எம்.பி தலித் என்பதால் ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராம மக்கள்

/files/detail1.png

எம்.பி தலித் என்பதால் ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராம மக்கள்

  • 0
  • 0

 

கர்நாடக மாநிலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், பாவாகடா தாலுகா, கோலாரஹட்டி கிராமத்திற்கு வீடற்றவர்களுக்கு வீடு கட்டிதரும் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக சித்ரா துர்கா தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நாரயணசாமி சென்றிருந்தார். கோலாரஹட்டி கிராமம் யாதவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. நாடாளுமன்ற உறுப்பினர் நாரயணசாமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர் மக்கள். ”தலித் சமூகத்தைச் சேர்ந்த யாரையும் எங்கள் ஊருக்குள் அனுமதிப்பதில்லை. என்னவாக இருந்தாலும் ஊருக்கு வெளியே அமர்ந்து ஆய்வு செய்யுங்கள்” என்று அந்த மக்கள் கூறியுள்ளனர். 

இதனையடுத்து அவர் அந்த கிராமத்திற்குச் செல்லாமல் திரும்பிச் சென்றுள்ளார்.

Leave Comments

Comments (0)