சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை- இலங்கை மீது ஐநா குற்றச்சாட்டு

/files/detail1.png

சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை- இலங்கை மீது ஐநா குற்றச்சாட்டு

  • 0
  • 0

ஜெனிவாவில் இம்மாத   22 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வில், சபை கவனத்தை எடுக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை இருக்கும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை, நிகரகுவா, வெனிசுலா, குவாத்தமாலா, யேமன், சூடான், மியான்மர், தன்சானியா, உகாண்டா மற்றும் புர்கினா பாசோ மற்றும் சிம்பாவ்வே ஆகிய நாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்   அமர்வில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் சில முன்னேற்றங்களையே எட்டியுள்ளது என்றும் பொறுப்புக்கூறலில் மெதுவாகவே செயற்படுவதாகவும், சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதேவேளை மன்னாரில் புதைகுழியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் விவகாரத்தில் ஐ.நா, பகுப்பாய்வாளர்கள் அதனை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)