ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்

/files/detail1.png

ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்

  • 0
  • 0

 

தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5
வரை ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்வானது இரவு 9 மணி வரை நடக்கும். பல்வேறு பிரபலங்கள் அடுத்தடுத்து பேசுவார்கள். எனவே 2 மணிக்கு வரும் நண்பர்கள் முழு நிகழ்விலும் பங்கேற்க வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இந்த வாரக் கலந்துரையாடலில் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, புனே திரைப்படக்கல்லூரி மாணவரான ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ஒளிப்பதிவுத் தொடர்பான லென்ஸ், லைட்டிங்ஸ், கேமிரா கோணங்கள், ஷாட் டிவிஷன்ஸ் ஆகியனவற்றைப் பற்றி தொழில்நுட்ப வல்லுனர்கள் அவருடன் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது.

சினிமாவைக் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உதவி இயக்குனர்களுக்கும், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கும் மற்றும் உதவி தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பயன்படும் வகையில் இக்கலந்துரையாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் அனுமதி இலவசம். இக்கலந்துரையாடலில் பங்குகொள்ள விரும்பும் நபர்கள் கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு 9 மணி வரை முழு நிகழ்விலும் இருக்க இயலும் நண்பர்கள் முன்பதிவு செய்யுங்கள்.

முன்பதிவு செய்ய : 9840644916 , 044 48655 405

இடம்: தி.நகர், சென்னை. (முழு முகவரி பின் அறிவிக்கப்படும்)

Leave Comments

Comments (0)