ஐ.நாவின் அழுத்தங்களால் எதுவும் செய்ய முடியாது- மகிந்த

/files/detail1.png

ஐ.நாவின் அழுத்தங்களால் எதுவும் செய்ய முடியாது- மகிந்த

  • 0
  • 0

ஐ.நாவின் தீர்மானம் மூலமோ அல்லது அழுத்தங்கள் ஊடாகவோ புதிய அரசியல் அமைப்பு உருவாக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் உள்ளடக்க வேண்டும் என்று தமிழர் தரப்புக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இலங்கை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்கும் என்று நம்பப்படும் கனடா,ஜேர்மன், பிரிட்டன், மசிடோனியா ஆகிய நாடுகளுடன்  இது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே, புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்சே தெரிவிக்கையில்,

இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் இரா. சம்பந்தன், சுமந்திரன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் இருப்பார்கள். உள்நாட்டில் நிறைவேற்ற முடியாதவற்றை ஐ.நா உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவியுடன் நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலத்தில் இருக்கும் புலி பயங்கரவாதிகள், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருடன் நேரடி தொடர்புகளையும் ரணில் தரப்புடன் மறைமுக தொடர்புகளையும் வைத்திருக்கின்றனர். இவர்களின் நோக்கங்கள் நிறைவேற தாமும் நாட்டு மக்களும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என மகிந்த தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)