சாதி பெயரை குறிபிட்டு திட்டிய ஆசிரியர்: தற்கொலைக்கு முயன்ற மாணவி

/files/detail1.png

சாதி பெயரை குறிபிட்டு திட்டிய ஆசிரியர்: தற்கொலைக்கு முயன்ற மாணவி

  • 0
  • 0

 

தஞ்சை மாவட்டத்தில், கல்லூரி மாணவியைப் பேராசிரியர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியதால், அந்த மாணவி வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசினர் ஆடவர் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்த கல்லூரியில் ஆலமன் குறிச்சியைச் சேர்ந்த கெளசல்யா (23) என்பவர் இளமுனைவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவருடைய ஆய்வு வழிகாட்டியாகப் பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவர் இருந்து வருகிறார். மாணவி கௌசல்யா தனது ஆய்வுக் கட்டுரையைப் பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் சமர்ப்பித்தபோது, அந்த ஆய்வுக் கட்டுரையைப் பேராசிரியர் ஏற்றுக்கொள்ளாமல் மாணவியை அலைக்கழித்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்ட கௌசல்யாவை ரவிச்சந்திரன் சாதிப் பெயரை குறிப்பிட்டு இழிவாகப் பேசியுள்ளார். இதில் வேதனையடைந்த மாணவி கல்லூரியிலிருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைதொடர்ந்து மாணவி மயங்கிவிழுந்தார்.  சக மாணவிகள் கௌசல்யாவைக் கும்பகோணம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் குறித்துக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave Comments

Comments (0)