கீழ்வெண்மணி படுகொலை: மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

/files/detail1.png

கீழ்வெண்மணி படுகொலை: மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

  • 1
  • 0


சாதியினை ஒழிக்காமல், வர்க்கப் பிரிவினை களைந்திடாமல் சமூக மாற்றம் இல்லை என்பதை எடுத்துக் காட்டிய மிகப் பெரும் கருப்பு நாளாக டிசம்பர் 25 என்ற நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிற்கிறது என்று மே 17 இயக்கத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போதைய தஞ்சை மாவட்டம் (தற்போது நாகை மாவட்டம்) கீழ்வெண்மணியில் பொதுவுடைமை இயக்கத்தினரின் துணையோடு கூலி உயர்வுக் கேட்டுப் போராடிய விவசாயத் தொழிலாளர்களான ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து கோபாலகிருஷ்ண நாயுடு என்கிற பண்ணையாரின் தலைமையிலான சாதிவெறி கும்பல் நடத்திய கொடூரமான தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 44 பேர் தீயில் கருகி சாம்பலாகி இன்றுடன் 51 ஆண்டுகள் ஆகின்றன.

இதுகுறித்து மே 17 இயக்கத் தோழர்கள், “கீழ்வெண்மணி படுகொலையின் 51வது ஆண்டு நினைவு நாள் இன்று. கீழ்வெண்மணி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம். கூலி உயர்வு கேட்டதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ் வெண்மணி கிராமத்தில் 44 ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை, சாதிய பண்ணையார் கும்பல் கோபாலகிருஷ்ண நாயுடு என்பவன் தலைமையில், எரித்து படுகொலை செய்தது.

சாதியினை ஒழிக்காமல், வர்க்கப் பிரிவினை களைந்திடாமல் சமூக மாற்றம் இல்லை என்பதை எடுத்துக் காட்டிய மிகப் பெரும் கருப்பு நாளாக டிசம்பர் 25 என்ற நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிற்கிறது.

சாதிய மேலாண்மையையும், வர்க்க முரண்பாட்டையும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாசிச பாசக தனக்குச் சாதகமாகவும் எளிய உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தும் சூழலில் இதனைக் களைந்து பாசிச வாதிகளை தனிமைப்படுத்த ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும். கீழ்வெண்மணி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)