பொய் கூறி ஆஸ்திரேலியாவிற்குள் அகதிகள் வருவதாக குற்றச்சாட்டு

/files/detail1.png

பொய் கூறி ஆஸ்திரேலியாவிற்குள் அகதிகள் வருவதாக குற்றச்சாட்டு

  • 0
  • 0

 

மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளில் பெரும்பாலானோருக்கு எந்த நோயும் இல்லை என அந்நாட்டுத்தகவல்கள் கூறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சட்டவிரோத கடல் வழிப்பயணங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்குள் தஞ்சம் கோரி வரும் பன்னாட்டு அகதிகளை மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் அந்நாடு தடுத்து வைத்துள்ளது. மேலும் அகதிகள் குறித்து கடுமையான விதிமுறைகளையும் ஆஸ்திரேலியா பின் பற்றி வருகின்றது.

இந்நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ தேவைகளுக்காக அகதிகள் ஆஸ்மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளில் பெரும்பாலானோருக்கு எந்த நோயும் இல்லை என அந்நாட்டுத்தகவல்கள் கூறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ரேலியாவிற்குள் அழைத்துவரப்படுகின்றனர். ஆனால் இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள், தமது வதிவிட உரிமைக்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே தமக்கு நோயிருப்பதுபோன்று நடித்து  வருகின்றனர் என ஆஸ்ரேலிய  அரச வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.

மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களை காண்பித்து இதுவரை சுமார் 900 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் ஆஸ்திரேலியாவின் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும் மனுஸ் - நவுறு தீவுகளுக்கு போகாமல் ஆஸ்திரேலியாவிலேயே உள்ளார்கள் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட அகதிகளின் வழக்குகளை தனித்தனியாக விசாரிப்பதற்கு பிரதமர் Scott Morrison-க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதையடுத்து, சுயாதீன விசாரணைக்குழு ஒன்று வரும் வாரங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave Comments

Comments (0)