மனித உடல் க்ளூகோசினால் மட்டும் தான் இயங்குமா?

/files/detail1.png

மனித உடல் க்ளூகோசினால் மட்டும் தான் இயங்குமா?

  • 6
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

 

இந்த க்ளூகோசைப் பெற நாம் சதா மூன்று வேளையும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை நம்பியே நமது வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா? உண்மை நிலைதான் என்ன? 

"கீடோசிஸ்"(KETOSIS) என்றால் என்ன??விடை தெரிய இந்த பகுதிக்குள் பயணிப்போம் வாருங்கள். 

பசி பஞ்சத்தை பார்க்காத தலைமுறைகளாக நாம் இன்று வளர்ந்து வந்தாலும் நமது முன்னோர்கள் தினமும் ஒரு வேளை உணவுக்கு கூட அல்லல்பட்டதை நினைவு கூர்ந்திட வேண்டும். இன்றைய தலைமுறையான நாம் பசுமை புரட்சியின் பயனாய் மூன்று வேளையும் தானியங்கள் கிடைக்கப்பெற்று பஞ்சத்தின் அச்சமின்றி வாழ்ந்து வருகிறோம். நமது பாட்டன்கள் ஒரு வேளை மட்டும் உண்டு வாழ்ந்த அரிசி நமக்கு இப்போது மூன்று வேளை ஆயிற்று. அன்று தீபாவளி பொங்கல் அன்று மட்டும் செய்யப்பட்ட பலகாரங்களான இட்லி போன்றவை இன்று அனைத்து வீடுகளில் தமிழனின் தேசிய உணவாயிற்று. நாம் நம் முன்னோர்களைப் போல உழைப்பதுமில்லை. சரி.. மாவுச்சத்து இல்லாமல் எப்படி நம் உடல் இயங்கும் என்று பார்க்கலாம்.

நமது உடலை மகிழ்வுந்துடன் (car) ஒப்பீடு செய்யுங்கள்

ஒரு மகிழ்வுந்து டீசலிலும் இயங்கும் 

எரிவாயுவிலும்(LPG)  இயங்கும் 

ஆனால் எந்த எரிபொருளில் இயங்குவதற்காக என்ஜின் உருவாக்கப்பட்டது என்று கேட்டால் உடனே மெக்கானிக்குகள் பதில் 

"டீஸல்" என்பதே 

அதைப்போலத் தான் நமது உடலும்.

நமது உடல் எனும் இன்ஜின் 

மாவுச்சத்தை விட கொழுப்பில் நன்றாக இயங்கும்.

கொழுப்பை பிரதான உணவாக  கொடுக்கும் பொழுது உடல் எவ்வாறு "கீடோசிஸ்" எனும் கொழுப்பை எரிபொருளாக எரிக்கும் நிலைக்குச் செல்கிறது என்று பார்ப்போம்.

கொழுப்பின் பயன்களை அறியாத இந்த உலகில் "கீடோசிஸ்" என்பது ஒரு கெட்ட வார்த்தை 

"கீடோன்ஸ்" மிகவும் கெட்ட பொருட்கள் .ஆனால் உண்மை யாதெனில் கீடோன்கள் மிகவும் சுத்தமான நமது மூளையும் விரும்பக்கூடிய நீடித்து நிற்கக் கூடிய ஆற்றலைத் தரவல்ல எரிபொருள். நாம் மாவுச்சத்தை உண்பதை நிறுத்தும் பொழுது நமது உடல் வேறு எரிபொருளைக் கேட்கும். மாவுச் சத்து இருந்த இடத்தில் நாம் கொழுப்பை கொடுத்தால், நமது உடல் சிறிது சிறிதாக கொழுப்பை எரித்து ஆற்றல் உண்டு செய்யும் "கீட்டோசிஸ்" எனும் நிலைக்குச் செல்லும். 

நமது உணவில் கொடுக்கும் கொழுப்பை ஃபேட்டி ஆசிட்களாக  நமது ஜீரண மண்டலம் மாற்றும்.

அதில் இருந்து கீடோன்களாக 

பீட்டா ஹைட்ராக்ஸி புடைரேட்(beta hydroxy butyrate) 

மற்றும் அசிட்டோ அசிடேட்(aceto acetate)  ஆகிய இருவரும் கிடைப்பார்கள். இந்த இரட்டை சகோதரர்களின் ஒருமித்த பெயர் தான் KETONES செல்களுக்கு ஆற்றலை சமைத்துத் தருவது "மைட்டோகான்ட்ரியா" எனும் செல் உறுப்பாகும்.அந்த மைட்டோகான்ட்ரியாவிற்குள் மாவுச்சத்து நுழைய சில வேதிவினை மாற்றங்களை (biochemical reactions) அடைய வேண்டும். அதற்கு ஆற்றல் தேவை. அதுவே நமது கொழுப்பு@ ஃபேட்டி ஆசிட்டுக்கு வி.ஐ.பி என்ட்ரி கொடுக்காத குறைதான். 

