

இந்த முறை இக்கேள்வியில் சில நம்பிக்கை தெரிகிறது. சமீபத்திய இந்தியன் சூப்பர் லீக்கின் (ISL) வெற்றி ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியன் சூப்பர் லீக் ஆரம்பித்த இந்த நான்கு ஆண்டுகளில் இந்திய கால்பந்து அணியின் தரவரிசை மோசமான 171வது இடத்திலிருந்து 97வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சரி! இந்த முன்னேற்றமும் தொழில்முறை லீக்கின் வெற்றியும் இந்திய அணி உலககோப்பையில் விளையாடுவதற்கு உதவி புரியுமா?

உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகளை நாம் உற்றுநோக்கினால் இதற்கு விடை கிடைக்கும். ஒரு நாட்டு அணி உலக கோப்பையில் தேர்வாவதற்கும் அங்குள்ள கால்பந்து கிளப்பிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உதாரணமாக ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை எடுத்து கொள்ளலாம்.

வட அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மெக்ஸிகோ மற்றும் கோஸ்டா ரிகா நாடுகளில் மட்டுமே அக்கண்டத்தின் முன்னனி 15 கால்பந்து கிளப்புகள் உள்ளன. அதேசமயத்தில் வட அமெரிக்க கண்டத்தின் முக்கிய நாடுகளான  அமெரிக்காவிலும் கனடாவிலும் சாதாரணமான கால்பந்து போட்டிகளும் தரம் குறைந்த கிளப்புகளுமே உள்ளதால் அவர்களால் உலக்கோப்பை போட்டிக்கு தேர்வாக முடியவில்லை.

இதனை ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சூழலோடும் ஒப்பிட்டு பார்க்கலாம். ஆசியாவில் உள்ள 25 முன்ன்னி கால்பந்து கிளப்புகளில் 15 இந்த வருட உலக கோப்பைக்கு தேர்வாகியுள்ள (ஈரான், சவுதி அரேபியா, ஜப்பான், தெங்கொரியா) நாடுகளில் உள்ளது. இருந்தாலும் செல்வாக்குமிக்க லீக் போட்டிகளாலும் பணம் படைத்த கிளப்புகள் இருந்தாலும் உலக் கோப்பையில் தேர்வாவதற்கு உத்தரவாதம் கிடையாது. இதற்கு பண வசதி படைத்த சீன சூப்பர் லீக் சிறந்த உதாரணம்.

தொழில்முறையாக லீக் போட்டிகள் தொடங்கிய 2004ம் ஆண்டிலிருந்து சீன காலபந்து கிளப்புகள் புகழ்பெற்ற வீர்ர்களை அதிக விலைக்கு எடுத்த காரணத்தினால் ஆசியாவின் முன்னனி கிளப்புகளாக மாறின. சென்ற வருடம் அர்ஜெண்டினா வீர்ரான கார்லோஸ் தாவேஸை வார சம்பளமாக 820000 டாலருக்கு ஷாங்காயை சேர்ந்த கிளப் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, அலிபாபா நிறுவனத்திற்குச் சொந்தமான Guangzhou Evergrande என்ற காலபந்து அணி உலகளவில் நான்காவது வசதிபடைத்த கிளப்பாக உள்ளது. சீன சூப்பர் லீக்கில் விளையாடும் பல வீர்ர்களின் நாட்டு அணிகள் உலககோப்பை போட்டிக்கு தேர்வாகிய நிலையில் சீனாவால் தேர்வு பெறுவதற்கான முதல் கட்டத்தை கூட தாண்ட முடியவில்லை. ஆகவே செல்வாக்குமிக்க கிளப்புகள் இருப்பதால் நேரடியாக தகுதி பெற முடியாது. வலிமையான அணியை அமைத்தால் மட்டுமே அது முடியும்.

லீக் போட்டிகளும் கிளப்களும் வலிமையான அணி அமைவதற்கு காரணம் இல்லையென்றால், பின் பிற நாட்டு அணிகள் உலககோப்பையில் தேர்வாவதற்கான காரணம் என்ன?

