தாய்லாந்து அரசின்   புதிய திட்டம்

/files/detail1.png

தாய்லாந்து அரசின்   புதிய திட்டம்

  • 0
  • 0

தஞ்சக்கோரிக்கையாளர்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் நடைமுறை நிறுத்தப்படும் என தாய்லாந்து அறிவித்துள்ளது.

ஐ.நா. அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத தாய்லாந்து, இனி தஞ்சக்கோரிக்கையாளர்கள் விவகாரத்தில் சர்வதேச விதிமுறைகளை பின்பற்ற உள்ளதாக  தாய்லாந்து குடிவரவுத்துறையின் தலைவர சுராசடே ஹக்பார்ன்  உறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில், சவுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான ரஹாப் முகமது அல்-குன்ன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய பயணிக்க இருந்த நிலையில், தாய்லாந்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், கனடா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

இந்த விவகாரத்தில் தாய்லாந்து நடந்து கொண்ட விதத்தின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

இந்நிலையில், தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்னையில் ‘வலுக்கட்டாயமான நாடுகடத்தல் கிடையாது’ என்ற முடிவினை தாய்லாந்து எடுத்துள்ளது.

தாய்லாந்து குடிவரவுத்துறையின் தலைவராக சுராசடே ஹக்பார்ன் நியமிக்கப்பட்டது முதல், சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை என பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிணை வழங்கப்படும்  தலைவர சுராசடே ஹக்பார்ன்  உறுதி அளித்துள்ளார்.

இதே போல், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து அரசியல் அகதி அந்தஸ்து பெற்ற பஹ்ரைன் கால்பந்தாட்ட வீரர் அல் அரைபியை கடந்த நவம்பர் 2018ல் கைது செய்தது தொடர்பாக குடிவரத்துறை தலைவர் சுராசடே ஹக்பார்னிடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, அந்த வழக்கு வித்தியாசமானது, அவர் நீதிமன்றத்தில் முறையிடலாம் எனக் கூறியுள்ளார். இண்டர்போல் விடுத்த சிவப்பு எச்சரிக்கை அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாக சொல்லி வந்த தாய்லாந்து, இண்டர்போலின் எச்சரிக்கை அகதிகளை கைது செய்ய சொல்லாது என்ற பின்னரும் பஹ்ரைனின் கோரிக்கைக்கு இணங்க அவரை நாடுகடத்த தாய்லாந்து முயன்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

Leave Comments

Comments (0)