திருநங்கைகள் திரைப்பட விழா - விழுப்புரம்

/files/detail1.png

திருநங்கைகள் திரைப்பட விழா - விழுப்புரம்

  • 1
  • 0

எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோ மையத்தில் திருநங்கைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் தொடர்ச்சியாக சினிமாவை சமூக சினிமாவாக மாற்றும் பல்வேறு பணிகளை செய்துகொண்டிருக்கிறது. விழுப்புரத்தில் தலித் திரைப்பட விழாவை நடத்தியதன் தொடர்ச்சியாக தற்போது விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோ மையமான பிராக்சி மையத்தில் திருநங்கைகள் திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்திய அரசும், தமிழ் நாடு அரசும் தொடர்ச்சியாகத் திருநங்கைகளுக்கு பல்வேறு சட்டங்களின் வாயிலாகத் துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழ்நாட்டு அரசு திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்றே அழைக்க வேண்டும் என்கிற சட்டத்தையும் நிறைவேற்றியது. அரசு மட்டுமல்லாமல் சமூகத்திலும் திருநங்கைகள் குறித்த சரியான புரிதல் இல்லை. சக உயிராக, தோழமைகளாகப் பாவிக்காமல் அவர்களைத் தொடர்ந்து இழிநிலையில் வைத்திருக்கிறது சமூக கட்டமைப்பு. எல்லா வகையிலும் தொடர்ந்து ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் திருநங்கைகளுக்காகக் குரல் கொடுக்கவும், திருநங்கைகள் குறித்து சமூகத்தில் புரிதலை உருவாக்கவும் தொடர்ச்சியாகக் கலை சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளைத் தமிழ் ஸ்டுடியோ செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜனவரி 5ஆம் தேதி விழுப்புரத்தில் திருநங்கைகள் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் திரண்டு வாருங்கள்.

alt text

காலை 10:00 மணிக்கு: அறிமுக விழா

காலை 10.30 மணிக்கு: பேரன்பு திரைப்படம் திரையிடல் (2h 28m)
இயக்கம்: ராம் | 147 நிமிடங்கள்

மதியம் 01:00 மணிக்கு: உணவு இடைவேளை

மதியம் 01:30 மணிக்கு: Boys Don't Cry திரைப்படம் திரையிடல்
இயக்கம்: கிம்பெர்லி பியர்ஸ் | 116 நிமிடங்கள்

மதியம் 03:30 மணிக்கு: சிகை திரைப்படம் திரையிடல்
இயக்கம்: ஜெகதீசன் சுபு | 102 நிமிடங்கள்

மாலை 05:15 மணிக்கு: தேநீர் இடைவேளை

மாலை 05:30 மணிக்கு: திருநங்கைகள் திரைப்பட தொடக்க விழா

சிறப்பு அழைப்பாளர்கள்:

சம்யுக்தா விஜயன், தொழில்முனைவோர் & தொழில்நுட்ப வல்லுநர்

தோழர் & கள செயற்பாட்டாளர் கிரேஸ் பானு

மாலை 06:30 மணிக்கு: உண்மையறிவாயோ வண்ண மலரே
இயக்கம்: தீனா எம் ராகவன் | 16 நிமிடங்கள்

மாலை 06:50 மணிக்கு: The Danish Girl திரைப்படம் திரையிடல்
இயக்கம்: டாம் ஹூப்பர் | 119 நிமிடங்கள்

அனுமதி இலவசம், அனைவரும் வருக...

ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ, பிராக்ஸிஸ் படிப்பகம் மற்றும் மாலைப்பொழுதினிலே வாசகர் வட்டம்.

இடம்: பிராக்ஸிஸ் படிப்பகம், எல்லிசத்திரம் சாலை, VGP நகர், வழுதரெட்டி, புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்-605602

தொடர்புக்கு: 98406 44916 | 9952534083
 

Leave Comments

Comments (0)