தேசிய அணியில் இருக்கும் ஒருவர் “நவீன கால்பந்து போட்டிகளின் மெக்கா” என அழைக்கப்படும் ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடுவதால் ஏற்படும் பலன் அளவிடமுடியாதது. இந்த வருட உலக்கோப்பையில் சவுதி அரேபியாவை தவிர்த்து மற்ற 31 நாட்டு அணிகளிலும் குறைந்தபட்சம் 5 வீர்ர்களாவது (சில சமயங்களில் 8 வீர்ர்கள்) ஏதாவது ஒரு ஐரோப்பிய கிளப் அணிக்காக விளையடுபவர்களாக இருப்பார்கள். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் கிளப்புகளில் மட்டும் பல நாடுகளைச் சேர்ந்த 205 வீர்ர்கள் விளையாடுகிறார்கள்.

“நவீன கால்பந்து விளையாட்டின் ‘அறிவியலை’ உருவாக்கிய இங்குதான் போட்டி மிகுந்த பல தரப்பட்ட கிளப்புகளும், திறன் மிகுந்த வீர்ர்களை உருவாக்கும் பல வசதிகள் உள்ளன. இன்றைய காலத்தில் உலககோப்பை அணியில் இடம்பெறுவதற்கான தகுதியாக ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடிய அணுபவம் முன்தேவையாக உள்ளது” என்கிறார் லிவர்பூல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஜமீல் டேவிட். 

இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளால் நாட்டில் கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் கூடியுள்ளதை யாரும் மறுக்கவில்லை. இதன்மூலம் இந்திய கால்பந்து அணிக்கு தேவையான உலக கவனமும் பொருளாதார பலமும் கிடைத்துள்ளது. ஆனாலும் ISL போட்டிகளின் மூலம் இந்திய வீர்ர்கள் ஐரோப்பிய கிளப்புகளில் ஆடும் திறமையை வளர்த்து கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

கிழக்கு வங்காள அணியின் கோல்கீப்பர் குருப்ரீத் சிங் சந்து 2014ம் அண்டு நார்வே நாட்டின் முதல் தர அணியான Stabaek ஒப்பந்தம் செய்தபோது அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். ஆனால் ஐரோப்பியாவின் மற்றொரு ஒப்பந்தத்தை மறுத்து விட்டு 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்த குருப்ரீத் சிங், பெங்களூரூ FC அணிக்காக மிகப்பெரும் தொகைக்கு 2023 ஆண்டுவரை ஒப்ந்தம் செய்யப்பட்டார். தற்போதைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஐரோப்பிய லீக் அனுபவத்தை பெற்ற ஒரே வீரர் இந்தியாவின் மிகச்சிறந்த கோல்கீப்பரில் ஒருவரான குருப்ரீத் சிங் மட்டுமே. தான் ஐரோப்பியாவில் பெறுவதை விட ISLல் அதிகமாக சம்பாதிப்பதாக சமீபத்தில் குருப்ரீத் சிங் தெரிவித்தது குறிப்பிட்த்தக்கது.

2026 உலக்கோப்பை போட்டிக்கு 32 அணிகளிலிருந்து 48 அணிகளாகவும், ஆசிய நாடுகளுக்கான இடத்தை நான்கிலிருந்து எட்டாகவும் அதிகரிக்கப் போவதாக FIFA முடிவு செய்துள்ளது. ஆகையால் இந்தியா உலக்கோப்பை போட்டிக்கு தேர்வாவதற்கு சிறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் எதிர்காலத்தில் பல உயரங்களைப் பெறுவதற்கு ISL போட்டிகள் மட்டும் போதாது.


Article Link: https://www.google.co.in/amp/s/www.thehindubusinessline.com/opinion/will-india-play-a-football-world-cup/article24332005.ece/amp/

Leave Comments

Comments (0)