புதிய கல்விக் கொள்கை 2019-ஐ நிராகரிப்போம் 

/files/detail1.png

புதிய கல்விக் கொள்கை 2019-ஐ நிராகரிப்போம் 

  • 0
  • 0

 

மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை –2019-ஐ நிராகரிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை முறை மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி இருக்கிறது. இந்த முறை உண்மையில் அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையல்ல. இது கல்வியைச் சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலன் என்று இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வழுபெற்றுவருகிறது. 

இந்நிலையில், ”புதிய கல்விக் கொள்கை 2019-ஐ நிராகரிப்போம்” என்ற தலைப்பில் எதிர்வரும் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பாடத்திட்டங்களில் காவியைப் புகுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளனர்.  

Leave Comments

Comments (0)