ஈழம் உருவாக ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்- மகிந்த தரப்பு உறுதி

/files/detail1.png

ஈழம் உருவாக ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்- மகிந்த தரப்பு உறுதி

  • 0
  • 0

 

ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, இரா.சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதாக மஹிந்த ஆதரவு தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், ஈழம் உருவாக தமது தரப்பு ஒருபோதும் இடமளிக்காது என இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே ஆதரவு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த   போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஊடக சந்திப்பில்   தொடர்ந்து கருத்து தெரிவித்த  அவர், “கடந்த காலங்களில் நாடாளுமன்றில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டன. பிரதமர், சபாநாயகர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைந்து நாட்டில் மீண்டும் ஈழத்தைக் உருவாக்கும் நோக்கிலேயே செயற்பட்டார்கள்.

இதற்காகவே சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வர இந்த மூவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில், கடந்த காலங்களில் எமக்கான விவாத நேரங்கள் கூட மட்டுப்படுத்தப்பட்டு இருந்தன.

மக்களின் உரிமை தொடர்பில் கருத்து வெளியிட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு வாய்ப்பு வழங்கவில்லை. எமக்கான நேரம் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜே.வி.பிக்குமே வழங்கப்பட்டன.

எம்மை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுத்திருந்தோம். அரசியலமைப்பு நிர்ணயச் சபையில் கூட நாம் புறக்கணிக்கப்பட்டோம்.

இதனால், முக்கியமான பதவிகளுக்கான நியமனங்கள்கூடி சம்பந்தன் மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரின் தேவைக்கு ஏற்பவே வழங்கப்பட்டன.

ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, சம்பந்தன் ஆகிய இந்த மூவரின் கையில் சிக்குண்டிருந்த இந்த நாடாளுமன்றம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்து கிடைத்ததையடுத்து தற்போது விடுதலை பெற்றுள்ளது என்றே நாம் கருதுகிறோம்.

எனவே, மக்களின் உரிமையை வென்றெடுக்கும் எமது போராட்டம் இனி நிறுத்தப்படாது என்றே தெரிகிறது” என்றார்.

Leave Comments

Comments (0)