பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்

/files/detail1.png

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்

  • 0
  • 0

 
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையின் இராணுவ உயர் அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு  இலங்கையின் சுதந்திர தின  விழா பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன் போது   போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டது. 

இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் பிரித்தானிய நீதிமன்றத்தினால் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நீதி மன்றத்தின் இந்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசு  தனது கண்டனத்தை துாரகம் ஊடாக வெளிப்படுத்தியிருந்த நிலையில், பிரிகேடியர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதென இலங்கை படைத்தரப்பும் கோரிக்கை  விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து அரசியல் குறுக்கீடு, அழுத்தம் காரணமாக பிரிகேடியருக்கு வழங்கப்பட்ட பிடியாணையைத் திரும்பப் பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை திரும்பப்பெறக்கூடாதென வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு முன் போராட்டம்  ஒன்றை நடத்தியுள்ளனர்.

 

Leave Comments

Comments (0)