எல்- கார்னிடின் (L-carnitine)  என்ற சைரன் வைத்த வி.ஐ.பி காரில் ஏறி விரைவாக உள்ளே சென்று விடும்.

இப்படி உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் கீடோன் எரிபொருளாக மாறும் இந்த நிலைதான் "கீடோசிஸ்"

இதை உணவின் மூலம் அடைவதால் இதன் பெயர் 

"Nutritional Ketosis" 

எனப்படும். குறை மாவு நிறை கொழுப்பு உண்பவர்கள் அடைவது இந்த Nutritional ketosis எனும் நிலையைத் தான். இந்த நிலையை அடைய உதவும் உணவு முறைக்கு "ketogenic diet"

என்று பெயர். இந்த கீடோசிஸினால் என்ன பயன்??

கீடோன்கள் மூளைக்கு மிகவும் பிடித்த எரிபொருள். 

அதனால் தான் வலிப்பு நோய், மன அழுத்தம், மனத்தாழ்வு நிலை போன்ற பல மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு "கீடோஜெனிக் டயட்" பரிந்துரைக்கப்பட்டு நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

மேலும் மூளையின் நரம்பு இணைப்புகளில் உருவாகும் GABA எனும் நொதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து அல்சீமர் எனும் மறதி வியாதி, பார்கின்சன் வியாதி போன்ற வியாதிகள் வராமல் தடுக்கிறது இந்த கீடோன்ஸ். 

குழந்தை பிறந்து அது பருகும் "சீம்பால்"(colostrum) கொழுப்பு தான் 

மேலும் அந்த குழந்தைக்கு 

ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே(exclusive Breast feeding)(partial ketosis)குடிக்கக் கொடுப்பதும் இதனால் தான். இந்த ஆறு மாதத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மாவுசத்தை குறைத்து கொழுப்பை உண்பதால்

நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வருகின்றன. நீரிழவுக்கான மாத்திரைகள் இன்சுலின் ஊசிகள் இல்லாமலே HbA1C அளவுகள் சரியான அளவுக்கு வருகின்றன

பல ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகின்றன. அதில் முக்கியமானது இளம்பெண்களுக்கு வரும் கருமுட்டை நீர்க்குமிழி நோய் (poly cystic ovary disease) , PCOD முழுவதுமாக கீடோஜெனிக் டயட்டில் குண்மாகிறது. 

உடல் பருமனால் (obesity) அவதிப்படுபவர்களின் எடையைக் குறைத்து அவர்கள் இழந்த இளமையை மீண்டும் பரிசளிக்கிறது. 

HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவைக் கூட்டுகிறது.

Oxidised LDL எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.

முகப்பரு(acne)  போன்ற தோல் பிரச்சனைகள் குணமாகின்றன. 

கொழுப்பு நிரம்பிய உணவை உண்ணும் போது நமது வயிறு திருப்தி நிலையை(sateity) அடைந்து விடுவதால் அடிக்கடி நாம் உணவு உண்ண வேண்டிய தேவை இருக்காது. மாவுச்சத்து உணவு உண்ணும் போது எடுக்கும் அகோரப் பசி , கார்ப் வெறி(carb craving)  என்பது கீடோ டயட்டில் அறவே இராது. எத்தனை மணி நேர விரதமாக இருந்தாலும் மனம் "ஜென் ஞானி" போல அமைதியாக இருக்கும். நமது உடலுக்குத் தேவையான நிலையான சீரான ஆற்றலைத் (sustained flow of  energy) தந்து கொண்டே இருக்கும். 

க்ளூகோசில் கிடைக்கும் ஆற்றலில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இருக்கும். (Fluctuations in flow of energy) .இத்தனை அற்புதங்கள் செய்யும் 

கீடோசிஸிற்குள் நம் உடல்  செல்ல  எப்படியான உணவை உண்ண வேண்டும்??? அடுத்த பகுதியில் காண்போம் 

முந்தைய தொப்டரினை படிக்க : http://karuppu.thamizhstudio.com/news/fat-is-a-good-friend-4

\r\n

Leave Comments

Comments (0)