விழுப்புரத்தில் - தமிழ் ஸ்டுடியோ தொடக்க விழா

/files/detail1.png

விழுப்புரத்தில் - தமிழ் ஸ்டுடியோ தொடக்க விழா

  • 0
  • 0

 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மதியம் 2 மணிக்கு விழுப்புரத்தில் மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா நடைபெறவிருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோவின் கனவு திட்டங்களில் ஒன்றான தமிழ்நாடு முழுக்க மாற்று சினிமாவிற்கான மையம் அமைக்கும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில், அதில் முதல்படியாக விழுப்புரத்தில் வரும் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ` மாற்று சினிமாவிற்கான மையம்` கோலாகலமாகத் தொடங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பெஸ்டிவல் வெர்சன் திரைப்படம் திரையிடல், பாலுமகேந்திரா விருது விழாவில் கடந்த இரண்டு ஆண்டுகள் முதலிடம் பிடித்த இரண்டு குறும்படங்கள் திரையிடல் என கலைக்கட்டும் இந்த விழாவையும் மையத்தையும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தொடங்கி வைக்கிறார். விழுப்புரத்தில் இதனை சாத்தியப்படுத்திய தோழர்கள் கார்க்கி, பிராக்சி மைய தோழர்கள் அனைவருக்கும் தமிழ் ஸ்டுடியோ நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

விழுப்புரத்தில் - மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா.

நாள்: 03.11.2019 ஞாயிறு மதியம் 2 மணி

மதியம் 2 மணிக்கு: மேற்கு தொடர்ச்சிமலை பெஸ்டிவல் வெர்சன் திரையிடல் (தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக திடையிடல்) | 1:55:23

மாலை 4 மணிக்கு: மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா நிகழ்வு.

குறும்படம் 1: உள்ளங்கை நெல்லிக்கனி | இயக்கம்: ஹரிஹர சுதன்| (17:07)

குறும்படம் 2: DESTINASIA | இயக்கம்: கெளரி ஷங்கர் | (28:12)

சிறப்புரை: பாலாஜி சக்திவேல், திரைப்பட இயக்குனர்.

ஒருங்கிணைப்பு: மாலைப்பொழுதினிலே வாசகர் வட்டம், பிராக்ஸிஸ் படிப்பகம் மற்றும் தமிழ் ஸ்டுடியோ

இடம்: பிராக்ஸிஸ் படிப்பகம், எல்லிசத்திரம் சாலை, VGP நகர், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்-605602

கூகில் மேப்: https://www.google.com/…/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a53576d…

தொடர்புக்கு 98406 44916, 9952534083

அனைவரும் வருக, அனுமதி இலவசம்.

Leave Comments

Comments (0)