மீண்டும் கட்டப்பட்ட மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர்!

/files/suvar-2020-11-16-13:32:01.jpg

மீண்டும் கட்டப்பட்ட மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர்!

  • 5
  • 0

அமெரிக்காவில் சூரியனை ஆய்வு செய்ய பார்க்கர் செயற்கை கோளை நாசா அனுப்புகிறது, சீனா செயற்கை நிலாவை உருவாக்க போகிறோம் என அறிவித்து அதற்கான திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, இந்தியாவில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதலை தடுக்க அரசு 144 தடையை அமல்படுத்ததியுள்ளது. இத்தகைய இழிவான நிலையில் தான் இந்தியாவும் தமிழகமும் உள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் 2 ஒரு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து தன் வீட்டை தந்தையை இழந்த பெண் சிறுமி எனக்கு நோட்டு புக்கு கொடுத்தா என் அம்மாவை காப்பாற்றுவேன், என் அப்பாதான் போயிட்டாரு என்று கண்ணீர் மல்க பேசிய காணொளி பார்க்கும் அனைவர் கண்களையும் கலங்க செய்தது. பொதுமக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்ட அந்த தீண்டாமைச்சுவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் டைம் டிராவல் பற்றியும், பிளாக் ஹோல் பற்றியும் ஆய்வுகள் நடக்கிறது. இப்போதுகூட சாதிய தீண்டாமை உள்ளதா? என பலர் நினைக்கலாம், கேட்கலாம் ஏன் சாதி தீண்டாமைச்சுவரே தமிழகத்தில் உள்ளது. ஏழு அடியில் இருந்தால்தான் அது சுற்றுசுவர் 17 அடிக்கு மேலே இருந்தால் அதை என்னவென்று சொல்ல? கோவை மேட்டுப்பாளையத்தில் நடூர் கிராமத்தில் சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளரான பெரும் பணக்காரர் அருகில் உள்ள ஏழை தலித் மக்களின் வீடுகளும் அவர்களது நடமாட்டமும் தன் கண்ணில் படக்கூடாது என்று தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரை 20 அடி உயரத்துக்கு உயர்த்தி கட்டியிருக்க, அதுவும் அந்த 20 அடி உயர கருங்கல் சுவர் கான்கிரீட் பில்லர்கள் இல்லாமல் எழுப்பப்பட்டிருக்கிறது. மழைக்காலத்தில் உடையும் தருவாயில் இருந்ததை பார்த்த அந்த மக்கள் இந்த சுவரால் எங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று அதன் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளனர். அவர் மிகவும் அலட்சியப்படுத்தி தன் வீட்டிலுள்ள நாய்களை விட்டு விரட்டி உள்ளார். அதன்பிறகு ஆட்சியரை சந்தித்து இந்த சுவர் இடிந்து விழுந்தால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்கள். இவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவர்களின் அலட்சியத்தால் அதிகாலை 5 மணியளவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏற்கனவே திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு இருபது அடி உயரமுள்ள தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து பலர் மரணம் அடைந்தார்கள். ஒருபுறம் இது தீண்டாமை சுவரே இல்லை என்றும் வெறும் சுற்றுச்சுவர் தான் என்றும் பொய் பரப்பினார்கள், கன மழையில் சுவர் இடிந்து 17 பேர் பலி என காவல்துறை மிக எளிதாக இதை கடக்க நினைத்தது, பதினேழுபேரின் இறப்பிற்கும் நீதி வேண்டும் என்று போராடிய தோழர் திரு வள்ளுவனை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக அடித்து இழுத்துச் சென்றது, இறந்த 17 உடல்களையும் காவல்துறையே வேகவேகமாக நள்ளிரவில் தீயிட்டுக் கொளுத்தி அடக்கம் செய்தது.


இப்படி நீதியின் குரல் பல விதங்களில் நெரிக்கப்பட்டு கொண்டே வந்தாலும் அங்கே தன் வாழ்வாதாரமான வீட்டை இழந்து, மகன் மகள் என தனது இரு பிள்ளைகளையும் இழந்த ஒரு தந்தை உயிரிழந்த மகன் மற்றும் மகளின் கண்களை தானம் செய்தார், இதுதான் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் மனநிலை. என்ன சொல்ல, இந்த பதினேழு கொலைகளுக்கு காரணமான ( என்ன கொலையா என்று நீங்கள் கேட்கலாம் இதுவும் கொலைதான் சாதியும் பொருளாதார ஆதிக்கமும் சேர்ந்து செய்த கொலை) சக்கரவர்த்தியின் மாளிகையின் உரிமையாளரான சிவசுப்பிரமணியனுக்கு தண்டனை கிடைக்கவில்லை? நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை? உயிரிழந்த அப்பாவிகள் குடும்பத்திற்கு 4 லட்சம் பணத்தைக் கொடுத்து அவர்களின் வாயை அடைத்து விட்டார்கள். இப்போது மறுபடியும் சுற்றுச்சுவரை கட்டியுள்ளார்கள் அதுவும் எப்படி தெரியுமா ஏழ்மையை ஒழிக்க ஏழைகளை எல்லாம் கொன்றுவிட வேண்டும் என்று முட்டாள்தனமான ஒரு வசனம் போல தீண்டாமையை ஒழிக்க தீண்டத்தகாதவர்களை கொன்று அவர்களின் வீட்டை இடித்து விட வேண்டும் என்பது போன்ற ஒரு கொடூரம் அங்கு அரங்கேறியுள்ளது. அங்கிருந்த தலித் வீடுகளை இடப்பெயர்த்தி வைத்துவிட்டு மீண்டும் அந்த சாதிச்சுவரை கட்டியுள்ளார்கள்.

தீண்டாமை சுவரும் தீண்டாமையும் அப்படியேதான் உள்ளது என்ன அதற்கு ஒரு 17 உயிர்கள் மட்டும் தான் பலி கொடுக்கப்பட்டது. மீண்டும் அந்த தீண்டாமை சுவர் இடிந்து விழலாம் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் தலித் குழந்தைகளின் உயிரையும் பறிக்கலாம்? சாதி சுவருக்கும் பல சாவுக்கும் காரணமானவர்கள் குற்றவாளி சிவசுப்பிரமணியன் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் இவர்கள் மட்டுமல்ல சாதியும் பணத்தின் திமிரும் தான்...

Leave Comments

Comments (0)