இலங்கையில் அமெரிக்க படை முகாம்

/files/detail1.png

இலங்கையில் அமெரிக்க படை முகாம்

  • 0
  • 0

 

ஜனாதிபதி மைத்திரிபாலாவின் அனுமதியின்றி இலங்கையில் அமெரிக்க தூதரகம் முகாம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சுமத்தியுள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஜனாதிபதியின் அனுமதியின்றி அமெரிக்கா முகாம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலகத்தின் ஊடாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமது சொந்த நாட்டில் அமெரிக்காவின் முகாமை அமைக்க அனுமதியளித்து அதனால் ஏற்பட்ட விளைவை பனாமா சம்பவத்தின் ஊடாகவே நன்றாக உணர்ந்திருப்போம் எனக்குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் இராணுவம் இலங்கையில் முகாமிட்டால் பனாமாவில் ஏற்பட்ட  நிலைமைதான் ஏற்படும். இதனை அரசு ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கே அமெரிக்கா இராணுவ முகாம் ஒன்றினை அமைக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அது குறித்த விவாதங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போது அந்த விவாதங்கள் குறித்து அரசு கவனத்தில் கொள்ளும் என சபாநாயகர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழர் தேசத்தின் தலைநகராக அடையாளப்படுத்தப்பட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை நகரை கைப்பற்றுவதில் உலக நாடுகள் போட்டா போட்டி போட்டுவரும் நிலையில் திருகோணமலையில் தனது இராணுவ தளம் ஒன்றை அமைப்பதன் ஊடாக திருகோணமலையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இந்துசமுத்திர பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமெரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஊடாக தமிழர்களின் வடகிழக்கு தாயக பூமியில் அமெரிக்க கை வைத்துள்ளதுடன் தமிழர்களின் தாயக கோட்பாட்டை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் அமையுமா? என்ற கேள்விகள் ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்கம் பெற்றுள்ளது.

இதேநேரம் விடுதலைப்புலிகளை அழிக்கும் இறுதி யுத்தத்தில் அமெரிக்கா இலங்கையுடன் கைகொர்த்து செயற்பட்டதன் நோக்கம் திருகோணமலை துறைமுகமத்தை கைப்பற்றுவதற்கே என்பது தற்போது நடைபெறும் சம்பவங்கள் ஊடாக நிருபனமாகிவருகின்றது.

விடுதலைப்புலிகளின் கடல்படை அமெரிக்கா போன்ற நாடுகளின் பிராந்திய ஆதிக்கத்திற்கு தடையாக இருந்ததன் காரணமாகவே விடுதலைப்புலிகளை அழிக்க அமெரிக்க போன்ற நாடுகள் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளது என்பது தற்போது நிருபனமாகி உள்ளது.

Leave Comments

Comments (0)