ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திய காவி கும்பல்

/files/detail1.png

ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திய காவி கும்பல்

  • 0
  • 0

 

டெல்லியில், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது மூன்று பேர் கொண்ட காவி கும்பல்.

டெல்லி ரோகிணி செக்டார் பகுதியில் உள்ள மதரசாவில் திருக்குரான் பயிற்சி அளிப்பவர் மதபோதகர் மவுலானா மொமின். இவர் நேற்று (ஜுன் 21) மாலை சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது காரில்வந்த மூன்று பேர் கொண்ட காவி கும்பல் மதபோதகர் மொமினை வழிமறித்து நலம் விசாரித்துள்ளனர். அதற்கு மொமின், 'அல்லாவின் கருணையால் நலமுடன் இருப்பதாகக்' கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அந்த கும்பல் மொமினை ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடக் கூறி வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மொமின் நான் இஸ்லாமியர் என்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருந்துள்ளனர். மொமின் மறுத்ததால் கண்மூடித்தனமாக மொமினை தாக்கியுள்ளது அந்த கும்பல். இதில் மொமின் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இது தொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமாரவை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர் காவல்துறையினர்.

Leave Comments

Comments (0)