தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதிவெறி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- AIYF

/files/detail1.png

தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதிவெறி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- AIYF

  • 0
  • 0

தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதிவெறி கும்பல்கள் மற்றும் கூலிப்படையினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) கோரிக்கை விடுத்துள்ளது.

”இந்நிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் சாதிவெறிக்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்.

இந்நிலையில் அவரும் அவரது தாயாரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வேளையில் சாதிவெறி சமூக விரோத கும்பல் அவர்களை வழிமறித்து மிரட்டியுள்ளனர்.

alt text

இதனால் அச்சமுற்ற அசோக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். முதல் தகவல் அறிக்கையை மட்டும் பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சாதிவெறி கும்பல்கள் கூலிப்படையின் உதவியுடன் தோழர் அசோக் அவர்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் பேரதிர்ச்சியை உருவாக்குகிறது. இதற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF)வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாதி வெறியாட்டம் போடும் கும்பல்கள் சுதந்திரமாக நடமாடி வரும் சூழலில் சாதிவெறிக்கு எதிராகப் போராடும் சமூக முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆகவே தமிழக அரசு தோழர் அசோக் அவர்களைப் படுகொலை செய்த சாதிவெறி கும்பல்கள் மற்றும் கூலிப்படையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுக்கொள்ளாமல் சுதந்திரமாக உலவ விட்ட காவல் துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் சாதிவெறியைத் தூண்டிவிடும் சமூக விரோத கும்பல்கள் சாதி சங்கங்கள் உள்ளிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)