இன்று ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுநாளும், நீதிக்கான போராட்டமும் 

/files/detail1.png

இன்று ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுநாளும், நீதிக்கான போராட்டமும் 

  • 0
  • 0

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பானத்தில் அனுசரிக்கப்பட்டது.

alt text

இந்த நிகழ்வின் போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிகிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

alt text

இந்த போராட்டத்தை வடக்கில் உள்ள ஊடக அமைப்புக்கள் கலந்துகொண்டு முன்னெடுத்துள்ளனர்.

alt text

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் ஊடகங்களின் மீது மிலேச்சத்தனமாக அடக்குமுறைகளை இலங்கை அரசு கையாண்டு வந்தது. தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இனம்கடந்து வெளிக்கொணர்ந்த சகல ஊடகவியலாளர்களும் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர். சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு போர் காலத்தில் 40க்கும் மேலான ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டு உள்ளனர்.

alt text

இதுவரையில் இந்தப்படுகொலைகள் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. எனவே இந்த கொலைகளுக்கு உரிய விசாரணை நடத்தி   அவர்களின் உறவினர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் இந்த கோரிக்கைகளை கண்டும் கண்டுகொள்ளாமலும் இருந்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

alt text

Leave Comments

Comments (0)