தூத்துக்குடி மண்ணில் புதைந்த போராளிகளுக்கு வீரவணக்கம்

/files/detail1.png

தூத்துக்குடி மண்ணில் புதைந்த போராளிகளுக்கு வீரவணக்கம்

  • 0
  • 0

 

அனில் அகர்வாலின் எலும்புத் துண்டுகளுக்காக 13 பேரை சுட்டுக் கொன்று போராடும் தமிழர்களிடம் "பன்னாட்டுக் கம்பெனிய எதிர்க்க துணிந்தா இதுதான் கதி" என்று எச்சரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி அன்று விடுத்தார் என்று காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “துப்பாக்கிகளைக் கொண்டு மக்கள் போராட்டங்களை ஒரு நாளும் ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாறு. வரலாறு தெரியாத இந்த கூட்டத்திற்கு இது எப்படிப் புரியும்?. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அகந்தையில் பார்ப்பன கார்ப்பரேட் கைக்கூலி பாஜக அரசும் அதன் எடுபிடியான அதிமுக அரசும் ஆடுகின்றன.

தூத்துக்குடியில் அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? அரசு பயங்கரவாதம்தான் சாதாரண மனிதனையும் தீவிரவாதியாக மாற்றும். ஏன் பயங்கரவாதியாகவும் ஆக்கும். 

நம்மை முட்டாள் கூட்டமாக எண்ணி நமக்குச் சொந்தமான மண்ணையும், நீரையும், காற்றையும், காடுகளையும், மலைகளையும் மற்றும் அனைத்து வளங்களையும் கொள்ளையடிக்க அரசு தொடர்ந்து முற்பட்டால் ஆயுதம் தாங்கிய புரட்சிகரமான மக்கள் போராட்டமே தீர்வாகும்.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதுதான் நடைபெறும். நடப்பது ஒரு ஜனநாயக அரசு என்பதைச் சிறிதளவேனும் நம்புவதற்கு இருப்பது தேர்தல் மட்டுமே. 

ஆனால் அங்கும், இங்கும் நூற்றுக்கணக்கில் கடத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தல்கூட ஒரு கண்துடைப்புதானோ என்ற சந்தேகத்தை நம்முள் ஆழமாக ஏற்படுத்தியுள்ளது.

வேதாந்தா முதலாளி அனில் அகர்வால் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டோடு நிற்கவில்லை. நம்மை எல்லாம் தேர்தல் திருவிழாவில் மூழ்கடித்துவிட்டு 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோன்றுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளான் என்கிறார்கள். 

Code of conduct அமுலில் உள்ள தேர்தல் காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் பெற முடியாமல் மக்கள் அவதிப்படுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இந்த விதிமுறைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பொருந்தாது போலும். எத்தகைய அநீதி இது.

இன்று நாசக்கார திட்டங்கள் கால் பதிக்காத கிராமம் இல்லை. தமிழகமே வேட்டைக் காடாக மாறிவிட்ட சூழ்நிலையில், எங்கள் ஊரில் எந்த பிரச்னையும் இல்லை என்று யாரும் ஒதுங்க முடியாத அவல நிலையில்தான் உள்ளோம்.

எனவே, வெறுமனே வாயில் பேசுவதையும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையுமே மாபெரும் பணி செய்து விட்டதாகக் கருதி ஓய்வு எடுப்பதை விடுத்து விட்டு களத்தில் இறங்குவோம் போராளிகளாக” என்று குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave Comments

Comments (0)