காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

/files/detail1.png

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

  • 0
  • 0

இலங்கை அரச படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு கோரியும் மன்னார் மனிதப்புதைகுழி விவகாரத்தில் விரைவான நீதி கோரியும் நாளை மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தினரால் இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை 30ம் திகதி காலை 10.00 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களால் எட்டு மாவட்ட உறவுகளையும் ஒன்றிணைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டமும் வவுனியா மாவட்ட செயலகம் வரையான கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் நடத்தப்படவுள்ளது. 

இதுவரை காலமும் தனித்து போராடிய உறவுகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் தமது போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை வடக்கு-கிழக்கைச் சேர்ந்த சகல மக்களிடமும், பொது சிவில் சமூக அமைப்புக்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும், அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடமும் கோரி நிற்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோற்க்கான நீதிக்காக-தீர்விற்காக ஒன்றிணைவோம் என்ற  தொணிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)