இந்திய இலங்கை உறவைப் பலப்படுத்துவோம்- ராம் நாத் கோவிந்த்

/files/detail1.png

இந்திய இலங்கை உறவைப் பலப்படுத்துவோம்- ராம் நாத் கோவிந்த்

  • 0
  • 0

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் புதியசெயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அனுப்பிய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் அவர் கூறியுள்ளது, இலங்கை மக்களின் நலனுக்காக இலங்கை ஜனாதிபதி முன்னெடுத்துவரும் மக்கள் நேய நிகழ்ச்சித் திட்டங்கள் பாராட்டுக்குரியவையாகும்.

சகோதர அயல் நாடுகள் என்ற ரீதியில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுகள் பிரிக்க முடியாத சிறப்பு வாய்ந்தவை.

இந்நிலையில், எதிர்காலத்திலும் இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் பலமடையும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்க இந்தியா எதிர்பார்த்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)