அமெரிக்காவிற்கு அதிர்ச்சிகொடுத்த வெனிசுவேலா

/files/detail1.png

அமெரிக்காவிற்கு அதிர்ச்சிகொடுத்த வெனிசுவேலா

  • 0
  • 0

 

அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்த வெனிசுவேல ஜனாதிபதி நிகலஸ் மதுரோ, அமெரிக்க இராஜதந்திரிகள் 72 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.

தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே  நிகலஸ் மதுரோ இந்த உத்தரவை அறிவித்துள்ளார்.

அமெரிக்கா தொலைவிலிருந்து தமது நாட்டை ஆட்சி செய்ய முயல்வதாகவும் தமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பங்கம் விளைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுஆன் கு அய்டோவை அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில், ஜுஆன் கு அய்டோ தம்மை வெனிசுவேலாவின் தலைவராக பிரகடனப்படுத்திக் கொண்டார்,

இதையடுத்து பிரேஸில் உள்ளிட்ட சில தென் அமெரிக்க நாடுகள் அவரை ஜனாதிபதியாக அங்கீகரித்தன.

கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிகலஸ் மதுரோ வெற்றியீட்டியிருந்தார், இந்தத் தேர்தலை சில கட்சிகள் புறக்கணித்திருந்தன,

இந்த நிலையில் மதுரோ தமது இரண்டாவது பதவிக்காலத்தை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில், வெனிசுவேல எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன,

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்கா பகிரங்க ஆதரவு வழங்கியது என குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் தமது இராணுவம் ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும் என நிகலஸ் மதுரோ அழைப்பு விடுத்துள்ளார்.

Leave Comments

Comments (0)