இன்னமும் புலி பூச்சாண்டி காட்டும் இலங்கை அரசு

/files/detail1.png

இன்னமும் புலி பூச்சாண்டி காட்டும் இலங்கை அரசு

  • 0
  • 0

 

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர், கடந்த 2009ம் ஆண்டு முடிவுறுத்தப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைகின்ற போதும் இன்றும் தமிழர் தாயகத்தில் இராணுவம் வெளியேற்றப்படாமல் இருப்பதுடன் தினம் ஒரு புது புரளியைப்பரப்ப விட்டு தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் மக்களை இலங்கை அரச படைகள் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், வவுனியா பாலமோட்டை குஞ்சிக்குளம் பகுதியில் வீடொன்றுக்கு திடீரென 3 நபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும் ஆனால் வீட்டு அங்கத்தவா்கள் மறுப்புத் தெருவித்த வேளையில், பலாத்காரமாக உணவினை எடுத்து உட்கொண்டு, அங்குள்ள கிணற்றினில் நீராடி விட்டு சென்றுள்ளனா் என்று தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி எங்கிலும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் பதற்ற சூழ்நிலை நிலவியுள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது எவரேனும் கைது செய்யப்பட்டனரா என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

தமிழ் மக்களை ஒருவித பதட்டத்துடன் வைத்திருப்பதற்கும் அரச படையினரை தமிழர் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றாமல் நிலைகொள்ளச் செய்வதற்குமே இவ்வாறான புலிப்பூச்சாண்டி காட்டப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது.

Leave Comments

Comments (0)