தொடர்கதையாகிவரும் தலித் படுகொலைகள்-  ஆணவ சாதியினரின் அராஜகம்

/files/detail1.png

தொடர்கதையாகிவரும் தலித் படுகொலைகள்-  ஆணவ சாதியினரின் அராஜகம்

  • 0
  • 0

 

உத்தரபிரதேச மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பிஜேந்தர் பால் (40) ஆணவ சாதியினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜினோர் மாவட்டத்தில் உள்ளது லால்புர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிஜேந்தர் பால். இவர் கடந்த ஜுன் 28ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தினை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த உதவி  காவல் ஆய்வாளர் ராம் தாயல் கங்காவார், பிஜேந்தர் பாலின் இருசக்கர வாகனத்தையும் பரிசோதித்தார். ஆவணங்கள் எதுவும் வண்டியில் இல்லை. இதனையடுத்து `ஆவணங்கள் வீட்டில் இருக்கிறது. நான் எடுத்துவருகிறேன் என்று கூறிவிட்டு பிஜேந்தர் பால் வீட்டிற்கு சென்றுள்ளார். 

ஆனால், பிஜேந்தர் பால் பிணமாக அவரது வீட்டிற்குச் செல்லும் வழியில் இறந்துகிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிஜேந்தர் பாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்ததில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பிஜேந்தர் பாலை ஆணவ சாதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கிய காட்சி பதிவாகியிருந்தது. இதில் படுகாயமடைந்த  பிஜேந்தர் பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் சிலரை கைதும் செய்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி பிடித்ததிலிருந்து சிறுபான்மையினரும் தலித்துகளும் நசுக்கப்பட்டுவருவது தொடர்கதையாகி வருகிறது.
 

Leave Comments

Comments (0)