அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,11:05:32 PM
-தமிழில்V. கோபி
அழகான தனித்துவம் வாய்ந்த இடங்கள் உங்களை கிளர்ச்சியூட்டுமா? உங்களது ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ள இடத்திற்குச் செல்வீர்களா அல்லது அதே வழக்கமான உணவகத்திற்கு செல்வீர்களா? உங்களுக்காகவே வழக்கத்திற்கு மாறான, மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பல உணவகங்கள் சென்னையில் உள்ளன.
அப்படியான சிறந்த பத்து உணவகங்களின் பட்டியல் இதோ…
KAIDI KITCHEN
முகவரி: 20/3, பிஷப் வாலர்ஸ் அவென்யு, மைலாப்பூர்இருண்ட சிறை அறைகளில் உணவு உண்டால் எப்படி இருக்கும் என யாராவது கற்பனை செய்துள்ளீர்களா? அப்படியானவர்களின் கற்பனையை நிறைவேற்றவே இருக்கிறது “கைதி கிச்சன்”.
HOUSE NO: 22
முகவரி: 1/38, கத்திபாரா ஜங்ஷன் அருகில், கிண்டி
பழமை வாய்ந்த பங்களாவை கபேவாக மாற்றியுள்ளார்கள். இந்த உணவகத்தில் குறைவான அலங்காரமே இருந்தாலும் நம் மனதை கவரும் வகையில் உள்ளது. ஒரு இனிமையான நாளில் தாழ்வாரத்தில் அமர்ந்து உணவு அருந்துவது உங்களுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும்.சிறப்பு உணவுகள்: பீட்ஸா வகைகள்
WINTER PALACE:
முகவரி: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கா சாலை, ஆழ்வார்பேட்டை
ரஷ்யாவில் உள்ள WINTER PALACE யை பின்பற்றி அதுபோலவே இங்கும் வடிவமைத்துள்ளனர். வெள்ளை மற்றும் நீல நிற வண்ணம் பூசப்பட்டுள்ள இந்த கபேயின் ரஷ்ய உணவு வகைகளான ரஷ்ய பிரியானி மற்றும் மாட்டிறைச்சி உணவுகள் சிறப்பு வாய்ந்தது.
L’AMANDIER:
முகவரி: 57, சேமியர்ஸ் சாலை, RA புரம்
பளீர் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் இந்த உணவகம் உங்களுக்கு ஐரோப்பியாவை நியாபகப்படுத்தும் இந்த கபே ஓய்வாக அமர்ந்து உணவருந்துவதற்கு ஏற்ற இடம். இங்கு காலை உணவு மிகப் பிரபலம்.
HAUNTED:
முகவரி: 273, 13/71. பிளாக் ,இரண்டாவது மெயின் சாலை, அண்ணா நகர் (கிழக்கு)
உங்களுக்கு தைரியம் கொஞ்சம் கம்மியா? இது உங்களுக்கான உணவகம் இல்லை. உணவகத்திற்குள்ளே செல்பவர்களை நடுங்க வைத்து உங்கள் முதுகு தண்டை சில்லிட வைக்கும். ஒமன் நாட்டு உணவுகளை விரும்புபவர்களுக்கு சிறந்த உணவகம்.
THAT MADRAS PLACE:
முகவரி: 34/29, வது மெயின் சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையார்
சுவர் முழுதும் கிறுக்கலாக வாசகங்கள் எழுதி வைத்துள்ள இந்த உணவகத்தில் மெனுகார்டுகள் சிறிய பலகையில் உள்ளது. விசித்திரமான அதே சமயத்தில் அழகான உணவகம்.
சிறப்பு உணவுகள்: Nutella Cheesecake, Theobroma
CHOCOHOLICK:
முகவரி: சென்னையில் பல இடங்களில் உள்ளது
சாக்லேட் விரும்பிகளுக்கு சொர்க்கம் போன்றது இந்த உணவகம். இங்குள்ள நாற்காலிகளும், உணவு மேசைகளும் உணவகத்திற்கு வருபவர்களை மேலும் கிறங்கடிக்கும்.
சிறப்பு உணவுகள்: Waffles, Chocolate Pizzas, Crepes
MADHATTER’S TEA GARDEN:
முகவரி: 14, இரண்டாவது மெயின் சாலை, ஹேரிங்டன் சாலை, சேத்துபட்டு
அலீஸ் வொண்டர்லேண்டில் உள்ள தோட்டம் நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும். ஆம், சென்னையில் இதுபோல் உணவகம் உள்ளது. நீங்கள் இந்த உணவகத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகத்தை வாசித்து கொண்டே தேனீர் அருந்தலாம். மாலை நேர தேனீர் அருந்த அருமையான இடம்.
THE MOON AND SIXPENCE:
முகவரி: 19, HOTEL HABLIS, ஜிடி சாலை, கிண்டி
ஐரிஷ் இசையும் மதுவும் உங்களது விருப்பமா? இருக்கவே இருக்கிறது உங்களுக்காக சென்னையில் THE MOON AND SIXPENCE. இங்கு எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு குறைவில்லை. உங்கள் நண்பர்களோடு சென்று பீர் அருந்துவதற்கு உகந்த இடம்.
CICLO CAFÉ:
முகவரி: 33/47, காந்தி மண்டபம், சித்ரா நகர், கோட்டூர்புரம்
சைக்கிளை ‘கருப்பொருளாக’ கொண்டு அதன்பேரில் அமைந்துள்ள உணவகம் சென்னையில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பவில்லை என்றால், நீங்கள் செல்ல வேண்டியது கோட்டூர்புரத்தில் உள்ள சைக்ளோ கபேக்கு. சுவரிலும், நாற்காலிகளிலும் சைக்கிள் அழகுணர்ச்சியோடு தொங்குவதை இங்கு பார்க்கலாம்.
சிறப்பு உணவுகள்: Salted Caramel Cheesecake
இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு உணவகமும் தனித்துவம் மிக்கது மட்டுமில்லாமல் உங்களுக்கு வெவ்வேறு அனுபவத்தை தரக்கூடியது. நம் சென்னை நகரத்தில் இதுபோல் கூற இன்னும் நிறைய உள்ளது. சென்னையில் வசிப்பவராக இருந்தால் நிச்சியம் இதுபோன்ற இடத்தை தவற விட்டு விடாதீர்கள்.
நன்றி https://www.dineout.co.in/blog/2016/11/02/best-theme-based-restaurants-in-chennai/
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments