பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் முறை சரி என்ற வெங்கடகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு 

/files/detail1.png

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் முறை சரி என்ற வெங்கடகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு 

  • 4
  • 0

 

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற முறை சரியானது என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் என்பவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி கொச்சியில் `தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு` நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்பவர், ”பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற முறை சரியானது. நாயிலும் குதிரையிலும் சாதி உண்டு மனித இனத்தில் சாதி இருப்பதில் என்ன தவறு. நாய்களில், பொம்மரேனியன், லேப்ரேடர் போலப் பல ஜாதிகள் இருக்கும் போது, மனிதர்களிடம் ஏன் ஜாதி இருக்கக் கூடாது” என்று பேசினார். வெங்கடகிருஷ்ணனின் இத்தகைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பேசு பொருளாக மாறியது. 

இந்நிலையில், மக்களிடையே சாதி உணர்வைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் வெங்கடகிருஷ்ணன் பேசியுள்ளார். அதனால் அவரைக் கைது செய்யவேண்டும் என்று பெரியாரிய கூட்டமைப்பின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குபதுவு செய்துள்ளனர்.
 

Leave Comments

Comments (0)